என்னை திருடியவர்கள்..... தொடர் பதிவு

இதற்க்கு முன்னர் ''என்னை கவர்ந்தவர்கள்'' பதிவிற்கு அழைத்த மதிப்பிற்குரிய திரு ,ராகவன் அண்ன் அவர்கள் இப்போது என்னை திருடியவர் பதிவிற்கு அழைத்து உள்ளார்.அவருக்கு என் நன்றிகள்.....

என்னை கவர்ந்தவர்கள் பதிவில் மாவீரன் நேதாஜி பற்றி எழுதி இருந்தேன் என்னை திருடியவர் என்றாலும் நேதாஜி பற்றித்தான் எழுத தோன்றுகிறது.ஆனால் ? இப்போது என்னை திருடியவராக நான் எழுத இருப்பது செஞ்சோற்று கடனுக்காக தன் குடும்பத்தினரையே எதிர்த்து போரிட்ட கொடை வள்ளல் கர்ணன் பற்றி!
ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு வாசம்

நாம் சிலரை பார்த்து இருப்போம் அதாவது,யாரவது எதாவது செய்து பெரியபேர் வாங்கிவிட்டால் ! இதென்ன பிரமாதம் நானாக இருந்தால் இதைவிடசிறப்பாக செய்து இருப்பேன் என சொல்லுவார்கள் . ஏன் நமக்கு கூட அப்படி சில சமயம் தோன்றி இருக்கும்.

ஆனால்! சிலருக்கு மட்டுமே சில விஷயங்கள் தோன்றும் எல்லோருக்கும் தோன்றி விடாது! கர்ணன் வாழ்வில் ஒரு சம்பவம்!


சிறந்த வள்ளல் என கர்ணனை மட்டும் சொல்லுகிறார்களே நானும்தான் அள்ளி, அள்ளி கொடுக்கிறேன் என்னை யாரும் வள்ளல் என சொல்லவில்லையே என்று அர்ஜுனனுக்கு பொறாமை!


உடனே அர்ஜுனன் கிருஷ்ணபகவானிடம் போய் நானும் வள்ளல்தான் ஆனால் எல்லோரும் கர்ணனையே வள்ளல் என்று போற்றுகிறார்களே?என கேட்கிறான்? அதற்க்கு NT .ராமாராவ் சொல்கிறார் ஒருநாளும் நீ கர்ணனை போல ஆக முடியாது என்று!


அதற்க்கு அர்ஜுனன் ஒத்துக்கொள்ள வில்லை. இல்லை என்னாலும் கர்ணனைவிட அதிகமாக தானம் கொடுக்க முடியும் என வாதிடுகிறான்.

உடனே கிருஷ்ண பகவான் தங்கத்திலான இரண்டு மலைகளை உருவாக்கி இன்று மாலை மாலை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் தானம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் நீதான் பெரிய வள்ளல் என சொல்லுகிறார்.

அர்ஜுனனும் ஒப்பு கொள்கிறான்! தானம் செய்ய துவங்குகிறான் வருவோர் போவோர்கெல்லாம் வண்டி ,வண்டியாக தங்கத்தை வெட்டி வெட்டி கொடுக்கின்றான்.ஆனால் தங்க மலைகள் குறைந்த பாடில்லை. சூரிய அஸ்தமன நேரம் நெருங்குகிறது அர்ஜுனனால் முடியவில்லை. அப்போது அங்கே NT. ராமாராவ் வருகிறார்,என்ன அர்ஜுனா முடியவில்லையா என கேட்க அதற்கு அர்ஜுனன் முடியவில்லை என சொல்கிறான்.

உடனே கிருஷ்ணர் அங்கே கர்ணனை அழைக்கிறார் அப்போது சூரிய அஸ்தமனத்திற்கு சில வினாடிகளே உள்ளன.

கிருஷ்ணர்!! கர்ணனை பார்த்து!! கர்ணா! இன்றைய சூரிய அஸ்தமணத்திற்குள் இந்த இரண்டு தங்க மலைகளையும் தானம் செய் என சொல்லுகிறார்! அங்கே அப்போது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல கர்ணன் வாரார்!!


