ரம்ஜான் நினைவுகள்


காலைல தூங்கி எழுந்திரிக்கும் முன்னாடியே அக்கம் பக்கத்து வீடுகள்ல இருந்து வகை வகையா சாப்பாட்டு ஐட்டங்கள் வந்துடும். முட்டைல செஞ்ச ஆப்பம்,இடியாப்பம், பரோட்டா அப்புறம் கடல் பாசிலசெஞ்ச அல்வா போல ஒரு இனிப்பு! எப்படியும் ஒரு நாலஞ்சு வீடுகள்ல இருந்து குடுத்து அனுப்புவாங்க!ரம்ஜான் பண்டிகை கொண்டாடுறவங்க வீட்டுல இருக்குற பட்சனங்கள விட எங்க வீட்டுல அதிகம் இருக்கும்! புது டிரஸ் போட்டு தொழுகைக்கு போறவங்க நம்மள கடந்து போகும்போது அத்தர் வாசனை ஆளதூக்கும் ...! மதியம் நெய்சோறு கறி குழம்பு வந்துடும் அதும் நாலஞ்சு வீட்டுல இருந்து சிலர் கறியாவே வாங்கி கொடுக்கும் பழக்கம் வைச்சு இருந்தாங்க ..!!!

ம்ம்ம்ம் ..... எல்லாம் ஊருல இருந்தப்போ........!!!

அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள் !!!


.

>