எப்படி இருந்த நான் ..? திருமண நாள் பதிவு ...!

அதை ஒரு நந்தவனமாக நினைத்தேன்! ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது!அதன் வாயில் கதவு அடைக்கப்பட்ட பிறகுதான் அது என்ன என்று புரிந்தது!இங்கே ஆனந்தமும் இருந்தது! ஆனால், இதன் எல்லைதான் பிடிக்கவில்லை! எல்லையற்று இருந்த என்னை எல்லைக்குள் கட்டுப்படுத்தியது வெறுப்பை தந்தது! முப்பதும்,அறுபதும் முடிந்துபோக ஐயோ என்றிருந்தது ..! வெளியே உள்ள நட்புகளும்,உறவுகளும் அன்னியப்பட்டு விடுமே என் கவலை வந்தது !
என்னைவிட உனக்கு யாரும் முக்கியமில்லை! உடனிருந்த ''அது'' தர்க்கம் செய்தது! கோபம் வந்தது! ச்சே!! இதையா விரும்பினோம்? இந்த கட்டுப்பாடு பிடிக்கவில்லை! வெறுப்பிலும்,இறுக்கத்திலும் நாட்கள் கழிந்தது!

பிறகு...! எனக்கும் அதற்கும் பரிசாக வந்த அந் ஒன்றுதான் என்னை முற்றிலும் மாற்றியது. ஆனந்தம் அள்ளியது


.
எனக்கு சிறையாய் பட்ட இந்த இடம் வந்த ஒன்றிற்கு பேருலகமாய் இருந்தது.தன் உலகை அந்த ''ஒன்று'' என் கையை பிடித்து சுற்றி காட்டியது.நானும் அந்த ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிபோனேன்.

எனக்கும் இப்போது இதுவே உலகமானது...
!

இதையெல்லாம் கண்ட என்னுடன் தர்க்கம் செய்த ''அது'' மவுனமாக புன்னகைத்து கொண்டது. கால போக்கில் அந்த ஒ
ன்றுடன் இன்னொன்றும் கூடி போக குதூகலத்தில் துள்ள வைத்தது.இந்த பேருலகம் இப்போது எனக்கு பிரபஞ்சமானது. சந்தோஷமும் , உ
ற்சாகமுமாய் நாள்கள் கழிகிறது. இப்போது எனக்கு எந்த தடைகளுமில்லை..! ஆனால் நான் இந்த உலகை விட்டு எங்கும் செல்வதுமில்லை ...!

நிறைவடைகிறது 21-10-2011 உடன் ஒன்பது வருடங்கள்....!!!!!!!

>