சபரிமலை + சில புண்ணிய தலங்கள் பயண அனுபவம் படங்களுடன்...! 150 வது பதிவு...!

இதுவரை பெரும்பாலும் நேராக மலைக்கு சென்றுவிட்டு பழனி வந்து ஊருக்கு வருவது வழக்கம் . ஆனால் இந்த தடவை ஒரு சி புண்ணிய தலங்களுக்கு சென்று வந்தோம். சென்னை பெரம்பூரில் மதியம் ஒரு மணி அளவில் 16/12/2010 அன்று புறப்பட்டோம். டெம்போ ட்ராவலர் வண்டி மொத்தம் ஒன்பது பேர் மேலும் இருவரை தஞ்சை மாரியம்மன் கோவில் சென்று அழைத்து செல்ல வேண்டும்.

சிதம்பரம்
மதியம் வண்டி புறப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் முதலில் சென்றது சிதம்பரம் நடராஜர் கோவில் மாலை ஏழு மணிக்கு போய் சேர்ந்தோம் மார்கழி துவக்கம் கோவிலில் நல்ல கூட்டம் எதோ பூஜை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. கோவிலின் வெளி மண்டபத்தில் சீர்காழி சிவ சிதம்பரம் கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் கச்சேரி பார்த்துவிட்டு புறப்பட்டோம்.

திரு சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் கச்சேரி

அடுத்து நாங்கள் சென்றது திருவாரூர்.

திருவாரூர்





நள்ளிரவில் திருவாரூரை அடைந்தோம். அங்கேயே இரவு தங்கல் . மார்கழி அதிகாலையில் கோவிலில் மரகத லிங்க அபிசேகம் நடைபெறும் அதை காண்பது என ஏற்பாடு. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தெப்ப குளத்தில் தொப்பென விழுந்து குளித்துவிட்டு அரைகுறை ஈரத்துடன் குளிர் நடுக்கத்தில் கோயிலுக்குள் சென்றோம். அபிஷேகம் முடிந்தவுடன் கிளம்பினோம் தஞ்சை அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து எங்களுடன் வர இருந்தவர்களை அழைத்து செல்ல வண்டி புறப்பட்டது செல்லும் வழியில் எண்கண் முருகன் கோவில் இருந்தது .
எண்கண் முருகன் கோவில்


சிக்கல் முருகன் கோவில் சிலை வடித்த சிற்பியான சில்பமுனிவரின் கட்டை விரலை வெட்டி விடுகிறான் சோழ மன்னன் அதுபோல வேறு சிலை செய்ய கூடாது என்பதற்காக..! அடுத்து அதே சிற்பியை வைத்து எட்டுக்குடி முருகன் சிலையை செய்த பின்னர் சில்பமுனிவரின் கண்களையும் தோண்டிவிடுகிறான்
சோழன். கட்டை விரலும் இல்லாமல் கண்களும் இல்லாமல் சில்பமுனிவர் ஒரு சிறுமியின் துணையுடன் செய்ததுதான் இந்த எண்கண் முருகன் சிலை. பிறகு அவருக்கு கட்டைவிரலும் கண்களும் கிடைத்தனவாம் இதுதான் இந்த கோவிலின் மினி வரலாறு. நெக்ஸ்ட் ...

புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்

நான் நினைத்ததைவிட கோவில் பெரிதாய் இருந்தது சமய புரம் கோவில் போல இருந்தது . அங்கே நண்பர்கள் இருவரை அழைத்து கொண்டு வண்டி எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு புறப்பட்டது.

எட்டுக்குடி முருகன் கோவில்

சிறிய வயதில் இங்கே வந்தது உண்டு . நல்ல பிரசித்தி பெற்ற கோவில். தரிசனம் முடித்து அங்கேதான் மதிய உணவு . மழை பெய்ய ஆரம்பித்தது . மழையில் நனைந்தபடியே பயணம் ராமேஸ்வரம் நோக்கி தொடர்ந்தது .

அதிக போக்கு வரத்து இல்லாத கிழக்கு கடற்கரை சாலை

இராமேஸ்வரம்



இரவு வந்து சேர்ந்தோம் கடற்காற்று, நல்ல குளிர் அறை எடுத்து தங்கினோம் அதிகாலை எழ வேண்டும். காலை ..கடல் குளியல் அடுத்து அனைத்து தீர்த்தங்களிலும் குளித்துவிட்டு. வண்டியில் ஏறினோம் ராமர் பாதம்,பாம்பன் பாலம்,பார்த்து விட்டு ராமநாதபுரத்தில் மதிய உணவு . அவசரமாக புறப்பட்டோம் மாலைக்குள் திருச்செந்தூர் செல்ல வேண்டும்.

