கள்ளுக்கடையின் அவசியமும் அதன் அரசியலும்...


கள்ளுக்கடை திறப்பதால் உண்டாகும் பலன்கள்..!

நம் நாட்டில் மது அருந்தும் பழக்கம் பெரும்பாலும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கே அதிகம் உள்ளதாக ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. கட்டிட வேலை செய்பவர்,தச்சு வேலை செய்பவர்,சுமை தூக்குபவர், விவசாய வேலை செய்பவர்,சாக்கடை சுத்தம் செய்பவர் இப்படி நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் அடிப்படை தொழிலாளர்களே அதிகம் மது அருந்துகின்றனர்.

லட்சகணக்கான தென்னை,மற்றும் பனை மரங்களை கொண்ட வளமான பூமிநம் தமிழகம். கள் இயற்கை அளித்த கெடுதல் குறைந்த போதை பானம்.காலங்காலமாக போதையை விரும்புபவர்களுக்கு கள் ஒரு வரப்பிரசாதம்.கள்ளுக்கடையை திறப்பதால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறுவார்கள். தென்னை மரத்திலிருந்து கள் இறக்குவதால் தேங்காய் உற்பத்தி சற்று குறையும் அதனால் தேவை அதிகரித்து விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும்.


கள் -டாஸ் மார்க் ஒரு பொருளாதார ஒப்பீடு...



ஒரு நாளைக்கு ஒரு குவாட்டர் அடிப்பவருக்கு ஆகும் செலவினை பார்ப்போம் ஒரு குவாட்டர் 80 ரூபாய் என வைத்து கொண்டால், சைடு டிஷ் செலவு 10 ரூபாய் மொத்தம் 90 ரூபாய் ஆகிறது .

ஒரு குவாட்டருக்கு உண்டான போதையை 1 1/2 முதல் 2 லிட்டர் கள் கொடுத்து விடும்.

2 லிட்டர் கள் (லிட்டர் 15 ரூபாய் எனில்) 30 ரூபாய் ஆகிறது சைடு டிஷ் 10 ரூபாய் என்று வைத்து கொண்டால் கூட 40 ரூபாயில் மேட்டர் முடிந்து விடுகிறது.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு குவாட்டர் அடிப்பவர் கள்ளுக்கு மாறினால் ஒரு நாளில் அவருக்கு மிச்சப்படும் தொகை 90-40= 50

ஒரு நாளில் ஐம்பது ரூபாய் மிச்ச படுவதோடு உடல்நலமும் காக்க படுகிறது. ஒரு சராசரியான தொழிலாளியின் வீட்டுக்கு ஐம்பத்து ரூபாய் கூடுதலாக சென்றால் அந்த குடும்பம் கண்டிப்பாக பலனடையும்.
அது மட்டும் இல்லாமல் கிராம புறங்கள் வளர்ச்சி அடையும், பலருக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத்தரும்.

இப்படி எல்லா வகையிலும் நன்மை தருகிற கள்ளுக்கடையை திறக்க அரசு ஏன் மறுக்கிறது????

ஒரே ஒரு காரணம் தான் மதுபான விற்பனை (டாஸ் மார்க்) மூலம் அரசுக்கு கிடைக்கும்.!
வருமானம்.! வருமானம்..!! வருமானம்...!!!

மதுபானம் விற்று அரசு கோடிகணக்கில் வருமானம் பார்க்கிறது. அல்லது மதுபானம் விற்று அரசு தன் பிழைப்பை ஓட்டுகிறது.

தன் நாட்டு மக்கள் குடித்து குட்டிசுவரானால் பரவாயில்லை ..!அவன் குடும்பம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை..! தனக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்து விட கூடாது இதுதான் அரசின் நிலைப்பாடு..!

கள்ளுக்கடையை திறந்து விட்டால் அரசின் மதுபான வியாபாரத்தில் மண் விழுந்து விடும் அதனால் தான் அரசு கள்ளுக்கடையை திறக்க மறுக்கிறது.


கள்ளுக்கடையை திறக்காததற்கு அரசு வேறு வகையில் காரணம் சொல்லி சப்பை கட்டு கட்டலாம். ஆனால்? பக்கத்து மாநிலங்களான ஆந்திரா,கேரளா
பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கள்ளுக்கடை திறக்கபட்டுதான் உள்ளது.

லாட்டரி ஒழிப்பும் கடை திறப்பும்

கடந்த ஆட்சியில் லாட்டரி ஒழிக்கப்பட்டது அதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது அதனை சரிகட்டவே அரசு மதுபான வியாபாரத்தில்நேரடியாக இறங்கியது. இந்த அரசும் அதயே தொடர்கிறது.அதனால் தான் அரசின் மதுபான வியாபாரத்துக்கு பங்கம் வரும் எந்த செயலையும் செய்ய அரசு தயாரில்லை..! எப்படி பார்த்தாலும் அடிப்படை ஏழை மக்களின் ரத்தமே உறிஞ்சப்படுகிறது..!


இப்படி பாரம்பரியம் மிக்க இயற்கை தரும், கெடுதல் இல்லாத கள்ளை நிராகரித்துவிட்டு, வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு கெடுதல் தரும் மதுபானத்தை விற்பனை செய்கிறதே இந்த அரசு..!

இது நியாயமா...!!!!

>