மதம் படைத்தவர்கள்

இப்போதைய கால கட்டத்தில் காவல் துறை, நீதிமன்றம்,ராணுவம் மற்றும் நாடு என்ற அமைப்பு அதெற்கென ஒரு கட்டமைப்பு எல்லாமே உள்ளது. இப்படி எல்லாம் இருந்தும் முழுமையாக சட்டம் ஒழுங்கை காக்க முடியவில்லை. பல சட்ட மீறல்கள் நடக்கத்தான் செய்கிறது. அநீதி யான செயல்கள் பல நடக்கின்றன அனைவருக்கும் சட்டம் சமமாக இல்லை பணம் படைத்தவர்களுக்கு சட்டம் வளைகிறது .இது இன்றைய நிலை .!


இதே பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் வாழ்க்கை அமைப்பு எப்படி இருந்திருக்கும் ..? ஒரே நிலப்பரப்பில் பல நாடுகள் ..! ஒருநாட்டில் ஒருவன் மன்னன் அவனே அடுத்த நாட்டில் கொள்ளைக்காரன்..! சிறியதும் பெரியதுமான ஏகப்பட்ட ராஜ்ஜியங்கள் அங்கங்கே அவரவர் வைத்ததுதான் சட்டம்.

ஆயுதங்களே ராஜ்யங்களை கொடுத்ததன ,கெடுத்தன ..அப்பாவிகளும்,பொதுமக்களும் அநியாயமாக பாதிக்க பட்டனர்.அதிக படையையும் ஆயுதங்களையும் கொண்டவன் மாவீரன் ..! பெருமளவில் மக்களை கொன்றவன் சக்ரவர்த்தி..! பாதிக்க பட்டவன் முறையிட நாதியில்லை .

இப்படி ஒரு காலகட்டத்தில் மக்களை நெறி படுத்த என்ன செய்ய முடியும் திருடனாய் பார்த்து திருந்தினால்தான் உண்டு.
இப்படி பட்ட நிலையில் மக்களை அன்பு வழியில் நடக்க செய்து அவர்களை நெறிபடுத்த உருவாக்க பட்ட முயற்சிதான் மதம்.
அந்த முயற்சியில் மாபெரும் வெற்றியை அடைந்து இருக்கிறார்கள் மதத்தை உருவாக்கிய மகான்கள் ..!

மக்களுக்கு இறையுணர்வை கொடுத்து அவர்களை அன்பு வழியில் மாற்றியது மதம். பல மன்னர்களும் மதத்தை போற்றவே நாடும் அமைதியை நோக்கி செல்ல துவங்கியது.

தற்போதைய மத சண்டைகள்

விலங்குகளிடம் இருந்து மனிதனை வேறுபடுத்த உருவாக்க பட்ட மதம் இன்று மனிதனை மிருகமாக்கி கொண்டு இருகின்றது. ஆனால் இந்த நிலை மாறி அனைத்து மக்களும் ஒன்றுபட்டு வாழ்வார்கள் . இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு .ஒரு சமுதாய மாறுதல் அடைய பல நுற்றாண்டுகள் ஆகலாம். அடிப்படையில் ஹிந்துவோ,முஸ்லிமோ,கிறிஸ்தவரோ அனைவருமே அன்பானவர்கள்தான். சிலர் செய்யும் சில செயல்களே மத சண்டைக்கு காரணமாகிறது. பழைய வரலாறு விளக்கப்பட்டு மத வெறி தூண்டபடுகிறது . அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு நாகரிகமான ஒற்றுமையான மத சண்டைகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் ..? அல்லது நான் என்ன செய்ய வேண்டும் ..?

