அந்தமானும்,பழங்குடியினரும்...!


அந்தமான் என்றால் அழகு ..! நான் அந்தமானில் பிறந்தவன்..! நான்காம் வகுப்புவரை அங்கு படித்தவன் அதன்பிறகு தமிழகத்துக்கு வந்தாயிற்று ..!அந்தமான் என் சொந்த பூமி என்றஎண்ணம் எப்போதும் உண்டு .! அந்தமானை பற்றிய எந்த ஒரு சிறிய தகவலும் எனக்கு முக்கியமானது ..! அந்த வகையில் அந்தமானில் தோன்றி வளர்ந்து வாழ்ந்துவரும் ஜார்வாகள் எனப்படும் பழங்குடி பற்றிய ஒரு அதிர்ச்சி செய்தியை பற்றியது இந்த பதிவு ..!

அந்தமான் பழங்குடி மக்களை பற்றி நான் அறிந்த தகவல்களை அந்தந்த காலங்களுக்கு ஏற்றபடி வரிசை படுத்துகின்றேன் ..! இந்த காலத்தில் மனிதனின் மனிதத்தின் போக்கு எப்படி இருக்கின்றது பாருங்கள் .

1978-80

அப்போது இந்த பழங்குடி மக்களின் புகை படங்கள் சில கடைகளில் விற்பனை செய்வார்கள் . அரை குறை உடையுடன் குழந்தைகளும் பெரியவர்களுமாய் இருப்பார்கள்.!இவர்களை பற்றி அப்போது வீட்டில் கேட்கும்போது ..!

இவங்கல்லாம் யாரு ....?

இவங்கல்லாம் காட்டு மனுசங்க ..!

இவங்கள பாக்க முடியுமா ..?

ஐயோ ..! அதெல்லாம் முடியாது அவங்க கிட்ட போனாலே அம்பு வீசி நம்மள கொன்னுடுவாங்க ..!

இங்கல்லாம் வருவாங்களா ..?

இல்ல ஊருக்குள்ள வர மாட்டாங்க அவங்க காட்டுக்குள்ள மட்டும் தான் இருப்பாங்க...!

இப்படித்தான் சிறு வயதில் அவர்கள் எனக்கு அறிமுகம் அவர்களை நினைத்தால் ஒரு பயம் எப்போதும் உண்டு ..!

அந்த கால காலகட்டத்திலேயே சிலர் சில காட்டு வாசிகள் நகர மக்களுடன் கலந்து வாழ்ந்து வந்தனர் அவர்களை நான் பார்த்தும் ருகின்றேன்.! மிகவும் கருப்பாக சுருள் முடியுடன் இருப்பார்கள் சகஜமான நாகரிக உடையுடன் இருந்தாலும் அவர்களை பார்க்க பயமாக இருக்கும் அப்போது ..!

1980 க்கு பிறகு நங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டாலும் உறவினர்கள் நிறைய பேர் அந்தமானில் இருந்தனர் அவர்கள் வரும்போது அந்தமானை பற்றி விசாரிப்பது உண்டு .!

சில வருடங்களுக்கு பிறகு ..!


அந்தமான் காட்டுவாசிங்க இப்போதும் இருக்காங்களா ..!

ஒரு சில பகுதில இருக்காங்க அந்த பக்கம் பஸ் கூட போகும். மறைஞ்சு இருந்து அம்பு எதாச்சும் விடுவாங்கன்னு பஸ்ல எல்லாம் துப்பாக்கியோட போலிசும் பாதுகாப்புக்கு வரும் ..!

இன்னும் சில வருடங்களுக்கு பிறகு ..!

அந்த பக்கம் பஸ் போகும் போது குறுக்க மறிச்சு நாம கொண்டு போற உணவு பொருள்களை புடுங்கிக்கிறாங்க..! சில சமயம் பஸ் மேல ஏறிக்கிறாங்க அவங்க இடம் வந்ததும் தானா எறங்கிக்குவாங்க .நம்ம மேல தாக்குதல் எதும் நடத்துறது இல்ல ..!

அவங்கள கூப்பிட்டு மத்தவங்க போல வாழ வைக்க முடியாதா ..?

இல்ல அவங்க வர பயப்படுறங்க ஆனாலும் சிலர் வந்து இருக்காங்க..! ட்ராபிக் போலிசா ஒரு லேடி வேலை செய்யுது.! அந்தமான் ஆஸ்பத்திரில கூட சிலர் வேலை செய்றாங்களாம் ...!


இன்னும் சில வருடங்கள் கழித்து ....!

அவங்க இப்போ ரொம்ப குறைஞ்சு போய்ட்டாங்க..!கொஞ்சபேர் மட்டும் இருக்காங்க ..! அந்த பக்கம் பஸ்,வண்டி எதும் போனா எதாச்சும் திங்கிறபொருள் கேட்டு பின்னாடியே ஓடி வராங்களாம் ..! முழு அந்தமானுக்கும் சொந்தமான பூர்வ குடிமக்களின் நிலைமை இதுதான்..!
தற்ப்போதைய செய்தி...!

மற்றும் நிகோபார் தீவில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்திற்காக, அங்கு வாழும் ஜாராவா பழங்குடியினரை அரைநிர்வாண நடனம் ஆட வைத்து அதனை ஆங்கில சேனல்கள் வீடியோ எடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அந்தமான் மற்றும் நிகோபார் சிலநாட்களுக்கு முன்பு அங்கு கடை வைத்திருந்தவர் மற்றும் ஆட்டோ டிரைவர் என 2 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், அரை நிர்வாண நடனத்தை வீடியோ எடுக்க உதவியதாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு காலத்தில் இவர்களை பார்த்து அஞ்சி நடுங்கினான் நாகரீக மனிதன்..!
இன்று இவர்களை கோமாளிகள் போல ஆகிபோனார்கள்..!

நவயுகமனிதனின் நாகரீக வளர்ச்சியின் இன்னொரு முகம் இதுதானோ..???>