திருச்செந்தூர்




மீண்டும் கடல் குளியல் . செம்மண் நிற கடல் ஜாலியான குளியல். சில இடங்களில் கடலில் பாறைகள் தட்டுபட்டன. அங்கேயே இரவு போஜனம் நள்ளிரவில் நாங்கள் வந்து சேர்ந்தது கன்னியா குமரி.

கன்னியா குமரி


இரவு அறை எடுத்து தங்கினோம். அதிகாலையில் சூரிய உதயம் காண திட்டம் . அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கடும் கடற்குளிரில் கதிரவனுக்கு வெயிட்டிங்.
நோ யூஸ் வெளிச்சம் வந்தது சூரியன் வரவே இல்லை. நல்ல பனி மேக மூட்டம்.
ஏமாற்றத்துடன் அறைக்கு திரும்பினோம் பொருட்களை எல்லாம் வண்டியில் வைத்து விட்டு போட்டிங் முடித்து நேராக வண்டிக்கு செல்ல பிளான். ஆனால் அதிலும் மண். கடும் கடல் சீற்றம்,பலத்த காற்று அதனால் படகு போவதை நிறுத்திவைத்து இருந்தார்கள். வெறுப்பாகி கோவத்துடன் குற்றாலம் நோக்கி புறப்பட்டோம்.

குற்றாலம்


எனக்கு மிக பிடித்த இடம் ஆனால் இப்போது பிடிக்கவில்லை. இங்கே வருவதற்கென ஒரு முறை இருக்கிறது அப்படி வரவேண்டும்.
அடுத்து எரிமேலி அங்கிருந்து வண்டி பெரியார் வழியே புல்மேடு சென்று சபரிமலை நோக்கி இறங்கினோம்.காலை ஆறு மணி அளவில் இறங்க துவங்கி நல்ல கூட்டத்தில் தரிசனம் முடித்து இரவுதங்கி அதிகாலை மீண்டும் மலை ஏற்றம் . மதியம் குமுளி.
குமுளி

எப்போதும் சில மளிகை பொருட்கள் இங்கே வாங்குவது வழக்கம். மிளகு,பட்டை,கிராம்பு,ஏலக்காய் மேலும் சில பிரியாணி பொருட்கள்.
அடுத்து நம்ம பழனி.

பழனி



இரவு தங்கி காலை எழுந்து படியேறி முருக தரிசனம் பஞ்சாமிர்தம் குழந்தைகளுக்கு சில பொருட்கள் வாங்கி புறப்பட்டோம். அடுத்து நாங்கள் சென்றது ...................!










போதுங்க............ மலைக்கு போறேன்னு மாலை போட்டுக்கிட்டு அந்த சாக்குல ஊர் சுத்தினது போதும் சீக்கிரமா வீடு வந்து சேருங்கன்னு அவங்கவங்க வீட்டு தங்கமணிகள் சீறவே .... புள்ளையா லட்சணமா வீடு வந்து சேர்ந்தோம்..!


.......................

>

தினத்தந்தியின் ’’வரலாற்றுச்சுவடுகள்’’ ஓர் அரிய பொக்கிஷம்


தினத்தந்தி நாளிதழில் வரலாற்றுசுவடுகள் தொடர் வந்தபோது பல வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன். சில வரலாற்று நிகழ்வுகளை தொகுக்க விரும்பி பழைய செய்தித்தாள்களை சேமித்து வைத்து இருந்தேன் . ஆனால் செய்யவில்லை ..! தற்போது அந்த வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக புத்தகமாக வெளிவரும் என கனவிலும் நினைக்கவில்லை எனக்கு இது மாபெரும் இன்ப அதிர்ச்சி ..! அருமையாய் இருக்கிறது புத்தகம் . முழுக்க முழுக்க ஆர்ட் பேப்பர் 842 பக்கங்கள் அனைவரிடமும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய புத்தகம் இது ..!

இரண்டாம் உலக போர்
உலக முக்கிய நிகழ்சிகள்
இந்திய சுதந்திர போராட்டம்
இந்திய அரசியல்
இந்திய முக்கிய நிகழ்சிகள்
தமிழக அரசியல்
தமிழக முக்கிய நிகழ்சிகள்

ஆகிய தலைப்புகளில் தொகுப்பு உள்ளது.

