தொட்டால் தொடரும்.....! படம் பார்த்த அனுபவம்...!!!

 தனது விமர்சனம் மூலம்...பல படங்களை பார்க்கத் தூண்டியவர்...!  அதே  விமர்சனம் மூலம்  பல படங்களை பார்க்க விடாமலும் செய்தவர் இந்த படத்தின் இயக்குனர் கேபிள் சங்கர்...!

இவரால்  விமர்சிக்கப்பட்டவர்கள் இவரை விமர்சிக்க வரிந்து கட்டிகொண்டுவரலாம்...!  ஆனால் அப்படி  வருபவர்களை  ஒன் ஸ்டெப் பேக்  என  தனது இயக்கத்தின் மூலம் சொல்லி இருக்கின்றார் இயக்குனர்...! படத்தின் கதையை பல விமர்சனங்களில் படித்து இருக்கலாம் அதனால் பிடித்த இடங்கள்  மட்டும்...!!!

நாயகனும் நாயகியும் போனில் பேசிகொள்வது...அழகு...!  ஹேய்  சொல்லுப்பா...! இல்லைடா..!  என சென்னைத்தமிழில் பேசிக்கொள்ளாமல்...இல்லங்க...  சொல்லுங்க  என நிறைந்த  தமிழில் பேசிகொள்வது....வயலும்..வயல் சார்ந்த இடத்தில் பயணிப்பது போல இதமாக இருக்கின்றது....!

 நாயகனின் நண்பன் பேசும்  நக்கல் பஞ்ச் களுக்கு   இயல்பாகவே  சிரிப்புவருகின்றது...!!  உதாரணம்..... புரட்சிகனல்  என்ற பத்திரிக்கை அலுவலகத்தில்.....

/// புரட்சிகனல் ந்னு பேரு வைச்சுக்கிட்டு  உள்ள ஜில்லுன்னு இருக்கே கனல் அணைஞ்சுடாது///

நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்திடாத நிலையில்  இருவரும் ஒரே கோவிலில் இருக்கின்றார்கள்  அதை போன் மூலம்  தெரிந்து கொண்ட நாயகன் நாயகியை பார்க்க  துடிக்க...

 இருவரும் கோவிலை  சுற்றிவருவோம் நான்  பார்த்து பேசும் முதல் ஆண் நீங்களாக இருக்க வேண்டும் அதே போல நீங்க பேசும்  முதல் பெண் நானாக இருக்க வேண்டும் என்ன டீல் ஓகேயா  என நாயகி கேட்பதும்...அதை தொடர்ந்துவரும் பாடலும்  அழகான  கவிதை...! 

பிண்ணனி இசையிலும்,பாடலிலும்  ஜீவன் இருக்கின்றது....!

                                                   சின்ன இடை வேளை...!  
***********************************************************************************
 
இந்த படத்துக்கு  நான்  நண்பருடன்  சென்றிருந்தேன்  இடை வேளையின் போது  எழுந்து பார்த்தால் படத்துக்கு அனைவரும் ஜோடிகளாக....நானும் நண்பரும் மட்டுமே ஆண்ஜோடிகள்... பாருங்க  ரெண்டு ஆம்பிளைகள் தனியாக படத்துக்கு  வந்துருக்காங்கன்னு  நம்மள வித்தியாசமா பாக்குறாங்கன்னு நான் சத்த மாக சொல்லவே  அனைவருக்கும் பயங்கர  சிரிப்பு...!!!!!
************************************************************************************

படத்தில் பிரம்மாண்டத்துக்கு குறைவில்லை....கார்கள்  கரணம் போடுகின்றன..! ஹெலிக்காப்டரில் இருந்து  எடுக்கபட்டது போன்ற உயரத்தில் இருந்து  கிழக்கு கடற்கரை சாலையை காட்டுகின்றார்கள்...!

நாயகியை கொல்ல துரத்தும் வில்லன் நாயகிக்கு தெரியாமல் ஜிபிஎஸ்  கருவியை அவளிடம் சேர்க்கும் விதம்   சிறப்பான கற்பனை....!

அந்த ஜிபிஎஸ்  கருவியை நாயகன் உடனே கண்டுபிடித்து விடுகின்றார்  அந்த காட்சியை இன்னும் மிகைப்படுத்தி மெருகேற்றி இருக்கலாம்...! 

தனியறையில் இருக்கும் சூழலில் நாயகி நயகனை   சற்று அணைத்த படி நான் செத்தாலும் செத்துடுவேன் என்னோட வாழ முடியலியேன்னு உங்களுக்கு ஏக்கம் வரலாம் அதனால.....என அவனை நெருங்கும் அந்த காட்சி கிளு கிளுப்பாக இருந்தாலும் நாயகியின் கேரக்டர் சற்றே கண்ணிய குறைவாக ஆக்குவது போல உள்ளது....!

இறுதி காட்சியில் ஹோட்டலில் மெயின் வில்லனுடன் அவனை பற்றிய குற்ற ஆதாரங்களை வைத்து கொண்டு நாயகியை விடுவிக்க பேரம் பேசும் ஹீரோ.....அதே சமயம் வில்லனை கொல்ல போலீஸ் துணையுடன் வரும் மந்திரியின் மகன்....இன்னொரு புறம் நாயகியை கொல்ல துரத்திய வில்லன் எண்டர்...என உச்சகட்ட பரபரப்பு ....படமாக்கிய விதம் டாப் கிளாஸ்...!!!


மொத்தத்தில்  எந்த இடத்திலும் சோர்வில்லாமல் விறு விறுப்புடன் படம் பலத்த கைத்தட்டல் பெறுகின்றது...! 

மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் கேபிள் சங்கர் மற்றும் அவரது அணியினருக்கு...!!!

>