வெல்கம் மிஸ்ட்டர் சனிபகவான்...!


ஏழரைசனி,சனிபெயர்ச்சி, இந்த வார்த்தைகள் மிரட்டத்தான் செய்கின்றன..! ஆனால் உண்மையில் சனி பகவானை போல நன்மை செய்ய கூடிய கிரகங்கள் வேறு எதுவுமில்லை. சனி ஒரு நீதிமான்..! முக்கியமாக ஏழரை சனி காலத்தில் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி அடந்தவர்கள் பலர்..! அது அவர்களது தசா புத்தி பலன்கள் என சொல்லிவிடுவார்கள் ஆனால் நிச்சயம் அது சனியின் வேலைதான்.

ஏழரை சனியையோ அல்லது சனியால் பாதிப்பு அடையும் நிலையிலோ இருப்பவர்கள் உங்கள் கடந்த காலங்களில் உங்கள் செயல்களை
மனசாட்சியுடன் அசைபோட்டு பாருங்கள்.. யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் நன்மை மட்டுமே செய்து வந்து இருக்கின்றீர்களா..? அப்படிஎன்றால் டோண்ட் வொர்ரி..! ஏழரை சனியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்..! இந்த காலத்தில் மிக உன்னத பலன்கள் உங்களுக்கு காத்து இருக்கின்றன.

ஆனால்.! தவறு செய்து இருந்தால்..! சனியிடம் இருந்து தப்பிக்கவே முடியாது.! தண்டனை நிச்சயம்..! தவறு செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க பரிகாரம் செய்கிறேன் என்று ஜோசியருக்கு செலவு செய்யாதீர்கள்.அதற்க்கும் சேர்த்து தண்டனை கிடைக்கும். கண்டபடி தவறு செய்துவிட்டு காக்கைக்கு சாதம் வைத்தால் சரியாகிவிடுமா..?
செய்த தவறுக்கு மனமுவந்து தண்டனையை ஏற்று கொள்ளுங்கள். சனியிடம் மட்டும் கணக்கு பாக்கி வைக்க வேண்டாம்.

சரி நல்லா யோசித்து பார்த்து விட்டேன் நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை ஆனால் சனி என்னை பாடாய்படுத்துகின்றதே என சிலர் புலம்பலாம்..! ஆனால் ..! அவர்கள் எதிர்காலத்தில் அடைய போகும் வெற்றிக்கு தயார் படுத்தவே சனி ஒரு மிக சிறந்த அனுபவத்தை கொடுக்கின்றான்.

ஏழரை சனி காலம் ஒரு மனிதருக்கு மிக முக்கியமானகாலம். தவறு செய்தவர்கள் தண்டனை பெற்று புதிய மனிதராகலாம். தவறு செய்யாதவர்கள் மிக சிறந்த அனுபவ பாடங்களை பெற்று எதிர்காலத்தை வளபடுத்திகொள்ளலாம். நிறைய நன்மைகள்,புண்ணிய காரியங்கள் செய்தவர்கள் மிக சிறந்த பரிசுகளை பெறலாம். புண்ணிய காரியங்கள் என்பது இயற்கையானதாக இருக்க வேண்டும் விளம்பரத்துகாக செய்யபடுகின்ற அன்னதானங்கள் புண்ணிய கணக்கில் சேராது.


இப்படி எல்லா வகையிலும் நன்மை செய்ய கூடிய சனி பகவானை மனமுவந்து வரவேற்போம் ..!

>