ஆவுடையார் கோயிலும், அசர வைக்கும் சிற்பங்களும்

பல பேர் இந்த கோயில் பத்தி சொல்லி இருக்காங்க..! தஞ்சை மாவட்டத்துல பல பிரம்மாண்ட கோயில் எல்லாம் பார்ததால அதுபோல இதுவும் ஒன்னு அப்படின்னு நினைசேன் ..! ஆனா ..? அப்படி இல்ல ..! இந்த கோயில்ல இருக்குற ஒவ்வொரு தூணும் ஒரு கதை சொல்லுது ..! சின்ன சின்ன இடைவெளில கூட சிற்பங்கள் விளையாடுது ..!

மாணிக்க வாசகர்
மாணிக்க வாசகர்தான் இந்த கோயிலின் ஹீரோ...! அவர்கட்டின கோயில்தான் இது. எல்லா கோயில்லையும் முகப்பில் விநாயகரை வழிபட்ட பிறகுதான் கோயில் உள்ள போவோம். ஆனா..! இந்த கோயில் ல முகப்பில் வினாயகர் இல்ல மாணிக்க வாசகர் தான் இருக்கார் இவரை வழிபட்டுத்தான் உள்ள போகணும் .இந்த கோயில் ல திருவிழா மாணிக்க வாசகருக்குதான் நடக்குதாம் தேர்ல பவனி வருவதும் மாணிக்க வாசகர்தான் .
மேலும் இந்த கோயில் பற்றிய முழு விவரங்களுக்கு இங்கே கிளிக்குங்க


முகப்பு

கோபுரம்
அக்னி தீர்த்தம்

உள்ளே இருக்கும் வெளி பிரகாரம்


உள்ளே ஒரு இடம் மனசுல பி .சி ஸ்ரீராம் னு நெனைப்புல எடுத்தது ..!


இந்த குதிரை சிற்பங்கள் ஒரே கல்லால் ஆனவை இதுபோல அங்க நெறைய சிற்பங்கள் இருக்கு ..!


ஒரு பிளவுபோல செதுக்க பட்ட ஒரே கல்லால் ஆன தூண் ..!இந்த தூணை தட்டினால் டங்குன்னு ஒரு இரும்பு குழாயை தட்டினதுபோல சத்தம் கேக்குது உள்ளே இந்த தூண் கூடா இருக்கும் போல ..!


இந்த மேற்கூரையை பாருங்க கல்லுலையே வளையம் வளையமா செதுக்கி சங்கிலி போல தொங்குது ..!ஒவ்வொரு தூணிலும் சிற்பங்கள்
ஆத்மநாதர் மாணிக்க வாசகருக்கு உபதேசம் செய்த காட்சி


ஸ்தல விருட்சம் குருந்த மரம்

இந்த கோயிலுக்கு செல்வோரின் முக்கிய கவனத்திற்கு..

இங்கே இருக்கும் சிலைகளுக்கும் சிற்பங்களுக்கும் நிறைய விளக்கங்கள் உள்ளன அதையெல்லாம் யாரேனும் சொன்னால்தான் தெரியும் விளக்கங்களுடன் சுற்றிகாட்ட அங்கே ஆட்கள் இருக்கிறார்கள் அதனால் இங்கே செல்பவர்கள் அப்படி ஒரு நபரை அமர்த்தி கொள்வது நல்லது..!


இது எங்க வீட்டு சிற்பங்கள்


பின் குறிப்பு;-
நான் கோயில் உள்ளே நுழைந்தவுடன் பார்த்த போர்டு இதுதான்பொதுவாக இந்த விதிமுறைகளை மீறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது இருந்தாலும் இங்கே போட்டோ எடுக்கலாமா ன்னு அங்க வேலை செய்யும் ஒருவரை கேட்டேன் அவரும் பார்த்து எடுத்துகோங்கன்னு சொன்னார் .
அதோட இந்த கோயில கட்டின மாணிக்க வாசகர் மட்டும் என்ன ..? ரூல்ஸ் படியா பண்ணினார் ..? மதுரை மன்னர் குதிரை வாங்க கொடுத்த காசுல இறைவன் மேல உள்ள ஈர்ப்பால வந்த கடமையை மறந்துட்டு தானே கோயில கட்டினார் ..? அதே போல ஒரு ஆர்வத்துலத்தான் நானும் போட்டோ புடிச்சு பதிவுல போட்டுட்டேன் ..!

>

தன்னம்பிக்கை =ரம்யா''
இரும்பு இதயம் படைத்த பீனிக்ஸ்
பறவை''


ரம்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
ரம்யாவின் பிறந்த நாள் வாழ்த்து பதிவுகள் இங்கே..!


