எந்திரன் - தினமணி இப்படி செய்யலாமா ... ?

சமீபத்தில் தினமணி எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்! என்ற ஒரு கட்டுரை எழுதுயது அதில் பல ஏற்று கொள்ள கூடிய நியாயங்கள் இருந்தன அந்த கட்டுரை வரவேற்ப்பையும் பெற்றது. அக்கட்டுரையில் கீழ் கண்ட வாசகங்கள் இருந்தன .


/// தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''


படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!
///

எதோ முதலாளித்துவத்தை எதிர்ப்பதாகவும் பாதிக்கப்டுவோருக்கு குரல் கொடுப்பதாகவும் கட்டிக்கொள்ளும் தினமணி செய்த காரியம் என்ன தெரியுமா?செய்தியை வெளியிடுவதுபோல
தற்போது இணையத்தில் எந்திரன் வெளியான சுட்டியை வெளியிட்டு உள்ளது.


இதனால் பாதிக்க படுபவர்கள் சன் குழுமமோ சங்கரோ அல்ல கோடிகணக்கில் வட்டிக்கு பணம்வாங்கி தியேட்டரில் திரையிட்டு போட்ட பணத்திற்கு காத்திருக்கும் பட வியோகஸ்தர்கள் மட்டுமே ..!

இப்படி எந்திரன் வெளியான இணையதள சுட்டியை வெளியிட்டு விநியோகஸ்தர்கள் பிழைப்பில் மண் அள்ளிப்போடும் தினமணி செய்வது சரியா..?


>