அஸ்தமித்து கொண்டிருக்கும் சூரியனை ஒரு பார்வை பார்க்கிறார் !
அப்போது சாலையில் சென்று கொண்டு இருந்த இருவரை அழைத்து
ஆளுக்கு ஒரு மலையை எடுத்து கொள்ள சொல்லி இரண்டு மலையையும் தானம் செய்து விட்டு ,
வர்ர்ட்டா! ன்னு சொல்லி போய் விடுகிறார்.

அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனை பார்த்து பார் இது உனக்கு தோன்றாமல் போய்விட்டதே அதான் கர்ணன் என்கிறார்.அர்ஜுனனும் உணர்ந்து கொள்கிறான்.


கடவுளையே தன்னிடம் கையேந்த வைத்த கர்ணன் பற்றி நெறைய சொல்லலாம் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த விஷயங்களாகத்தான் இருக்கும்..***********************************************************************************


>

மயிலு ..மயிலு ..

ஞாயித்து கிழமை வீட்டுல பசங்கள கூட்டிகிட்டு வெளிய போகலாம்னு தங்கமணி தொல்லை தாங்க முடியல! ஞாயித்து கிழமைனா ஒரு கட்டிங் உட்டுட்டு நிம்மதியா ஒரு தூக்கம் போடுறதுதான் நமக்கு புடிக்கும் , சரி போகட்டும்னு கிண்டி பாம்பு பண்ணை , சிறுவர் பூங்கா போகலாம்னு முடிவு பண்ணி கிளம்பினோம்.நாங்க போன நேரம் மழை வர்றது போல இருந்தது ! மழை வரும்போது மயில் தோகை விரிச்சு ஆடுமாமே? உண்மைதான் நாங்க போன நேரத்துல மயில் தோகை விரிச்சு ரொம்பநேரம் பார்வையாளர்களுக்கு போஸ் கொடுத்து நின்னது செம அழகு! இந்த பதிவ போடுற காரணமே இந்த மயில் தான்.எல்லாம் செல் போன்ல எடுத்த படங்கள் வேற கேமராவில எடுத்து இருந்தா
இன்னும் நல்லா இருந்திருக்கும்!

அங்க ஒரு நாலைஞ்சு மயில்கள் இருந்தது ஆனா ஒரு மயில் மட்டும்தான்
தோகை விரிச்சு நின்னது ! மத்த மயிலுங்களுக்கு மழை வர்ற ''பீலிங்'' வரல போல!இந்த பறவை பேரு தெரியல நல்லா நல்ல உயரமா கம்பீரமா இருந்தது!


இவங்க எங்க வீட்டு மயிலுங்க!>

''இது எழ வேண்டிய தருணம்''

மாவீரர் நிச்சயம் மீண்டும் தோன்றுவார்! இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நம்பிக்கை! இந்த நம்பிக்கையில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை அவர் நிச்சயம் நம்மிடையே தோன்றத்தான் போகின்றார்!

உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே ஒரு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதைபோல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.இது தளர்ந்து போகும் தருணம் அல்ல! உறுதியுடன் நம்மை நிலைப்படுத்தி கொண்டு எழ வேண்டிய தருணம்!

சரி!

விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட இயக்கம் அதனால் தமிழகத்தில் சாமானிய மக்கள் புலிகள் இயக்கத்தை பற்றி பேச தயங்கினார்கள்.இலங்கை தமிழர்களை பற்றி பேசுவதுகூட புலிகள் ஆதரவு பேச்சாக அமைந்துவிடுமோ என நினைத்தார்கள்.

இப்போது?

விடுதலை புலிகளை ஒழித்து விட்டதாக இலங்கை -இந்திய அரசுகள் அறிவிக்கின்றன! இப்போது பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை!


எத்தனை நாளைக்குத்தான் வெறும் குரல் மட்டும் கொடுத்து கொண்டிருப்பது?

இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக, வலைப்பதிவுகளில் அனல் பறக்க எழுதி ஆகிவிட்டது! மனித சங்கிலிகள் அமைத்தாகிவிட்டது! பேரணிகள் நடத்தி ஆகிவிட்டது!தீக்குளிப்புகளையும் பார்த்தாகிவிட்டது! உண்ணா விரதங்களும் இருந்தாகி விட்டது!என்ன பலன் ? ஒன்றுமே இல்லை! தமிழகமே ஒன்று திரண்டு ருத்ர தாண்டவம் ஆடி இருந்தாலும் அங்கே செத்து கொண்டிருந்த ஒரு உயிரையும் காப்பாற்றி இருக்க முடியாது! இதுதான் உண்மை!


போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு இடம் அளித்து, சம உரிமை வழங்க போவதாக இலங்கை அறிவித்துள்ளது! உலக நாடுகளின் உதவியுடன் அவர்களுக்கு சமஉரிமை வழங்க பட்டாலும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப எத்தனை காலம் ஆகும்? மேலும் அங்கு உள்ள குழந்தைகளின் நிலையை நினைத்து பார்த்தால் ??? குண்டு மழையையும் , ரத்த காயங்களையும், பிண குவியல்களையும் பார்த்து பார்த்து அந்த குழந்தைகளின் மனம் எந்த நிலையில் இருக்கும் ? அங்குள்ள குழந்தைகள் திடமான மனதுடன் நல்ல கல்வியினை பெற வேண்டும். அங்கு வளரும் குழந்தைகள் சிறந்த எதிர் காலத்தை பெற வேண்டும் அதற்கு தமிழக தமிழர்கள் உதவி புரிய வேண்டும்! இது தமிழக தமிழர்களின் கடமை. வெறுமனே குரல் கொடுத்தல்,போராடுதல் என்று இல்லாமல் அவர்களுக்கு நாம் நேரடியாக உதவ வேண்டும்.சில கேள்விகள்;-


பாதிக்க பட்ட மக்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு நேரடியாக உதவ முடியுமா?


அங்குள்ள மக்களை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு உதவ முடியுமா ?

அங்கு சகஜ நிலையில் வாழும் தமிழர்களின் உதவியுடன் அவர்களை தொடர்பு கொண்டு உதவ முடியுமா?

இந்த கேள்விகளுக்கு என்ன என்ன சாத்திய கூறுகள் உள்ளன என்பதை விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்கள்!

உதாரணமாக பாதிக்க பட்ட ஒரு குடும்பத்துக்கு அந்த குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவ நினைக்கிறேன்,அல்லது குறைந்த பட்சம் ஒரு குழந்தையை படிக்க வைக்க நினைக்கிறேன் .நான் என்ன செய்ய வேண்டும் ? ஆறரை கோடிக்கு மேல் இருக்கும் தமிழக தமிழர்கள் மனது வைத்தால் பாதிக்க பட்ட இலங்கை தமிழ் மக்களை வெகு விரைவில் மீட்டு பொருளாதார ரீதியிலும் மனோ ரீதியிலும் அவர்களை வெற்றி அடைய செய்ய முடியும்.
தமிழக தமிழர்களை குற்றம் சொல்லும் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள்!

புலிகளை குற்றம் சொல்லும் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள்!

புலிகளை குற்றம் சொல்லும் தமிழக தமிழர்களும் இருக்கிறார்கள்!

ஆனால்! அனைவரும் இலங்கையில் தமிழர்கள் அமைதியுடன் வாழவேண்டும் என்று விரும்புகின்றவர்கள்தான்! இப்போது நமக்குள் எந்த சர்ச்சையும் வேண்டாம் தலையில் கையை வைத்து கொண்டு முடங்கும் தருணம் அல்ல இது!

இது எழ வேண்டிய தருணம்

..................

>

நாளை இவர்கள் இப்படியா?அப்படியா ?

மன்மோகன் சிங்

இப்படியா !!!

அல்லது இப்படியா?அத்வானி

இப்படியா !!!


அல்லது இப்படியா?


கலைஞர்
இப்படியா !!!

அல்லது இப்படியா ?ஜெய லலிதா

இப்படியா !!!

அல்லது இப்படியா ??

வைகோ

இப்படியா !!!


அல்லது இப்படியா ???


விஜய காந்த்

இப்படியா!!அல்லது இப்படியா ???

>

ஆணாதிக்கமும்,பெண்ணடிமைத்தனமும்

ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் பற்றி ஊடகங்களில் அறியப்படும் போது நினைத்து கொள்வேன் இப்படியெல்லாம் நடக்குது போல அப்படின்னு.ஆனால் உண்மையில் அவ்வாறு பேசுகிறவர்கள் ரொம்பவும் மிகை படுத்தி சொல்லுகிறார்களோ என்று. இப்போது தோன்றுகிறது. (இப்போது =கல்யாணத்துக்கு பிறகு)


ஒரு பெண்ணை எந்த ஆண் அடிமை படுத்த முடியும்? ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான ஆண்கள் யார்? யார்? தகப்பன், சகோதரன்,கணவன்,மகன் இந்த நான்கு ஆண்களில் எந்த நிலையில் இருக்கும் ஆண் ஒரு பெண்ணை அடிமை படுத்துகிறான்.


