''ஒரு மனிதன் மணமகன் ஆவதற்குள்''

இங்கே நம் சமூகத்தில் பெண்களின் திருமண தடை
பற்றியே பெரும்பாலும் பேசப்படுகிறது.
உதாரணமாக வரதட்சணை பிரச்சனை,வறுமை,
படிப்பின்மை,அழகின்மை, இன்னும்
பல காரணங்கள்.இவை எல்லாம் உண்மைதான்.
ஆனால்! அதே வேளையில் ஆண்களுக்கும்
இதுபோல பிரச்சனைகள் ஏற்படுகிறது அதை
சொல்லத்தான் இந்த பதிவு.

ஒரு வீட்டில் தன் சகோதரிக்கு திருமணம் தள்ளி
போனால் அந்த வீட்டில் இருக்கும் அந்த
பெண்ணின் சகோதரனுக்கும் திருமண
தடை ஏற்படுகிறது.இந்த தடையை
அந்த சகோதரன் வெறுப்புடன் பார்ப்பதில்லை,
பொறுப்புடன் ஏற்றுகொள்கிறான்.

அடுத்து!!
தன் முன்னோர் சொத்து ஏதும் இல்லாமல்,
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன்
தானே சம்பாதித்து ஒரு குடும்பத்தை
நிர்வகிக்கும் அளவிற்கு தன்னை உருவாக்கி,
ஒருவர் தனக்கு பெண் கொடுக்கும் அளவிற்கு
தன்னை தகுதி படுத்தி, ஒரு சுய விலாசம் பெற
அவன் படும் பாடுகள் நெறயவே இருக்கின்றன.

ஒரு வசதி படைத்த குடும்பத்தினர் பெண் தேடும்போது,
பெண் வசதி இல்லாவிட்டலும் பரவாஇல்லை நல்ல
குணவதியாக இருக்கவேண்டும் என விரும்புவதை
பார்த்து இருக்கிறோம்.

ஆனால்!
மணமகனை தேடும்போது மட்டும் அவன் குணம்
பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுவது இல்லை.
அவனது சம்பாத்யம் மட்டுமே கவனிக்க படுகிறது.

ஒரு ஆண் மகனின் திறமை,நேர்மை,கண்ணியம்,
நெறி தவறாமை, இவைஎல்லாம் வசதிக்கும்
வருமானத்திற்கும் முன் எடுபடுவதில்லை.


ஒருவன் படிக்கும்போது தன்னை கதா நாயகனாகத்தான்
நினைத்து கொள்வான் ஆனால்! படித்து முடித்து,
அல்லது ஒரு சுய தொழிலில் ஈடுபட்டு மாதம் சுமார்
5000 ரூபாய் சம்பாதிக்க கூட அவன் படும் பாடுகள் கொஞ்சமல்ல!
அப்போதுதான் தான் யார் என்பது அவனுக்கே புரியும்!


அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு நல்ல நிலைமை
அடைந்து கல்யாண சந்தைக்கு வரும்போது!
வெகு சுலபத்தில் ஒரு வசதி படைத்த குடும்பத்தை
சேர்ந்தவனிடம் அடிபட்டு போகிறான். இதற்கு இவன்
தரப்பு தவறு என்னவெனில் தன்னைவிட வசதி
படைத்த பெண்ணை திருமணம் செய்து
கொள்ள நினைப்பதுதான்.

ஒரு ஆண் கல்யாண சந்தையில் சங்கடங்களை
சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில்? முதலில்
தன்னை சாதாரணமானவனாக நினைத்துக்கொள்ள
வேண்டும். பெண் மிக மிக அழகாக இருக்கவேண்டும்
என நினைக்காமல் ஓரளவு இருந்தால் போதும்
என்ற எண்ணத்தை கொள்ளவேண்டும்.

மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
மனம் முடிக்க நினைக்க வேண்டும்.

இப்படியெலாம் நினைத்து பெண் தேடினால்!
அவன் வாழ்க்கை சொர்கம்தான்!!!>