பித்தளை குவளை
பித்தளை
குடத்துக்கு இருவத்தி அஞ்சு ரூவாதான் தருவாங்களாம்
பெரிய குவளை க்குத்தான் அம்பது ரூவாயாம்..!

வாட்டத்துடன் பிள்ளை சொல்ல...!

புளிபோட்டு விளக்கி அடுக்களையில் கவிழ்த்து வைக்க பட்டிருந்த
குவளையை அம்மா தயார் செய்ய...!

தண்ணீர் பிடித்து வைப்பதை விட அடகு வைக்கவே அதிகம்
பயன்பட்ட பித்தளை குவளையும்
எதோ ஒரு கஷ்டத்தில் காணாமல் போனது...!.

>