தகப்பன்

எந்த ஒரு பெண்ணும் என் அப்பா ஒரு ஆண்! அதனால் தன் ஆணாதிக்க புத்தியை என் மீது காட்டி அடக்குகிறார் அல்லது, கொடுமை படுத்து கிறார் என சொல்லுவார்கள் என நினைக்க முடியவில்லை.எனவே அப்பாவை விட்டுடுவோம்.

சகோதரன்

பெரும்பாலும் பெண்கள் தன் அண்ணன் தம்பிகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் தான். இருந்தாலும், சில,பல இடங்களில் சச்சரவுகள் ஏற்படுகிறது.ஒரு சகோதரன் தன் சகோதரியை கண்டிக்கும் போது இருவருக்கும் சிறு சல சலப்பு ஏற்படுகிறது. உதரணமாக சகோதரியின் உடை விஷயங்கள் ,வெளியே செல்லும் விசயங்களில் சகோதரன் கண்டிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இங்கே சகோதரிகள் ஒன்றை புரிந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். பெண்கள் பேசும் ஒரு வசனம் உண்டு அதாவது ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும் என்று. எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியுமோ அதேபோல ஒரு ஆணின் புத்தி இன்னொரு ஆணுக்குதான் தெரியும்.


சில வகை உடைகள் அணிந்து செல்லும் போதோ,அல்லது தனியே வெளியில் செல்லும் போதோ? அந்த சகோதரியின் மீது மற்றவர்கள் பார்வை எப்படி விழும் என்பது அந்த சகோதரனுக்கு நன்றாக புரியும்! அதை அவனால் அவன் சகோதரியிடம் வெளிப்படியாக சொல்லி விளக்க முடியாது.அதை சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.அந்த நேரத்தில் அந்த சகோதரன் கோபத்தை வெளிப்படுத்தினால் அது அன்பாலும்,அக்கறையாலும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்! அதோடு வீட்டுக்கு தெரியாமல் காதலிக்கும் பெண்களுக்கு சகோதரர்கள் முதல் எதிரியாக தோன்றுகிறார்கள்.

ஒரு சகோதரன் தன் சகோதரிக்கு கணவனாக வருகிறவன், தன்னை விட அறிவிலும் அந்தஸ்திலும், திறமையிலும் ,வசதியிலும் உயர்ந்தவனாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறான். அதே சமயம் ஒரு சகோதரி தன் சகோதரனுக்கு பெண் பார்க்கும் போது வருகின்ற பெண் தன்னிடம் இணக்கமாக இருக்கவேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருப்பதாக சிலர் சொல்லுகிறார்கள் . (சிலர் சொல்லுகிறார்கள் -எஸ்கேப்பு ).

ஒரு சகோதரன் சகோதரி மீது அதிகாரம் செலுத்தினால் அது அந்த சகோதரி மீது கொண்ட அக்கறையால்தான்.

கணவன்

ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் இந்த பிரச்சினையின் வேர் இங்கே தான் இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது.ஆனால் நன்கு புரிந்து கொண்டு, விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுபவர்களிடம் எந்த பிரச்சனையும் தோன்றுவதில்லை. மேலும் திருமணமான புதிதில் இருக்கும் அந்த ஆணாதிக்க பிரச்னை நாளாக நாளாக வீரியம் குறையும் என்பது என் நம்பிக்கை.

கணவன் மனைவி சண்டையில் விட்டு கொடுப்பவரே புத்திசாலி ஆகிறார்.இப்படி விட்டு கொடுத்து போகும் போது ஆணாதிக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இவர்கள் சண்டையில் விட்டு கொடுப்பவர் புத்திசாலி ஆகிறார் விட்டு கொடுக்காதவர் முட்டாளாகி போகிறார். நான் பலதடவை தங்க மணியிடம் சண்டை வரும்போது டென்சனாகி,கோவத்தின் உச்சிக்கு சென்று,கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் இதற்குமேல் பொறுத்து கொள்ள கூடாது இதற்க்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற எண்ணத்தில் பல தடவை அடங்கி போய் இருக்கிறேன்.இப்போது எனக்கு புத்தி சாலி ஆகிவிட்டோம் என்ற நினைப்பு! அதேபோல பல தடவை தங்க மணியும் புத்திசாலி ஆகி இருக்கு! அப்போதெல்லாம் நான் முட்டாளாகி இருக்கிறேன்.