விலை 300 ரூபாய்
>

செத்துட்டோம்ல....!


நச நச என தூறல் ...! இன்னும் சற்று நேரத்தில் முழுதாக இருள் கவ்விவிடும்
நான் இருப்பது கும்மிருட்டான ஒரு திடல் . ஆங்காங்கே சில மரங்கள் . வெகு தூரத்தில் சில குண்டுபல்புகள்..! அடர்ந்த பனிபொழிவில் பல்பின் வெளிச்சம் எடுபடவில்லை.ஏதேதோ காட்டு பூச்சிகள் விதவிதமான ஓசை எழுப்பியபடி!
நான்மட்டும் தனியே அந்த இருளில் ..! பக்கத்தில் ஒரு பெருநெல்லிமரம் .. சில நெல்லிக்காய்கள் உதிர்ந்து கிடக்கிறது ...!

அந்த அடர் இருளில் யாரோ ஒரு உருவம் யாரது ...? நம் இனமா ...? உருவம் என்னை நோக்கி வர அருகில் சென்று பார்க்கிறேன் அது ஒரு பெண் ...! முகமெல்லாம் மஞ்சள் பூசி நெற்றியில் பெரிய குங்கும பொட்டு தலை முழுவதும் செவ்வந்தி பூ ...! எனக்கு சட்டென எதோ தோன்ற ஒரு உந்து உந்தி பறந்து செல்கிறேன் ...! அந்த உருவம் தன் வழியே செல்கிறது ..!

பறந்து வரும் வழியில் ஒரு குளம் ..! இந்த குளத்தில் நான் குளித்ததுண்டு குளத்தின் ஒரு மூலையில் மயானம் . மயானம் அருகில் செல்கிறேன் பச்சை தென்னை ஓலைகள் , மூங்கில்கள் வெட்டப்பட்ட நிலையில் ..! இன்று யாரோ நம் உலகிற்கு வருகை போல...! என்னை புதைத்ததும் இந்த மயானத்தில் தான் ..!
இரவு அங்கேயே கழிகிறது ..! காலை நல்ல வெய்யில் நேற்றைய மழை குளிரவும் இல்லை,இன்றைய வெய்யில் சுடவும் இல்லை .

மதியம் நெருங்குகிறது ..! நம்மால் எல்லாம் பார்க்க முடிகிறது ...? நம்மள யாரும் கண்டுகலையே ...! பேய் அடிச்சுட்டு பிசாசு அடிசுட்டுன்னு சொல்லுறாங்களே அது எப்படி ...? நாம யாரயாச்சும் பயமுறுத்தி பார்க்கலாம் ...! வயல் காட்டுப்பக்கம் போகலாம் ...! அதோ ஒருத்தன் தனியா வரான் அவன் எதிர்ல போய் ஒரு சவுண்டு
விடலாமா ..? அதான் சரி .. அவன் முன்னாடி போய் ஊஊஉய்ய்ய ன்னு ஒரு சத்தம் போடுறேன் ...! ச்சை என்ன இது.. சத்தமே வரல வெறும் காத்து கூட வரல அவன்பாட்டுக்கு போய்கிட்டே இருக்கான் ..? நம்மால சத்தம் போட முடியாது போல இருக்கே ...! சரி அவன் கிட்ட போய் ஒரு ஊது ஊதி பார்க்கலாம் அவன் காதுகிட்ட போய் வேகமா ஒரு ஊது ஊதுறேன் டக்குன்னு திரும்பி பார்க்குறான் ஆஹா வொர்க் அவுட் ஆயிடுச்சு
சுத்தி பார்த்துட்டு ஒரு பீடிய எடுத்து பத்த வைச்சுகிட்டு கொஞ்சம் கூட சலனமே இல்லாம போறான் ..!தண்ணி ஏதும் அடிச்சு இருப்பான் போல ..! ம்ம்ஹும் இவனை ஒன்னும் பண்ண முடியாது ...!

