நான் புளியமரம் பேசுகிறேன்!

எஸ் .. ! நான் புளியமரம்தான் பேசுறேன் ..! எங்களுக்கெல்லாம் வயசாகிபோச்சு எங்க இனத்துல சின்ன வயசு மரங்கள எங்கயும் பார்க்க முடியல...! யாரும் புதுசா புளிய மரங்கள பயிர் செய்றதா தெரியல..!சில வீடுகள்லயும், தோப்பு பக்கமும் நாங்க இருக்கோம்னா அது நாங்களா வளர்ந்ததுதான்...! ஆமா...! புளிய மரத்த நட்டு எப்போ புளிய அறுவடை பண்ணுறதுன்னு நீங்க நெனைக்கலாம் உண்மைதான் நாங்க வளர வருசகணக்கு ஆகத்தான் செய்யுது அதுக்கு நாங்க ஒன்னும் செய்யமுடியாது ஆனா இப்போ நீங்க பயன்படுத்துற புளி உங்க பாட்டன் முப்பாட்டன் காலத்துல யாரோ வைச்ச மரத்துல இருந்துதானே கிடைக்குது..?
அதுபோல நீங்களும் உங்க வருங்கால சந்ததிக்காக மரம் வைக்கலாம்ல..?
இந்த படங்கள பாருங்க...!யாரோ அந்த காலத்துல இப்படி ரோட்ட போட்டு ரெண்டு பக்கமும் புளியமரங்களா நாடு முழுக்க நட்டு வைச்சு இருக்காங்க அவங்க தொலை நோக்கு பார்வைய பாராட்டித்தான் ஆகணும்..! இப்படி எல்லா இடங்கள்லயும் யாரு மரங்கள நட்டு வைச்சதுன்னு எனக்கு வயசானதால மறந்து போச்சு..! இத எழுதுற ஜீவனுக்கும் அது தெரியல தெரிஞ்சவங்க யாராச்சும் பின்னூட்டத்துல சொல்லுங்க..!

இந்த ரோட்ட மண் சாலையா பார்த்து இருக்கேன் ,அப்புறம் கருங்கல் சாலையா பார்த்து இருக்கேன் இப்போ தார் சாலையா பார்க்குறேன் ஆரம்ப காலத்துல குதிரை வண்டி ,மாட்டுவண்டில ஆரம்பிச்சு இப்போ கார் ,பஸ்சுன்னு உங்க வளர்ச்சிய பார்த்து சந்தோசப்பட்டு இருக்கேன்..!

இப்படி ரோடு முழுக்க குடை புடிச்ச மாதிரி உங்களுக்கு நிழல் கொடுக்குறதே எங்களுக்கு எவ்ளோ பெரிய சந்தோசம் தெரியுமா ..? எங்களுக்கே சமயத்துல எங்க நிழல்ல நடந்து போகணும்னு ஆசை வரும் ஆனா அது முடியாதுல்ல..! ;;) ரோட்ட அகலபடுத்துறதா சொல்லி சர்வ சாதாரணமா எங்கள வெட்டி போடுறீங்க சரி பரவாயில்ல ..! ரோட அகல படுத்திதான் ஆகணும் பொறுத்துக்கலாம்..! ஆனா அது ஏன் ரெண்டு பக்கமும் உள்ள மரங்கள வெட்டனும் ...? ஒருபக்கம் மட்டும் வெட்டி அகல படுத்தலாமே ...?

நல்ல வேளை எங்க மர கட்டைகள வீடு கட்டவோ அல்லது ஜன்னல்,கதவு போல பயன் படுத்த முடியாது இல்லாட்டி இந்நேரம் எங்கள பாதி அழிச்சு இருப்பாங்க..!


இப்போ எனக்கு கவலை அப்படின்னா இப்போ இருக்குற எங்க எல்லாருக்கும் ரொம்ப வயசாகிபோச்சு இன்னும் கொஞ்ச வருசங்கள்ல நாங்கல்லாம் அழிஞ்சு போய்டுவோம் ..! புதுசா மரங்கள நடாத பட்சத்துல உங்க அடுத்த தலைமுறை ,அதுக்கு அடுத்த தலைமுறை மக்கள் எல்லாம் சமையலுக்கு புளி கிடைக்காம போய்டுமேன்னுதான் வலையா இருக்கு..!
சில அன்பர்கள் மரம் நாடும் அற்புத சேவைல இருக்காங்க அவங்ககிட்ட நான் கேக்குறது என்னன்னா ? கொஞ்சம் புளிய மரங்களையும் சேர்த்து நடுங்க அப்போதான் எதிர்காலத்துல புளியின் தேவையை நிறைவு செய்ய முடியும் இல்லாட்டி இது புளி இல்ல ஆனா புளி மாதிரி அப்படின்னு எதாச்சும் கெமிக்கல் பொருள பயன்படுத்தி அடுத்த தலைமுறை மக்கள் உடம்ப கெடுத்துக்க போறாங்க...!

>