பெரும்பாலும் ஆணாதிக்க பிரச்சனையில் விவாதிப்போர் குடித்து விட்டு மனைவியை அடிப்பவர்களை பற்றியே அதிகம் பேசுகிறார்கள், மனைவி மட்டும் தான் அடி வாங்குகிறார்களா? புருஷன் மப்புல இருக்கான் இப்போ அடிச்சா ஒன்னும் தெரியாது அப்படின்னு மப்புல வைச்சு மொக்குற தங்க மணிகளும் உண்டு !

காலைல முழிச்சு முதுக வலிக்குது நேத்து என்னை அடிச்சியான்னு அப்பாவியா கேக்கும் ரங்க மணிகள் எவ்ளோ பேர் ? (சொந்த அனுபவம் ஏதும் இல்ல)

நான் என் புருசன தெய்வமா மதிக்கிறேன்,அவர் மேல உசிரையே வைச்சு இருக்கேன் அதனால நான் விட்டு கொடுத்து அவர முட்டாளாக்க விரும்பல அப்படின்னும், என் பொண்டாட்டிதான் எனக்கு எல்லாமே அவ இல்லாட்டி நான் இல்ல அதனால நான் விட்டு கொடுத்து என் பொண்டாட்டிய முட்டாளாக்க விரும்பலன்னும் சொல்லி கமென்ட் போட வேணாம்னு என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளை அன்போடும்,பாசத்தோடும் பணிவோடும் கேட்டு கொள்கிறேன்.


மகன்

எந்த பெண்ணும் தன் மகனை இவன் ஆணாதிக்க கர்வம் பிடிச்சவன் என்று எப்போதும் சொல்ல போவது இல்லை அதனால் இதை பற்றி ஒன்றும் சொல்ல தேவை இல்லை.

பொதுவானவை

தகப்பன்,சகோதரன்,கணவன்,மகன் இவர்களை தவிர வேறு யாரேனும் ஒரு பெண்ணிடம் ஆதிக்கம் செலுத்திவிட முடியுமா? அப்படி நடந்தால் அதை பார்த்து கொண்டு இவர்கள் சும்மா இருந்து விடுவார்களா?

பணிக்கு செல்லும் இடங்களில் பெண்களுக்கு ஆணாதிக்க பிரச்னை இருப்பதாக சொல்ல படுகிறது. இதை வீட்டில் சொல்ல முடியாமல் இருக்கலாம் இந்த பிரச்சனையை பெண்கள் தைரியத்துடனும்,லாவகத்துடனும் எதிர் கொள்ள வேண்டும் . ஒருவன் தான் பதவியில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மற்றவர்களிடம் அதிகாரம் செலுத்தினால் அவன் நிஜத்தில் ஒரு கோழை யாகத்தான் இருப்பான்!

மேலும்,

எங்கள் நாட்டு பெண்கள் கலாச்சாரத்திலும்,கண்ணியத்திலும்,பண்பாட்டிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் இங்கே எல்லோருக்குமே உண்டு.அதன் பொருட்டு சில நவ நாகரிக
நங்கைகளின் உடை ,மற்றும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் போது அதை
ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என திரித்து கூறப்படுவதாக தோன்றுகிறது.நான் என் தாயை தாயாகத்தான் பார்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் சகோதரியை சகோதரியாகத்தான் பார்க்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் மனைவியை மனைவியாகத்தான் பார்க்கிறேன்!ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!

நான் என் மகள்களை மகள்களாக தான் பார்க்கிறேன்! பெண்களாக பார்க்கவில்லை!பெண்களும் அவ்வாறே இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்னையும் இல்லை!