கொஞ்ச தூரத்துல ஒரு அம்மா தலைல ஒரு கூடயும் இடுப்புல ஒரு குழந்தையும் தூக்கிகிட்டு வராங்க அவங்ககிட்ட சேட்டை பண்ணி பார்க்கலாம் ..! இப்போ அந்த அம்மாகிட்ட போயி பலமா ஊதுறேன் ...! எதோ பயங்கர யோசனைல இருக்கு அந்த அம்மா ..! கொஞ்சம்கூட கண்டுக்கல ..! சரி அந்த குழந்தையையாவது பயமுறுத்தி பார்க்கலாம் ..! குழந்தை பின்னடிபோய் ஒரு ஊது ஊதுறேன் குழந்தைக்கு எதோ உணர்வு வெடுக்குன்னு திரும்பி பார்க்குது ..! திரும்பி பார்த்து ஈஈஈஈ ந்னு ஒரு சிரிப்பு சிரிக்குது என்னப்பா இது உயிரோட இருந்தப்போதான் யாரும் மதிக்கல இப்போ ஒரு குழந்தை கூட மதிக்கல..!

இனிமே யாரையும் பயமுறுத்த முயற்சி பண்ண வேணாம்...!

பக்கத்துல ஒரு கோயில் இருக்கு கோயில் பக்கம் எல்லாம் போக முடியாதுன்னு சொல்லுவாங்களே...! அதையும் முயற்சி பண்ணி பார்த்துடலாம். கோயில் கிட்ட நெருங்குறேன் எந்த தடையும் இல்ல..! சாமி சிலை வரை போக முடியுதே..!
ஆவிங்கல்லாம் கோயில் பக்கம் போக முடியாதுன்னு கதை கட்டி வைச்சு இருக்காங்க.

இந்த ஊருல பேய் ஓட்டுற பூசாரி ஒருத்தர் இருக்கார் அவர்கிட்ட போய் பார்க்கலாம் நம்மல தெரியுதான்னு...! பூசாரி வீடு நெருங்க நெருங்க பலமா உடுக்கை சத்தம் கேக்குது. அங்க ஒரு பத்து பன்னெண்டு பேர் இருக்காங்க ஒரு பொண்ணு தலைவிரி கோலமா ஆடிட்டு இருக்கு அந்த பொண்ண சாட்டையால அடிச்சுகிட்டு இருக்கார் பூசாரி..! மனசுல நெறய ஆசையோட அல்பாயுசுல செத்துபோன ஒருத்தன் ஆவி ஆசை அடங்காம இந்த பொண்ணு ஒடம்புல இருக்கு அத வெரட்டாமவிட மாட்டேன்னு சொல்லிகிட்டே பூசாரி அந்த பொண்ண போட்டு அடிக்கிறார். நான் நேரா போய் அந்த பூசாரி பக்கத்துல நிக்குறேன் சுத்தமா அவருக்கு நான் இருக்குறது தெரியல. அந்த பொண்ணு கிட்ட போறேன் அந்த பொண்ணுக்கும் தெரியல ..! நிஜமான ஆவி நான் இங்க இருக்கேன் என்னை கண்டு புடிக்க முடியல இவர் பேய் ஓட்டுராராம் பாவம் அந்த பொண்ணு. சரி உண்மையிலேயே ஒரு ஆவி அந்த பொண்ணு ஒடம்புல இருந்தா கூட சாட்டையால அடிச்சா வலிக்கவா போகுது...?


மெதுவா வந்து கொளத்துகரைல உக்காந்து யோசிக்கிறேன்..! நெறய ஆசையோட செத்தா ஆசை அடங்காம ஆவியா அலைவாங்கலாம்..! நினைச்சா சிரிப்பாதான் வருது..! நான் கூட நெறய ஆசையோடதான் செத்தேன் அப்படி ஒன்னும் அலையலையே..! எவ்ளோ சுகமா இருக்கு இந்த இடம் பசியில்ல,வெய்யில் இல்ல, குளிர் இல்ல, மரத்துல இருக்கலாம், மலைமேல இருக்கலாம்,மேகத்தோடு பயணம் செய்ய்லாம் , காத்தோடு காத்தா எங்க வேணும்னாலும் போகலாம் . சாவுக்கு பின்னாடி இப்படி ஒரு சுகம் கிடைக்கும்னு
எல்லோருக்கும் தெரிஞ்சா யாரும் சாவுக்கு பயப்பட மாட்டாங்க..! மனுசனா இருந்தப்போ என்னதான் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் இப்படி ஒரு சுகம் கிடைக்க போறது இல்ல..! இதயெல்லாம் நான் எப்படி மத்தவங்களுக்கு சொல்ல முடியும் ..? அவங்கவங்க செத்தாதான் புரியும்..!

>

நந்ந்ந்ந்தலாலா...!

