போலீஸ் திருடன்

சில வருடங்கள் முன்னர் நடந்த சம்பவம் இது .


ஒரு நகை பட்டறை


தடியாய் இரண்டு போலீஸ் காரர்கள் அந்த நகை பட்டறைக்கு புல்லட்டில் வந்து இறங்குகிறார்கள் .


யாருப்பா கடைல ?


சற்று வயதான அந்த நகை பட்டறைகாரர் பயத்துடன் வெளியே வருகிறார்


வணக்கம் சார்.!


ஆங்...! எவ்ளோ வருசமா இங்க கடை வைச்சு இருக்கே ? (சற்று மிரட்டல் தொனியில்)


எட்டு வருசமா வைச்சு இருக்கேன் சார்..!


மேலும் சில கேள்விகள் கேட்டு அவரை குடைகிறார்கள்சுற்றி ஒரு பார்வை பார்த்த போலீஸ் காரர்கள் கடைக்குள் வருகிறார்கள் .!


செயின் பத்தவைக்க தெரியுமா ?


தெரியும் சார்..!


பையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகளை எடுத்து கொடுக்கிறார் ஒரு போலீஸ்காரர்..!


புதிதாகவும் இல்லாமல் பழையதாகவும் இல்லாமல் நல்ல கனத்த சங்கிலிகள் அவை மூன்றும் அறுந்த நிலையில்...!


சாதாரணமாக பழைய சங்கிலிகள் மட்டுமே அறுந்து போகும் அல்லது மெல்லிய சங்கிலிகள் அறுந்து போகும் ஆனால் இந்த சங்கிலிகள் அறுக்க பட்டு இருந்தன..!


பத்த வைச்சா அந்த எடத்துல பத்த வைச்சது தெரியுமாப்பா ?


ஆமா சார் அந்த எடம் கருப்பா ஆயிடும்..!


அது தெரியாம இருக்க என்ன செய்யணும் ?


பாலிஷ் போட்டா தெரியாது சார் புதுசு போல ஆயிடும்.


சரி மூணு செயினையும் பத்தவைச்சு பாலிஷ் போட்டு கொடு .!


சரி சார்.!


மூன்று சங்கிலிகளையும் பற்றவைத்து பாலிஷ் போட்டு வாங்கி கொண்டு கடைக்காரர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு புல்லட்டில் பறந்து செல்கிறார்கள்.அந்த ''காவலர்கள்''


எதாச்சும் புரியுதா....!!!!
>