தன் உறவுகள் அல்லாது வேறு இடங்களில் ஒரு பெண் மீது யாராவது ஆதிக்கம் செலுத்த முற்பட்டால்? அவர் அதை தன் உறவுகளில் துணை கொண்டோ ? அல்லது தனித்தோ ?வைர நெஞ்சுடனும்,உறுதி கொண்ட உள்ளத்துடனும் எதிர்த்து போராட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் ஆணாதிக்கம் என்ற சொல்லே இல்லாமல் போய் விடும்.


------------------------------------------------------------------------------------

>

''கை'' க்கு தான் என் ஓட்டு

உணவுக்கு ஏங்கும் இந்த ''கை '' களை பாருங்கள்!மடியில் கிடக்கும் இந்த குழந்தையின் ''கை'' யை பாருங்கள்!


தலையில் அடித்து கொண்டு அழும் இந்த பெண்களின் ''கை'' களை பாருங்கள்!


துணியை நீக்கி முகத்தை தேடும் இந்த தாயின் ''கை'' பாருங்கள்!


பாருங்கள்! பாருங்கள்!! இந்த சகோதரியின் ''கை'' களை!
இந்த குழந்தையை அரவணைத்த அந்த குழந்தையின் ''கை'' யை பாருங்கள்!

இறுதியாக இந்த''கை'' யை ஒரு கை பாருங்கள்!!!!


-----------------------------------------------------------------------------------

>

எங்க ஊர் கோயில்

சித்திரை ஒண்ணாம் தேதி எப்போதும் எங் ஊருக்கு போய்டுவோம். எங்க பூர்வீக கிராமத்துல ஒரு பெருமாள் கோயில் இருக்கு அந்த கோயில் சித்திரை ஒன்னு அன்னிக்கு எங்க குடும்பத்து மண்டகப்படி. இப்போ என் பொண்ணுக்கு சித்திரை க்கு முன்னாடியே லீவ் விட்டது வசதியா போச்சு!
அந்த ஊர் மற்றும் கோயில் பத்தி கொஞ்சம்....

காரப்பங்காடு

முன் காலத்தில் அதிக மக்கள் வசித்த கிராமம் . கோயில் வாசலில் அக்ரகாரம். நகை தொழில் செய்பவர்கள் வசிக்கும் ஒரு தெரு, மற்றும் விவசாய மக்கள் நெறைய பேர் இருந்தாங்களாம். இப்போ சுமார் ஆயிரம் பேருக்கும் குறைவான மக்களே அங்க வசிக்குறாங்க! ஒரு நாளைக்கு ரெண்டு தடவ ஒரு பஸ் வந்துட்டு போகுது!

அபீஷ்ட வரத ராஜ பெருமாள் திருகோயில்


மக்கள் தொகை குறைவா இருந்தாலும் சுத்தி வயல் வெளியால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் கம்பீரமா இருக்குது இந்த கோயில் மட்டும் தான் . நல்ல பராமரிப்புடன் நேர்த்தியா வைச்சு இருக்காங்க!
108 வைணவ திருதலங்கள்ள இதுவும் ஒன்னு!

ஸ்தல விருட்சம்

இந்த கோயிலின் ஸ்தல விருட்சம் பாதிரிபூ மரம். சிவப்பு பாதிரிபூமரம்,வெள்ளை பாதிரி பூமரம் அப்படின்னு ரெண்டு மரமும் அங்க இருக்கு !பாதிரி பூமரம் ஸ்தல விருட்சமா இருக்குறது இந்த கோயில் ல மட்டும்தானாம் இந்த தகவல அங்க அர்ச்சகரா வேலை பார்குற ஐயர் சொன்னாரு !

ரொம்ப சின்ன கிராமத்துல இருந்தாலும் நகரத்துல இருக்குதுபோல இந்த கோயில நல்லா பராமரிசுக்கிட்டு வராங்க!
கோயில் இருப்பிடம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்து மதுக்கூர் இருந்து காரப்பங்காடு சரியா எட்டு கிலோ மீட்டர். ராஜ மன்னார்குடி இருந்து மதுக்கூர் வழியா முப்பது கிலோ மீட்டர்.

கீழ் கண்ட சுட்டிகளில் இந்த கோயில் பத்தின சில விஷயங்கள்......


http://www.hindu.com/fr/2004/02/27/stories/2004022701720400.htm

http://www.hindu.com/thehindu/nic/vishnu/index.htm

http://www.youtube.com/watch?v=ஸ்கஃஹ்த௬வ்க்


----------------------------------------------------------------------------------

>