புற்களை முழ்கடித்து செல்லும் ஒரு நீரோட்டத்தில் பட டைட்டில் துவங்குகிறது .
சற்று நேரத்தில் இளையராஜா என்னும் இசைப்படகில் படம் பயணமாகிறது.படகில் நாமும் ஏறிகொள்கிறோம் . தாயை தேடிசெல்லும் இருவர் நம்முடன் வருகிறார்கள் அந்த அழகிய பயணம்தான் நந்தலாலா....!


வழி நெடுக அழகிய காட்சிகள் ..! அடிக்கடி இளையராஜா இசைக்கு புற்கள் அசைகின்றன..! ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் தீட்டலாம் ..! எல்லாவற்றிலும் உயிராய் நம் இளையராஜா ...!இளையராஜா ...!. சில நேரங்களில் படம் மவுனமாய் போகிறது அதில் கூட இளையராஜா தெரிகிறார் ...!


தாயை தேடி ஒருவன் வெறுப்போடு செல்கிறான் ..! ஒருவன் பாச ஏக்கத்தோடு செல்கிறான் ...! வெறுப்போடு சென்றவன் பாசத்துடன் திரும்புகிறான் ..!பாசத்தோடு சென்றவன் வெறுப்போடு திரும்புகிறான் ..!


எதோ ஒரு சூழ்நிலையில் குழந்தை பெற்று அதை தன் தாய் வீட்டில் விட்டு விட்டு வேறு வாழ்க்கையில் இருக்கும் ஒரு பெண் .! அவளைத்தான் பாசத்துடன் தேடிபோகிறான் அந்த குழந்தை ..! (அவள் வேறு வாழ்க்கையில் இருப்பதை அறியாமல் ) ஆனால் அவளோ இந்த குழந்தையை சந்திக்க கூட விரும்பவில்லை ...! ஒரு கட்டத்தில் அவள் வேறு வாழ்க்கையில் குழந்தையுடன் இருப்பதை பார்த்து நொந்து திரும்புகிறான். (இந்த இடத்தில் ஏனோ லிவிங் டுகெதர் என்ற வார்த்தை நினைவில் வந்து தொலைக்கிறது)


அழகான விமர்சனங்கள் பலர் எழுதிவிட்டார்கள் எனவே இது போதும். ஒரு மிகசிறந்த ஒரு படத்தை பார்க்க துண்டிய வலையுலக விமர்சகர்களுக்கு நன்றி .!

ex ... கேபிள் சங்கர் மணிஜி




நல்ல வெயிலில் கடும் தாகத்தோடு நடந்து செல்கிறோம் சற்று தொலைவில் சுவையான ஜில்லென்ற குளிர்பான கடை இருக்கிறது. கடும் தாகத்தில் சுவையான குளிர்பானம் குடிப்பது எவ்வளவு சுகம் ...? ஆனால் அங்கே பக்கத்திலேயே பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் இருக்கிறது சிலர் அந்த தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்து கொள்கிறார்கள் . தாகத்தில் சுவையான குளிர்பானம் குடிக்கும் அனுபவத்தை அவர்கள் இழந்து விடுகிறார்கள் ..!

அந்த பிளாஸ்டிக் குட தண்ணீரை போன்றது திருட்டு டிவிடி. கலை தாகத்தோடு
நல்ல படங்களை பார்க்க காத்திருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு சுவையான குளிர்பானம் போன்றது அதை தியேட்டரில் பார்த்து நன்றாக அனுபவியுங்கள்.


...




>

அச்சுவுக்கு பிறந்தநாள் ..!

இன்னிக்கு(21-11 -2010) எங்க இரண்டாவது பொண்ணு அட்சய நந்தினிக்கு மூணாவது பிறந்தநாள்....! கேக் எடுத்துகோங்க வாழ்த்து சொல்லுங்க...!






......
>

பதிவுலக கலாச்சாரம்

நான் ஒரு கிராமத்தான் இன்னும் சொல்ல போனால் ஒரு பட்டிக்காட்டான்..! என்னை பொறுத்தவரை கணவன் மனைவி உறவு என்பது வலிமையானது பிரிக்க முடியாதது பிரிக்க கூடாதது...! நிறைய அடிதடி நிகழும் குடும்பத்தை எல்லாம் பார்த்து இருக்கிறேன். நல்ல விறகு கட்டை எடுத்து மனைவியை விளாசும் கணவன் மார்கள் உண்டு . இரண்டுநாள் மனைவி ஒருபுறம் கணவன் ஒருபுறம் முகத்தை வைத்துகொண்டு இருப்பார்கள் முன்றாம் நாள் சகஜம் ஆகிவிடுவார்கள். புருசன்தான் ஒன்னை இப்படி போட்டு அடிகிறானே அவன ஒதுக்கிட்டு உன் இஷ்டம்போல வேற யார் கூடயாவது வாழலாமே அப்படின்னு சொன்னா புருஷன் எந்த விறகு கட்டையால அடிச்சானோ அதே கட்டய எடுத்துகிட்டு யார பாத்து என்னடா சொன்னே அப்படின்னு சொன்ன ஆள அடிக்க வந்துடுவாங்க...!


