மனதில் நிற்கும் சில பதிவர்களின் பதிவுகள்

நாம் படித்த சில புத்தகங்கள் நம் மனதில் நிலைத்திருக்கும் அது போல நான் படித்து மனதில் நிலைத்த சில பதிவர்களின் பதிவுகளை முன் வைக்கிறேன்..!

தலை சிறந்த பெண்பதிவர்களில் இவர் முக்கியமானவர். இவரது பதிவுகள் பெரும்பாலும் சமூக அக்கறையுடனே வெளிவரும் . எயிட்ஸ் நோய் ஒழிப்பு துறையில் அதிகாரியாக பணியாற்றியபோது மரியாதைக்குரிய மங்கை மேடம் நிகழ்த்திய அதிரடி நடவடிக்கையை இந்த பதிவில் பாருங்கள்...!

எச் ஐவியால் பாதிக்க பட்டவளாய் நான்

.......................
இவரது இந்த புல்,மூங்கில் கதை சில சந்தர்ப்பங்களில் எனக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது இந்த கதை உங்களுக்கும் உதவ கூடும். அண்ணன் இராகவன் அவர்களின் இந்த பதிவு .!
போய் விட முடிவு செய்துவிட்டேன் ...
.............
சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் இவர் இப்படிபொருள் பட சொன்னார் வலையுலகில் '' இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு என் பங்களிப்பும் உள்ளது '' என..! அது எந்த அளவு உண்மை என அப்துல்லா இந்த பதிவில் சொல்லுகிறார் .
தீபாவளி நினைவுகள்
.........

ஊருக்கு போய் இருந்தப்போ பார்ல தண்ணி அடிக்கும்போது நண்பன் ஒருவனிடம் இந்த கவிதையை சொன்னேன் கவிதையை கவனமா கேட்டவன் கடைசியில்

//ஏனோஅப்பாதான்
வரவே இல்லை..... ///

என்ற இந்த கடைசி வரியை கேட்டதும் கண் கலங்கிவிட்டான் அந்த கண்ணீரில் தெரிந்தது அந்த கவிஞரின் வெற்றி..!

அண்ணன் தண்டோரா மணிஜி யின் இந்த கவிதையை இந்த பதிவில் வாசியுங்கள்
கருப்பு கலர் ஆரஞ்சு
.............

அருமையான சிந்தனையில் வடிக்கப்பட்ட ஒரு அழகு கவிதை இது அமுதா மேடம் அவர்களின் இந்த பதிவு
ஒரு திண்ணையின் கதை
.............................

இவர் ஒரு பிறவி எழுத்தாளர் இந்த பதிவுதான் என இல்லை இவரின் அனைத்து பதிவுகளுமே இவர் திறமைக்கு சான்று .!

அமிர்த வர்ஷினி அம்மாவின் இந்த பதிவு ஒரு சாம்பிள் மட்டுமே
உளவு
............
எழுத்துலகில் இவர் ஒரு சிறந்த இடத்துக்கு வருவார் என என் உள்ளுணர்வு அடிக்கடி சொல்லும். பாலாசி யின் இந்த பதிவும் மனதில் அடிக்கடி வந்து செல்லும் படித்து பாருங்கள் இந்த பதிவை ..
குடியானவன்
மேலும் பல பதிவுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன் ...!

....

>

19 comments:

V.Radhakrishnan said...

நல்ல முயற்சி.

நர்சிம் said...

good one

க.பாலாசி said...

ரொம்ப சந்தோஷம்...நன்றிங்க... பகிர்ந்துகொண்ட அனைவரின் இடுகைகளும் சிறப்பானவையே. அதுவும் மணீஜியுடையது கண்ணீரை வரவழைக்கக்கூடியது...

பாரத்... பாரதி... said...

உங்கள் வழிகாட்டலுக்கு நன்றிகள்..
நல்ல விஷயங்களை மேலும் நாலு பேருக்கு தெரியப்படுத்தியதற்காக..

அமுதா said...

நல்ல முயற்சி. தொடருங்கள். நல்லதொரு தொகுப்பாக இருக்கும்
எனது நன்றிகளும்.

டுபாக்கூர் பதிவர் said...

நல்ல தொகுப்பு!

நட்புடன் ஜமால் said...

அருமை அண்ணா

அந்த கால பதிவுலகம் மிகவும் அமைதியாகவும் அழகாகவும் இருந்தது

அது போன்ற பதிவுகளை நினைவூட்டுதல் மிக அருமை

மணிஜீ...... said...

நன்றி அமுதன்......க.பாலாசியை நேற்று முன் தினம் சந்தித்தேன்...எளிமையான ...கருத்தான எழுத்து அவருடையது...மென்மேலும் சிறக்க அவரையும், சக பதிவுலக நண்பர்களையையும் வாழ்த்துகிறேன்....

(ஒரு காணாமல் போன சிறுவனை பற்றிய அறிவிப்பை படிக்க நேர்ந்தது..அதன் பாதிப்புதான் அந்த கவிதை..)

ப்ரியமுடன் வசந்த் said...

ரைட் செலக்சன்ஸ்!

தோழி said...

பல புதிய பதிவுகளை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி..

Anonymous said...

பாலாசியை பயின்று இருக்கிறேன் பலமுறை மிகச் சிறந்த எளிய எழுத்து ந்டை...வருங்காலத்தில் சிறப்பாய் வரவும் வாழ்த்துக்கள்

இதில் ராகவ் அண்ணா..அப்துல்லா அண்ணா இவர்களது சில பதிவுகள் மட்டுமே படித்திருக்கிறேன்.. நீங்கள் குறிப்பிட்டவையும் அவசியம் படிப்பேன்

அப்படியே மற்ற பதிவர்களையும்
உங்கள் பெருந்தன்மை பாராட்டதக்கது தமிழ்...வாழ்த்துக்கள்

ஹேமா said...

பிடித்தமான பதிவாளர்கள்.தொடருங்கள் ஜீவன் !

Prabha said...

mangaiyin pathivai serththathu sadhosham....avarin indha seyal avar aluvalaga vattathhil periya paaraattai petruththandhaaga en thozhi..mangaiyudan velai paarththavar koori irukkiRaar.. migavum thunichalaaana seyal..

Nalla thoguppu...aduththa thoguppai viraivil tharavum...

mani ji n pathivu arumai..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். எல்லாவற்றையும் படித்து விடுகிறேன். பாலாசி அவர்களின் இடுகை படித்துள்ளேன். எளிமையாக அழகான எழுத்துக்கள் அவருடையது. பகிர்வுக்கு நன்றி.

மங்கை said...

நன்றி அமுதன்...:) நல்ல தொகுப்பு

வால்பையன் said...

நல்ல செலக்‌ஷன் தல!

சத்ரியன் said...

வரவேற்கிறேன் ஜீவா.

எம்.எம்.அப்துல்லா said...

அதை எழுதி 3 வது தீபாளியும் வரப்போகுது.இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க!?!

நெகிழ்கிறேன் அப்பு.வந்தனங்கள்.

தமிழிச்சி said...

அனைவரின் இடுகைகளும் சிறப்பானவையே. நல்ல தொகுப்பு