வளர்த்த கடா ஏன் மார்பில் பாயாது ..???



வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக ..! இந்த பழ மொழியில் கடா சைடில் தான் குற்றம் சொல்ல படுகிறது . வளர்த்த பிள்ளைகள் பெற்றோரை எதிர்ப்பதற்கு உவமையாக இந்த மொழி சொல்ல பட்டாலும், உண்மையில் இந்த மொழி பொருத்தம்தானா ? கிடா பக்கம் இருக்கும் நியாயத்தையும் பார்க்க வேண்டுமல்லவா ...?

ஒரு ஆட்டு கடாவை எதற்காக வளர்கிறார்கள் ...? ஒன்று எதாவது நேர்த்தி கடனுக்கு பலி கொடுக்க ,அல்லது கசாப்பு கடைக்கு விற்க ..!அல்லது பிரியாணிக்கு ..!சில இடங்களில் மட்டும் சண்டை கடா வளர்கிறார்கள் அது விதி விலக்கு ...!




தன்னை அன்போடும் பாசத்தோடும் வளர்த்த ஜமானன், பலி கொடுப்பதற்காகவும் ,அல்லது கசாப்பு கடையில் விற்பனை அல்லது பிரியாணி செய்து சாப்பிடவும்தான் இத்தனை அன்பையும் பாசத்தையும் காட்டினான் என்பது அந்த அப்பாவி ஆட்டுக்கு தெரிய வரும்போது அந்த வளர்த்த கடா ஏன் மார்பில் பாயாது ...???



....
>