பிடித்த பாடல்கள் -தொடர் பதிவு

நண்பர் வால்பையன் அருணின் அழைப்பின் பேரில் இந்த பிடித்தபாடல்கள் பதிவு
அழைப்பிற்கு நன்றி அருண்...!

இந்த பதிவில் எனக்கு பிடித்த பழைய ,கருப்பு வெள்ளையில் வெளிவந்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.


இந்த பாடலை முன்பு பலமுறை கேட்டதுண்டு ஆனால் பெரிதாக கவனித்ததில்லை பழைய பாடல்களா..? புதிய பாடல்களா..?என்ற லியோனியின் பட்டிமன்றம் ஒன்றில் இந்த பாடலை ஒரு பேச்சாளர் இப்படி விவரித்தார் அதன் பிறகு இந்த பாடலின் ரசிகனாகிவிட்டேன்..!

அதாவது... ஒரு காதலன் தன் காதலியை நிலவுக்கு ஒப்பிட்டு பாட நினைக்கிறான் ஆனால் ..? நிலவோ உடையில்லாமல் இருக்கிறது என்ன செய்வது உடனே இப்படி பாடுகிறானாம்...


ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ


இந்த பாடலின் வீடியோ லிங்க் கிடைக்கல அதனால ஆடியோ மட்டும்

இங்கே


எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மூப்பே அடையாத ஒரு பருவ இளங்குமரி போன்ற பாடல் இது ..! புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் போட்டி போட்டுகொண்டு ஆட, டிஎம்எஸும் பி . சுசிலாவும் போட்டி போட்டு கொண்டு பாட ஆஹா நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ன ஒரு அருமையான பாடல் ..!..........


பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இறைவன் இருக்கும் இடத்தை தெளிவாக்குகிறார் வாலி பாபு பட இந்த பாடலில்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...

..........


அங்கம் குறைந்தவனை ......அழகில்லா ஆண்மகனை .......
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா .......வீட்டில் மணம்பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா ........

மண்பார்த்து விளைவதில்லை........ மரம் பார்த்து படர்வதில்லை.......கன்னியரும் பூங்கொடியும் கன்னையா


டி எம் எஸ்- பி .லீலா குரலில் சிவாஜி சரோஜா தேவி பாகபிரிவினையில் அழகிய இந்த பாடல் ...


தாழையாம் பூமுடித்து தடம் பார்த்து நடைநடந்து .......

........

இளைய ராஜாவில் ராஜ ராஜாங்கத்தில் வட்டத்துக்குள் சதுரம் பட
இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்


>