ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒவ்வொரு விதமான ஹாரன் வேண்டும் ..!!சமீபத்தில் சென்னை புழல் பகுதியில் இருந்து அம்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுஇருந்தேன். அகலமான நெடுஞ்சாலை. பின் பக்கத்தில் இருந்து ஒரு வாகனம் வருவதற்கான ஹாரன் கேட்கவே சைடு மிரரில் பார்த்தேன் ஒரு லாரி வந்து கொண்டுஇருந்தது சாலையின் நடுப்பகுதியில் இருந்து ஓரத்திற்கு சென்றேன்.லாரி கடந்து செல்ல எடுத்துகொள்ளும் நேரம் அதன் வேகத்தை பொறுத்து தோராயமாக கணக்கிட முடியும். அதன் படி மீண்டும் சாலையின் நடுப்பகுதிக்கு வர எத்தணிக்கையில் லாரியானது நீண்டுகொண்டே சென்றது.அது சாதாரணலாரி அல்ல கண்டெயினர்களை ஏற்றி செல்லும் அதிக சக்கரங்கள் பொருந்திய நீளமான லாரி.ஆனால் சைடு மிர்ரரில் பார்க்கும்போது சாதாரண லாரி போலவே தோன்றியது.உடனே சுதாரித்து கொண்டேன் . அதேபோல நீளம் அதிகம் கொண்ட பேருந்தும் குழப்பம் ஏற்படுத்துகின்றது .


முன்பு ஒரு சமயம் எங்கள் ஊரில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த போது ஹாரன் ஒலி கேட்கவே சைடு மிர்ரரில் பார்த்தால் முகப்பு விளக்கு அமைப்பு ஒரு காரை போன்று தோன்றியது . அது அகலமில்லாத சாலை . கார்தானே என்று சாலையை விட்டு இறங்காமல் சாலை ஓரத்தில் சென்றேன் . ஆனால் .! என்னை கடந்து சென்றது ஒரு பேருந்து ..! தடுமாறி போனேன் .அதாவது ஊரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்து அது . உள்ளூர் பேருந்தாக இருந்தால் பேருந்து முழுவதும் வெளிச்சமாக இருக்கும் சைடு மிர்ரரில் தெரிந்து விடும் . ஆனால் விளக்குகள் அணைக்க பட்ட பேருந்தை சைடு மிர்ரரில் கண்டுகொள்ள முடியவில்லை .வாகன ஒலி அமைப்பில் திருத்தம் வேண்டும் ..!

இருசக்கர வாகனம் ,முன்று சக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம் ,ஆறு சக்கர வாகனம் , பதினாறு சக்கர வாகனம் அதைவிட பெரிய வாகனம் என ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரே மாதிரியான ஹாரன் அமைக்க பட வேண்டும் .ஒரு வாகன ஹாரனை வைத்தே அது எந்த மாதிரியான வாகனம் என அறிந்து கொள்ளும் வகையில் ஒலி அமைக்க பட்டால் வாகன ஓட்டிகளுக்கு விபத்தினை தவிர்க்க ஏதுவாக இருக்கும். வித விதமான அலறல் சத்தம் கொண்ட ஒலி அமைப்புகளும் தடை செய்ய பட வேண்டும் .


.

>