மனதில் நிற்கும் பதிவர்களின் பதிவுகள் --தொகுப்பு இரண்டு

நெஞ்சில் நிலைத்த பதிவுகளை இதற்க்கு முன்னர் ஒரு முறை தொகுத்து Link இருக்கிறேன் இது இரண்டாவது தடவை ..!
முதல் தொகுப்பு இங்கே

இந்த மனிதரின் கவிதையை படிக்குபோதெல்லாம் அவர் கரங்களை பற்றி பாராட்ட தோன்றும் நான் நேரில் சந்திக்க விரும்பும் மனிதர்களில் இவரும் ஒருவர். புரையேறும் மனிதர்களை பற்றி எழுதுகிறார் என்னால் இவருக்கு பலதடவை புரையேறி இருக்க கூடும்.

பாரா வின் தகப்பனாக இருப்பது

கடன்கார தகப்பனின் மகனாய் இருப்பதும் கொடுமைதான் ..! அதை நான் அனுபவித்து இருக்கிறேன் ..!

வெகு சரளமான எழுத்து நடை ஒரே முச்சில் படிக்க வைத்து மனதை கனக்க வைத்த ஜெஸ்வந்தியின் இந்த பதிவுகள் படித்து பாருங்கள் ..!

யார் குடியை கெடுத்தேன் ??

பகுதி ஒன்று பகுதி இரண்டு பகுதி மூன்று


எனக்கு இலங்கை தமிழ் மிகவும் பிடிக்கும்..! என் சிறிய வயதில் எங்கள் ஊரில் விடுதலை புலிகள் சகஜமாக வந்து சென்ற காலம் அது . பள்ளி முடிந்த வுடன் நான் மற்றும் என் நண்பர்கள் அனைவரும் அவர்களுடன் தான் இருப்போம் மிகவும் பாசமாக பழகுவார்கள் அவர்கள் பேசிய அந்த தமிழ் லயிக்க வைத்தது
உண்மை ..! அதன் பிறகு அந்த தமிழை நேரடியாக கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஒரு இலங்கை தமிழரிடம் சிலமணி நேரமாவது அமர்ந்து பேசவேண்டும் என்பது என் தீராத ஆசையாய் இருக்கிறது ..!

இந்த இலங்கை தமிழை உரித்து வைத்து எழுதிய ஹேமாவின் இந்த பதிவை பாருங்கள் லயித்து படிக்கலாம் இறுதியில் சோகத்தோடு முடித்தாலும்.

கடந்து வந்த பதின்மத்தில்


புதிய சிந்தனைக்கு சொந்தக்காரன் பிரியமானவன். சொர்கத்தில் இருக்கும் தன் தங்கைக்கு ப்ரியமுடன் வசந்த் எழுதி இருக்கும் கடிதத்தை நம்மால் கலங்காமல் படிக்க முடியவில்லையே ..!
சொர்கத்துக்கு ஒரு கடிதம்

அதை தொடர்ந்து அதற்க்கு பதில் கடிதம் வடித்த தமிழரசியின் கடிதத்தையும் படித்து பாருங்கள்.


வளமான எழுத்து நடை கொண்டவர் இந்த அமு செய்யது .இவர் நிறைய எழுத வேண்டும் . இவரின் இந்த பதிவை பாருங்கள்.

கரையான்கள் அரித்த மீதிகதவுகள்
---தொடரும்
>