ரொம்ப நாள் வம்பும் சண்டையுமா இருக்குறவங்களும் உண்டு அவங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஒரு முறையான ஒற்றுமைக்கு வந்துடுவாங்க ..!

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள்

வெளிநாட்டில் கணவன் இருக்க உள்ளுரில் இருக்கும் மனைவியர் படும் அவஸ்த்தை கொஞ்ச நஞ்சமல்ல.அந்த காலத்தில் கல்யாணம் ஆன புதிதில் விட்டு செல்லும் கணவன் எழுதும் கடிதத்தை மட்டும் திரும்ப திரும்ப படித்துகொண்டு அந்த கடிதம் கூடவே குடும்பம் நடத்தும் மனைவியர் ஏராளம். கணவன் உடல்நலம் சரியில்லை என ஒரு கடிதம் எழுதிவிட்டால் போதும் கடிதத்தை படித்து கண்ணீர் விட்டு கோயில் குளம் என வேண்டுதல் செய்யும் மனைவியர் உண்டு .

இப்படி கிராமத்தில் கணவன் மனைவி உறவினை பார்த்து பழகிய என்னைபோன்றோர்க்கு பிடிக்கவில்லையெனில் ஜோடியை மாற்றிகொள்ளலாம் என்ற கலாச்சாரம் வேப்பங்காயாய்தான் இருக்கும் .


கணவனோ மனைவியோ பிடிக்கவில்லை என்றாலும் விதியே என ஆரம்பத்தில் வாழ்ந்தாலும் இப்படி பொறுத்து கொண்டு வாழ்ந்தவர்கள் இறுதியில் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் . எந்த காலகட்டத்திலும் அவர்கள் ஜோடியை மாற்றிக்கொள்ள நினைத்து இருக்க மாட்டார்கள் .


சரி இப்போது நிகழ்வது என்ன ..? கணவனோ மனைவியோ பிடிக்காமல் போய்விட்டால் அவரை ரத்து செய்துவிட்டு வேறு வாழ்க்கையை தேர்ந்து எடுக்கலாம் என வெளி நாட்டில் இருந்து ஒருவர் எழுதுகிறார் . இது சரியா..தவறா .. என விவாதம் .!

என் கிராமத்து வாழ்க்கை முறையைத்தான் உலகம் முழுவதும் பின்பற்றவேண்டும் என நான் எதிர்பார்க்க முடியுமா ...? அவர் இருப்பிடம் வாழ்க்கை முறை அவர் சொல்லுவதில் இருக்கும் நியாயம் இதைத்தான் ஆராய வேண்டும். அவர் சொல்லுவது தவறாய் பட்டால் அதை சரியாக விளக்க வேண்டும் .

அதே சமயம் பிடிக்கவில்லை எனில் பிரிந்து வாழ்வதுதான் சரி என அவரும் தீர்ப்பு சொல்ல முடியாது. எங்கள் ஊரில் பொறுமையாய் இருந்து பிரியாமல் சாதித்தவர்கள் அதிகம் . இப்படி நினைப்பவர்கள் எதிர்வாதம் செய்கிறார்கள் .



இந்த விவாதத்தில் எந்த தவறும் இல்லை ..! ஆனால்..! கலாச்சாரம் கலாச்சாரம் என கூவி கொள்கிறோம் பதிவுலகத்துக்கு என ஒரு கலாச்சாரம் உள்ளது அதாவது சொல்லவந்த கருத்தை மறந்துவிட்டு கருத்தை சொல்லிய நபர்மீதான தனிமனித தாக்குதல் செய்வது அநாகரீக வார்த்தைகளை பிரயோகம் செய்வது விவாதத்துக்கு உரிய கருத்தை தொலைத்துவிட்டு நீயா..? நானா என கோதாவில் இறங்கிவிடுவது அந்த வகையில் இரு தரப்புமே பதிவுலக கலாச்சாரத்தை மீறவில்லை...!







>