ஒரு பீரும்! நாலு பேரும்!!

''குடி குடியை கெடுக்கும் குடிபழக்கம்
உடல் நலத்திற்கு தீங்கானது''

தண்ணி அடிக்கிறதை பத்தி ரொம்ப நாளா பதிவெழுத ஆசை! எழுதலாமா வேணாமான்னு ஒரே யோசனை கடசில எழுதிடலாம்னு முடிவு பண்ணியாச்சு! கூட,குறைய இருக்கும் அட்ஜெஸ் பண்ணிகோங்க!

அப்போ எனக்கு பதினேழு,பதினெட்டு வயசு இருக்கும். எங்க வீட்டு பக்கம் இருக்கும் சிலபேர் சின்னதா ஒரு டூர் கிளம்பினாங்க! ஏற்பாடு பண்ணினது என்னை விட வயசு கொஞ்சம் அதிகமுள்ள அண்ணனுங்க! கல்லணை,ஸ்ரீ ரங்கம்,சமயபுரம்,முக்கொம்பு மலைகோட்டை இங்கெல்லாம் போறதா ப்ளான். அதிகாலைல கிளம்பி நைட் வந்துடலாம்.வீட்டுல தொல்லை பண்ணி பர்மிசன் வாங்கியாச்சு என் வயசு பசங்க ஒரு அஞ்சாறுபேர் மீதி எல்லாம் பெரியவங்க.மொத்தம் பதினாறு பேர் வேன்ல கிளம்பினோம்.


அதிகாலை கிளம்பி கல்லணை பார்த்துட்டு, ஸ்ரீ ரங்கம் போயிட்டு,அடுத்து சமயபுரம் பார்த்தாச்சு. அடுத்து முக்கொம்பு போற ப்ளான்! சமயபுரம் போயிட்டு திரும்புறோம் வேன் ஒரு ஒயின் ஷாப் பக்கத்துல நிக்குது.அண்ணன் மாருங்க எல்லாம் ஒண்ணுகொண்ணு பார்த்துகிட்டு உனக்கு என்ன பீரா?சரக்கா? ன்னு விவாதம் நடக்குது!


நம்ம வயசு செட்டுல கிருஷ்ண மூர்த்தி!கிருஷ்ண மூர்த்திதான் முதல்ல ஆரம்பிச்சது.டேய் நாம பீர் குடிப்போமா? எனக்கு பயமும்! ஆசையும்! முதல்ல வேணாம்னு தோணிச்சு அப்புறம் முடிவு பண்ணிட்டோம் பீர் குடிக்க. நான்,கிருஷ்ண மூர்த்தி,பிரபாகரன் மூணு பேரும் .உடனே பாரதின்னு ஒருத்தன் அவன் நானும் வரேன்னு சொல்ல இப்போ ரு பீரு! நாலு பேரு!! முக்கொம்பு போயாச்சு! அண்ணன் மாருங்க எல்லாம் வேன்லயே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க! நாங்க நாலுபேரும் பீர் பாட்டில வைச்சுகிட்டு மறைவான இடம் தேடி அலையுறோம். ஒரு படிக்கட்டுக்கு கீழ போய் மறைவா நின்னுகிட்டோம் கிருஷ்ண மூர்த்தி பல்லால கடிச்சு பாட்டில தொரக்குறான்.புஸ்ஸ்ஸ்ஸுனு ஒரே நுரையா அடிக்குது ஐயய்யோ எல்லாம் நுரையா போய்ட போகுதேன்னு எனக்கு பயம்.அப்படியே பாட்டில சாய்ச்சு புடிச்சு நுரை அடங்கினதும் குடிக்க போறோம் அப்படியும் கீழ கொஞ்சம் போய்டுச்சு. பாட்டில் மேல அளவு வைச்சுகிறோம்.ஒருத்தருக்கு இவ்வளவுன்னு முதல்ல கிருஷ்ணமூர்த்தி. .அடுத்து பாரதி பாட்டில் மேல கட்டை விரல வைச்சு அடையாளம் பண்ணிக்கிட்டு குடிக்கிறான் அடுத்து நான் அன்னிக்கு நான் அடிச்ச அந்த முதல் நாள் நல்ல சுபயோ சுபதினமா இருந்திருக்கும் போல. ஒருவாய் குடிக்கிறேன் ஒரே கசப்பு நான் நினைச்ச சுவை இல்ல அடுத்த வாய் குடிக்கிறேன் லேசா குமட்டுரதுபோல இருக்கு பிரபாகரன் பார்த்துகிட்டே இருக்கான் எங்க அவன் பங்க குடிசிரபோரானோன்னு பார்த்துகிட்டே இருக்கான் என்னால குடிக்கவும் முடியல கொடுக்கவும் மனசு வரல.மல்லு கட்டி குடிச்சுட்டேன்.பிரபாகரனும் குடிச்சிட்டான்.