எனக்கு இஸ்லாமிய நண்பர்களும் உண்டு ,கிறிஸ்தவ நண்பர்களும் உண்டு
அவர்கள் மதத்தின் சிறப்புகளை பற்றி அவர்களிடம் சொன்னால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.அவர்களும் என் ஹிந்து மத சிறப்புகளை சொல்லுகிறார்கள்.
அதே சமயம் நான் அவர்கள் மதத்தில் உள்ள குறைகளை சொன்னால் அவர்களுக்கு பிடிக்க வில்லை உன் மதத்தில் இல்லாத குறைகளா..? என திருப்பி அடிக்கிறார்கள். நான் என் ஹிந்து மத குறைகளையும் சொல்லுவேன் என சொன்னால் அதற்க்கு அவர்கள் பதில்

உன் மதத்தை குறை சொல்ல உனக்கு உரிமை உண்டு ..! ஆனால் என் மதத்தின் சிறப்புகளை நீ சொன்னால் ஏற்றுகொள்வேன் ..! குறை சொல்ல உனக்கு உரிமை இல்லை ..!

....இதுதான் அவர்கள் பதில்

கிட்ட தட்ட அவர்கள் சொல்வது சரிதான் ஜாதி இல்லை மதம் இல்லை என பேருக்கு வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம் ஆனால் எனக்கு உயிர் நண்பனாக இருக்கும் ஒரு இஸ்லாமியன் கூட என்னை ஹிந்துவாகத்தான் பார்க்கிறான் உணமையை சொன்னால் நானும் அவனை முஸ்லிமாய் தான் பார்க்கிறேன் .

அவன் என்னை இந்துவாய் பார்க்கும் பட்சத்தில் என் மேல் ஏகப்பட்ட குறைகளை வைத்துகொண்டு அவன்மேல் குறை சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது
அவன் நினைப்பதும் சரிதான்.

அறிவியற் கூறுகள் பெருகி செழித்திருக்கும் இந்த காலத்திலேயே பல்வேறு மூட நம்பிக்கை பழக்கங்களும் பெருகிவருகின்றன.

அப்படி இருக்க மதங்களை தோற்றுவித்த அந்த காலங்களில் எவ்வளவோ மூட பழக்கங்கள் இருந்திருக்க தானே செய்யும் அவை தற்கால அறிவியலுக்கு எப்படி பொருந்தும் .?

அந்த அறிவியலுக்கு பொருந்தாத அந்த நம்பிக்கையை என் மாற்று மத நண்பன் புனிதமாக கருதி போற்றும்போது அதன் குறைகளை கண்டுபிடித்து சொல்லி அவன் மனதை நான் ஏன் புண்படுத்த வேண்டும்..? அப்படி சொன்னால் அவன் நட்பை இழப்பதோடு மத உரசலுக்கும் காரணமாய் அமைந்து விடாதா ..?

ஒருவர் தான் மத சம்பிரதாயங்களை அடுத்தவருக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் செயல் படுத்தும்போது அதை ஒருவர் எட்டிபார்த்து குறை சொல்லுவது அநாகரிகம் இல்லையா ..?

.
>

வால்பையனுக்கு வாழ்த்துக்கள் ...!

அது என்ன...? பெரிய பெரிய வி பி களுக்கு எல்லாம் ரெண்டாவதும் பொண்ணா பொறக்குது...! வால்பையன் சொன்ன அந்த லிஸ்டல நானும் இருக்கேனாக்கும்.!
எனக்கும் ரெண்டு பொண்ணுதான்.! பொம்புள புள்ளயா பெத்துகிறதும் நல்லதுதான்.இந்த ஆம்பள பசங்கல்லாம் ரொம்ப மோசம். மீசை மொளைக்க ஆரம்பிச்ச உடனே தண்ணி அடிக்க கத்துகிரானுங்க பெத்தவங்கள மதிக்கிறதே கிடையாது..!


வாழ்த்துக்கள் அருண்...!

நீங்க சென்னை வரும்போது ட்ரீட் வைச்சுகலாம் ...!இவரு யூத்தாம் அத இவரே சொல்லிகிட்டா எப்டி...!


நாங்களும் யூத்துதான்...!


இதுல யாரு யூத் துன்னு பாருங்க...!