மயிலின் பதிவு

கார்த்திகை பாண்டியன் பதிவு


இயற்கை ராஜி யின் பதிவு
>

வளர்த்த கடா ஏன் மார்பில் பாயாது ..???வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக ..! இந்த பழ மொழியில் கடா சைடில் தான் குற்றம் சொல்ல படுகிறது . வளர்த்த பிள்ளைகள் பெற்றோரை எதிர்ப்பதற்கு உவமையாக இந்த மொழி சொல்ல பட்டாலும், உண்மையில் இந்த மொழி பொருத்தம்தானா ? கிடா பக்கம் இருக்கும் நியாயத்தையும் பார்க்க வேண்டுமல்லவா ...?

ஒரு ஆட்டு கடாவை எதற்காக வளர்கிறார்கள் ...? ஒன்று எதாவது நேர்த்தி கடனுக்கு பலி கொடுக்க ,அல்லது கசாப்பு கடைக்கு விற்க ..!அல்லது பிரியாணிக்கு ..!சில இடங்களில் மட்டும் சண்டை கடா வளர்கிறார்கள் அது விதி விலக்கு ...!
தன்னை அன்போடும் பாசத்தோடும் வளர்த்த ஜமானன், பலி கொடுப்பதற்காகவும் ,அல்லது கசாப்பு கடையில் விற்பனை அல்லது பிரியாணி செய்து சாப்பிடவும்தான் இத்தனை அன்பையும் பாசத்தையும் காட்டினான் என்பது அந்த அப்பாவி ஆட்டுக்கு தெரிய வரும்போது அந்த வளர்த்த கடா ஏன் மார்பில் பாயாது ...???....
>

பதிவர் சந்திப்பு

 

ம்ம பாசக்கார ஜமால் சென்னை வந்து பல நாள் ஆயிடுச்சு சந்திக்குற வாய்ப்பு தள்ளிகிட்டே போக ..!ரெண்டுநாள் முன்னாடி ஜமால் நம்பர்ல இருந்து போன்...!   ஆனா பேசுனது ஜமால் இல்ல பேசுனது நம்ப மூளைக்காரன் பிரியமுடன் வசந்த் ..!
சென்னை வந்து இருப்பதாக சொல்ல      மூணு பேரும் ஒரு பதிவர் சந்திப்பு நடத்திடலாம்னு முடிவு பண்ணிட்டோம் அதன்படி பதிவர் சந்திப்பு இன்னிக்கு சென்னை பெரம்பூர்ல இனிதே நடை பெற்றது ..!

 ஜமால் 

எப்போதும் சிரிப்பு மாறாத முகம் நெறைய தடவை போன் ல மட்டும் பேசி இருக்கேன் இப்போதான் முதல் சந்திப்பு ..!  புதிய மனுசன பார்க்குற    உணர்வு கொஞ்சம் கூட இல்ல பலநாள் பேசி பழகுன ஒரு நண்பனை பார்க்குரதுபோல இருந்தது ...!  கணினி பத்தி நெறைய விஷயங்கள் தெரிஞ்சு வைச்சு இருக்கார் நெறைய சொல்லி கொடுத்தார்...!

 பிரியமுடன் வசந்த் 

பிளாக்ல யாராலும் யூகிக்க முடியாத அளவு சேட்டை பண்ணுற இந்த வசந்த் நேர்ல சாந்தம்னா சாந்தம் . ஒரு அமைதியா அதிர்ந்து பேசாம அழகு புள்ளயா இருந்தாரு பையனுக்கு வீட்டுல பொண்ணு பாக்குறாங்க அதுனால நல்ல புள்ளயா நடக்குறார் போல ;;)) இவர் கூட நான் சாட் பண்ணினது கூட இல்ல வெறும் கமெண்ட்ஸ் மட்டுமே எங்க தொடர்பு ..! இவரையும் புதிய மனுசனா எனக்கு பார்க்க தோணல ..!  முதல் தடவை பார்த்தாலும் ஒரு பழகிய நண்பனை பார்க்கும் உணர்வை வலையுலகம் மட்டுமே கொடுக்கும்.

 நாங்க பல விசயங்கள பத்தி பேசினோம் பதிவர் சங்கம் பத்தி நெறைய விவாதம் பண்ணினோம் , எதிர் கமெண்ட் பத்தி , சில பதிவர்கள் பதிவுலகம் தங்களுக்கே சொந்தம் அப்ப்டிங்குறது போல இருப்பதாக பேசினோம்.சில திரை விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக இருப்பது ,இன்னும் ,இன்னும் பல விஷயங்கள்     பேசி  கல கலப்பாக முடிந்தது இந்த சந்திப்பு .      

 

   

DSC00224  DSC00228

DSC00225

பாட்டிலும் கையுமாக ஜமால் 

DSC00202

அனியாயத்துக்கு அமைதி

DSC00216

சேருக்குள் தொப்பையை மறைக்கும் ஜமால்

 

DSC00205


>