லேசா போதை வர்றமாதிரி இருந்தது! ஆனா போதை வரல ரெண்டுவாட்டி பீர் ஏப்பம் வந்தது அப்போ ஒரு பீல் வந்தது போதை மாதிரி! பீர் அடிச்சதால வந்த மன பிராந்தியா இருக்கும் போல. அன்னிக்கு கொஞ்சமா குடிச்துதான் பீர் மேல ஆசை அதிகமா ஆயிடுச்சி ஊருக்கு வந்து ஒரு பீர் வாங்கி ரெண்டுபேர்,அப்புறம் ரெண்டு பீர் வாங்கி முணு பேர்னு நல்ல முன்னேற்றம்.பீர்ல இருந்து பிராண்டி விஸ்கிக்கு மாறுனதுக்கு காரணம் பண பற்றா குறைதான்.ஒரு ''ஓல்ட் மங்க்'' புல் வாங்கி ஏழு பேர் அடிச்சு இருக்கோம்.

பதிவு வேற பெருசாஆயிட்டே போகுது ம்ம் தண்ணி அடிக்கிறத பத்தி ரெண்டு பதிவா போடமுடியும்? ஆரம்பிச்சாச்சு முடிச்சுடுறேன் அட்ஜெஸ் பண்ணிகோங்க!!

வருசங்கள் போச்சு சென்னை வந்தாச்சு ஒரு குவாட்டர முழுசா அடிக்கிற அளவுக்கு டெவலப் மென்ட். எங்க ஏரியா தாண்டி எங்கயாச்சும் ஒதுக்கு புறமா இருக்குற பாருக்கு போவோம் ஒரு நாலைஞ்சு பேர். அப்போ அங்க ஒருத்தர அடிக்கடி மீட் பண்ணுவோம் கொஞ்சம் தூரத்து சொந்தம்! எங்க பக்கம் திரும்பி கேவலமா ஒரு பார்வை பார்ப்பாரு! அப்புறம் கமுக்கமா ஒரு கட்டிங் உட்டுட்டு போய்டுவாரு.

அவர் யார் தெரியுமா? தெரியுமா? தெரியுமா? அவர்தான்!


சி( )ங்க மணியோட அப்பா!!!

எனக்கு பொண்ணு பாக்குறப்போ அவங்க வீட்டுல பொண்ணு இருக்கு கேப்போமான்னு கேட்டாங்க! எனக்கு அந்தாளு பொண்ணு கொடுக்க மாட்டார்னு நிச்சயமா நினைசேன்! ஆனா? அவர் ஜென்டில் மேன் ஓகே சொல்லிட்டாரு. இந்த லட்சணத்துல அவர் என்னை பார்ல பார்ப்பேன்னு வீட்டுல வேற சொல்லி இருக்காரு!இப்போவெல்லாம் நான் அதிகம் குடிக்கிறது இல்ல வாரத்துல ஒரு நாள்தான் சனி,ஞாயிறு மட்டும் அதென்ன ஒருநாள் ஆனா சனி ஞாயிறு? அதாவது ஒரு வாரத்துல முதல் நாள் அடுத்த வாரத்துல கடைசிநாள்!

திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

அப்படி!!

வெளில எல்லாம் போய் அடிக்கிறது இல்ல வீட்டுலதான் சிங்க மணிகிட்ட திட்டு வாங்கிகிட்டே. இப்போ எனக்கு ஒரு சிக்கல் என்னன்னா என் பொண்ணுக்கு ஆறு வயசு ஆக போகுது இதுவரைக்கும் இருமல் மருந்துன்னு சொல்லிசமாளிசாச்சு! இனிமே அதுக்கு வெவரம் தெரிஞ்சுடும். இப்போ நான் என்ன பண்ணுறது எங்க வைச்சு அடிக்கிறது! ( பார்ல போய் அடிச்சா இப்போ இமேஜ் பிராப்ளம் அதோட வண்டி ஓடிக்கிட்டு வீட்டுக்கு வரணும் )

யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!----------------------------------------------------------------
>