.......
>

மாற்றாந்தாய்

நம் உறவு முறைகளில் மிகவும் மதிக்க பட வேண்டிய,உயர்வாக போற்றப்பட வேண்டிய உறவு முறை எது என கேட்டால் மாற்றாந்தாய்
அதாவது தந்தையின் இரண்டாவது மனைவி என்று தான் சொல்ல வேண்டும் .
சரி! எந்த சூழ்நிலையில் ஒரு பெண் இரண்டாம் தாரமாக வாழ்க்கைபடுகிறாள்.சிற்சில இடங்களை தவிர பெரும்பாலும் வறுமையும், ஏழ்மையும் தான் அவ்வாறு வாழ்க்கைப்பட வைக்கிறது.

ஒருவனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ளும் ஒரு இளம் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? அவளும் எல்லா பெண்களை போல கனவு கண்டுதானே வளர்ந்திருப்பாள்? ஆனால் தன் பெற்றோரின் வறுமைக்காக ஒரு ''செகண்ட் ஹேன்ட்'' கணவனை அடையும் போது அவள் எந்த அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாள்?

தனது ஆசைகளையும்,கனவுகளையும் தியாகம் செய்துவிட்டு ஏற்கனவே திருமணமாகி எல்லா இன்பங்களையும் அடைந்து அனுபவித்த ஒருவனை திருமணம் செய்ய எந்த அளவு தன் மனதை தயார் செய்ய வேண்டும் ?

ஒரு ஆண் ஒரு விதவையையோ, விவாகரத்து,ஆனவரையோ திருமணம் செய்தால் அவன் மிக உயர்வாக மதிக்க படுகிறான்.
ஆனால்
?
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருகின்ற பெண்? வரும்போதே ஒரு வில்லியைப்போல பார்க்க படுகிறாள்.
அதுவும் முதல் தாரத்தின் பிள்ளைகளை கவனிக்கும் போது சுற்றுபுறம் அவளை மிகவும் கொடுமைபடுத்துகிறது!

'''ஆயிரம்தான் இருந்தாலும் பெற்றதாய் போல வருமா?'''

இது
போன்ற கேள்விகள் அவளை மிகவும் பாதிப்படைய செய்கிறது!

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! இப்படி இரண்டாம் தாரமாக வருபவள் ஏற்கனவே மிகுந்த மன உளைச்சலோடும்,நிறைய ஏமாற்றங்களோடும் இருப்பாள்.அதனால் அவளின் கோபங்களையும்,
வெறுப்புகளையும் மற்றவர்கள்தான் பொறுத்து கொள்ள வேண்டும்.(இந்த வாழ்க்கையில் அவள் நிலை பெறும் வரை)
எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி தனது கணவரின் முதல் மனைவியின் பிள்ளைக்கு ஒரு ''கிட்னியையே'' தானமாக கொடுத்து இருக்கின்றார்.
கிட்னியை பெற்றுக்கொண்ட அந்த நபருக்கு இரண்டு உடன் பிறந்த சகோதரிகள் அவர்கள் கிட்னி கொடுக்க தயாராக இல்லை.
ஆனால் ஒரு மாற்றாந்தாய் கிட்னி வழங்கி இருக்கிறார். அவரும் திருமணமான புதிதில் கணவர் வீட்டாரால் கடும் இன்னலுக்கு ஆளாக்க பட்டவர்தான்.
இது போன்ற மாற்றாந்தாய் பெண்களை அவரின் சுற்றுபுறம் போற்றவேண்டும்,அவளுக்கு அமைதியை கொடுக்காவிட்டாலும்,அவள் நிம்மதியை கெடுக்காமல் இருக்கவேண்டும்.

''பெற்ற தாயை போலவே மாற்றாந்தாய்மார்களும்
போற்றப்பட வேண்டும்''


..............

>

உமா சங்கர் I.A.Sஒரு நேர்மையான அதிகாரி உமா சங்கர் IAS மீது பொய் வழக்கு தொடுத்த இந்த அரசுக்கு என் கண்டனங்கள்..!.....
>

இறைவன் இருக்கின்றானா...?

