நன்றி ...! நன்றி ..! மிக்க நன்றி ...!

எனது இந்த பதிவிற்கு இந்த அளவிற்கு வாழ்த்து மழை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை ..! ஆனால் ஆசைப்பட்டேன் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமென ..! நான் ஆசைப்பட்டதைவிட அதிகமாகவே வாழ்த்து மழை குவிந்தது . கடந்த இரண்டு நாட்களாக ஒரு நிறைந்த மகிழ்ச்சி கடலில் நீந்திக்கொண்டு இருந்தேன் . உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளும் என் இதயத்தை வருடியது ..! அப்போது இருந்த என் மனநிலையை சொல்லி விளக்க முடியாது ..!

கூகுள் பஸ்ஸில் இந்த பதிவை ரீஷேர் செய்த நண்பர்கள், லைக் செய்தவர்கள் நட்புகள் , அங்கே வாழ்த்து தெரிவித்தவர்கள் , பதிவில் வாழ்த்தியவர்கள் என எல்லோரையும் நினைத்து பார்க்கும் போது வலையுலக வாழ்வின் அர்த்தம் புரிகிறது . என்னை பொறுத்தவரை வலையுலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்துவதில் வள்ளல்கள்..!

என் ஒட்டுமொத்த உணர்வையும் நன்றி என்ற ஒற்றை சொல்லில் சுருக்கி சொல்கிறேன் ..!

நன்றி...! நன்றி.....! நன்றி .....!

>