இதுவும் எனது தளம் தான்..!


ரத்தின கற்களை பற்றி எனக்கு கொஞ்சம் அனுபவம் இருப்பதால் இந்த கண்ணாடி தளத்திலேயே ரத்தின கற்கள் பற்றி எழுதலாம் என நினத்து இருந்தேன் ஆனால்..!ஒன்றிரண்டு பதிவுகளில் கற்களை பற்றி விளக்கி விட முடியாது அதிக பதிவுகள் வரும் , மேலும் சில சங்கடங்களும் வரும்

அதாவது அலைபாயும் மனதை அடக்க இந்த கல்லை அணியலாம் என முதல் நாள் சொல்லிவிட்டு மறு நாள் நமீதா ரசிகன் என்றோ அல்லது குடிப்பதை பற்றியோ பதிவிட்டால் முன்னுக்கு பின் முரணாக இருக்கும்.அது வேறு இதுவேறு..! எனவேதான் அதிஷ்ட கற்களை பற்றி தனியாக ஒரு தளம் உருவாக்கினேன்.இந்த தளம் உருவாக்கி ஒரு வருடம் ஆக போகின்றது.


30 பதிவுகள் அதில் எழுதி இருக்கின்றேன் . இது என் தளம் என்று ஒரு சிலரை தவிர யாருக்கும் தெரியாது.! ஆரம்பத்திலேயே இது என் தளம் என சொல்லி இருந்தால் நண்பர்கள் ஆதரவு அதிகம் கிடைத்து இருக்கும் ஆனால்இதன் உண்மையான நிலை எனக்கு தெரியாமல் போய் இருக்கும் குறைந்த பட்சம் ஒரு 50 பாலோயர் ஆன பிறகு வெளிபடுத்த இருந்தேன்.இப்போது 50 பாயோலர் ஆகிவிட்ட படியால் இதனை வெளிப்படுத்துகிறேன்.

சில ஜோதிட நண்பர்களின் உதவி கொண்டு பலருக்கு அதிஷ்டகல் பரிந்துரை செய்யபட்டும் உள்ளது இந்த தளத்தின் மூலம்.

>