ரம்ஜான் நினைவுகள்


காலைல தூங்கி எழுந்திரிக்கும் முன்னாடியே அக்கம் பக்கத்து வீடுகள்ல இருந்து வகை வகையா சாப்பாட்டு ஐட்டங்கள் வந்துடும். முட்டைல செஞ்ச ஆப்பம்,இடியாப்பம், பரோட்டா அப்புறம் கடல் பாசிலசெஞ்ச அல்வா போல ஒரு இனிப்பு! எப்படியும் ஒரு நாலஞ்சு வீடுகள்ல இருந்து குடுத்து அனுப்புவாங்க!ரம்ஜான் பண்டிகை கொண்டாடுறவங்க வீட்டுல இருக்குற பட்சனங்கள விட எங்க வீட்டுல அதிகம் இருக்கும்! புது டிரஸ் போட்டு தொழுகைக்கு போறவங்க நம்மள கடந்து போகும்போது அத்தர் வாசனை ஆளதூக்கும் ...! மதியம் நெய்சோறு கறி குழம்பு வந்துடும் அதும் நாலஞ்சு வீட்டுல இருந்து சிலர் கறியாவே வாங்கி கொடுக்கும் பழக்கம் வைச்சு இருந்தாங்க ..!!!

ம்ம்ம்ம் ..... எல்லாம் ஊருல இருந்தப்போ........!!!

அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள் !!!


.

>

18 comments:

பிரியமுடன்...வசந்த் said...

நண்பர்கள் அனைவருக்கும் ரமழான் தின வாழ்த்துக்கள்

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

கண்ணைக்கவரும் படங்கள் அமைந்த பதிவு. பதிவுக்குக் கொடுத்த பரிசு தகும்.

சொந்தவூர் எது?

‘அல்வா போல ஒரு் இனிப்பு” - அதுவென்ன? எப்படி செய்யப்பட்டது? என்றெல்லாம் தெரியாமலா இருந்தீர்கள்?

ஒரு பெண்ணென்றால் கண்டிப்பாகத் தெரிந்து தன்வீட்டிலும் செய்து பார்த்திருப்பாள்.

அபுஅஃப்ஸர் said...

உங்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

ஆமாம் எங்க வீட்டுலேயும் தீபாவளிக்கு பலகாரம் வந்து குவிந்து இருக்கும்...

பகிர்வுக்கு நன்றி

அபுஅஃப்ஸர் said...

உங்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

ஆமாம் எங்க வீட்டுலேயும் தீபாவளிக்கு பலகாரம் வந்து குவிந்து இருக்கும்...

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

hahhaah athaana parthen..padikum podhey poramai kolla...mudivil parthadhum thaan happadaaaaaaaaaaanu moochu vitten....

mmmmm namakum erukanga frnds abu jamal shafi navasnu mmmmmmmmmmm oru pechi kooda kupidalai...

அ.மு.செய்யது said...

வானாளில் முத‌ன்முறையாக‌ ர‌மலான் பெருநாளை நான் மிஸ் ப‌ண்றேங்க‌...அண்டை மாநில‌த்தில்..

நீங்க‌ சொல்ற‌ எல்லா ஐயிட்ட‌ங்க‌ளும் அதுக்கு மேல‌யும் எங்க‌ வீட்டில‌ ப‌ண்ணுவாங்க‌..

நான் சென்னைல‌ இருந்திருந்தா உங்க‌ வீட்டுக்கும் வ‌ந்து கொடுத்திருக்க‌லாம்..என்ன‌ ப‌ண்ற‌து..ம்ஹூம்ம்ம்...

எனிவே...ர‌ம‌லான் ந‌ல்வாழ்த்துக்க‌ள் ஜீவ‌ன்...

பின்னோக்கி said...

பிரியாணி நியாபகப்படுத்திட்டீங்க..

இராகவன் நைஜிரியா said...

அனைவருக்கும் இனிய ரம்லான் வாழ்த்துகள்

அகல் விளக்கு said...

//ம்ம்ம்ம் ..... எல்லாம் ஊருல இருந்தப்போ........!!!//

என்ன நண்பா இப்படி சொல்லிட்டீங்க..

நீங்க எங்க இருந்தாலும்

உங்க நினைவு இங்கல்லவா உள்ளது.

ரமலான் வாழ்த்துக்கள்

Hisham Mohamed - هشام said...

சூப்பர் சிந்தனை... வாழ்த்துக்கள்

கதிர் - ஈரோடு said...

அனுபவம் அருமை

ரமலான் வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி said...

எனக்கும் இப்படி அனுபவம் உண்டு. நானும் அவர்கள் பண்டிகையின் போது வரும் சுவையான உணவுகளை ருசித்த பின்னர், அவர்களிடம் கேட்டுச் சமைத்துப் பார்த்திருக்கிறேன். தோல்வி அடைந்து ஏதோ முக்கியமாகப் பயன்படுத்தும் பொருளை எனக்குச் சொல்லாமல் மறைத்து விட்டிர்கள் என்று முறைப் பட்டிருக்கிறேன். ஒரு பெண்மணி எனக்குச் சொன்ன பதில் பல வருடங்க்களுக்குப் பின்னும் நினைவிருக்கிறது. ''அந்த உணவில் எங்கள் அன்பும் கலந்து இருக்கும். அதுதான் சுவை அதிகம் '

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றி அண்ணே.

எம்.எம்.அப்துல்லா said...

//ரம்ஜான் பண்டிகை கொண்டாடுறவங்க வீட்டுல இருக்குற பட்சனங்கள விட எங்க வீட்டுல அதிகம் இருக்கும்!

//

அப்பு இதே கதைதான் எனக்கு தீபாவளிக்கு :)

துபாய் ராஜா said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரம்லான் வாழ்த்துக்கள்...

Anonymous said...

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

நன்றி தல. சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. 8 நாள் பெருநாள் லீவு. அதான்.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//எம்.எம்.அப்துல்லா said...
//ரம்ஜான் பண்டிகை கொண்டாடுறவங்க வீட்டுல இருக்குற பட்சனங்கள விட எங்க வீட்டுல அதிகம் இருக்கும்!

//

அப்பு இதே கதைதான் எனக்கு தீபாவளிக்கு :)//

எங்கள் பகுதிகளிலும் இப்படிதானுங்க!!