-->
ஆறு வருடம் தொடர்ச்சியாக சபரிமலை பயணம். திருப்பதி மற்றும் அய்யப்பன் கோயில் போல நம்ம ஊரில் ஒன்றும் இல்லையே என நினைத்த போது அந்த குறையை கொஞ்சம் தீர்த்துவைத்த பழனி மலை முருகன். அதனாலேயே பழனி முருகன் நம்ம பேவரைட். மற்றபடி இறைவனுக்கும் எனக்கும் பெரிய தொடர்பு இல்லை. சபரி மலைக்கு போய் வந்தவர்கள் அந்த இடத்தை பற்றி சொன்ன பிரம்மாண்டதினாலேயே சபரிமலை சென்றேன். அந்த அய்யப்ப விரதம்,கட்டுப்பாடு,மலைப்பயணம் எல்லாம் பிடித்து போக அதை தொடர்ந்தேன்.மற்றபடி பெரிய வேண்டுதல் எதும் இல்லை.


இத்தனை வருட வாழ்க்கையில் உண்மையில் இறைவன் என்ற ஒன்று இருப்பதை உணர்ந்து இருக்கிறோமா.?என்று ஒரு. நேர்மையுடன் யோசித்து பார்த்தால்......இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது.


அதே சமயம் இறைவன் இல்லவே இல்லை என நினைத்த தருணங்கள் உண்டா..? இப்படி யோசிக்கும் போது இறைவன் இல்லை என நிறைய தடவை முடிவு செய்தது உண்டு.


கும்பகோணம் தீ விபத்து
அப்போது தோன்றியது இதுதான், தீயில் சிக்கிய அந்த குழந்தைகள் எல்லாம் எப்படி அலறி துடித்து இருப்பார்கள்..?

கும்பகோணம் கோயில் நகரமாம் அந்த கோயிலில் இருப்பவை எல்லாம் செவிட்டு சாமிகளா..? இல்லை சாமிகளே இல்லையா..! இல்லை அங்கே இருப்பவை சாமிகளா..?இல்லை சைத்தான்களா..? இப்படித்தான் தோன்றியது..!


பிரார்த்தனைகள் பலிக்குமா..?


பிரார்த்தனைகளும் ஒரு வகை இறை நம்பிக்கைதான் ஒன்று சேர்ந்த பிரார்த்தனைக்கு ஒரு சக்தி இருப்பதாகவும் கண்டிப்பாய் பலன் தரும் எனவும் சொல்லுகிறார்கள். உண்மைதானா..?


ஒன்று சேர்ந்த ஒரு வலிமையான பிரார்த்தனை பற்றி பார்ப்போம்
ஆழ்குழாய் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை பற்றிய செய்தியை தொலைக்காட்சியில் பார்க்கும் போது நமது நிலை என்ன? அந்த குழந்தையின் பெற்றோர்களை போலவே நாமும் துடித்து போகின்றோம். அந்த குழந்தையின் மீட்பு நடவடிக்கைகளை பரிதவிப்புடன் கவனிக்கின்றோம் அதற்க்கு மேலாக பார்க்கும் அனைவருமே பிரார்த்தனை செய்கிறோமா
இல்லையா? அந்த குழந்தைக்காக வீடுகளில் விளக்கேற்றுவது ஆலயம் சென்று அர்ச்சனை செய்வது என யாரோ..எவரோ பெற்ற பிள்ளைக்காக அந்த செய்தி அறிந்த அனைவருமே பிரார்த்தனை செய்கிறோம் ஆனால்..? நடப்பது என்ன..?


ஒரு சிதிலமடைந்த நிலையில் சடலமாகதானே பெரும்பாலும் மீட்கிறார்கள் ..! அப்படியானால் பிரார்த்தனைக்கு என்ன பலம்.?


அந்த குழந்தை எப்படி உயிர் துறக்கிறது இருள்,பயம்,பசி,அம்மா..அம்மா என்ற தேடலுடன் துளி..துளி யாக தன் ஜீவனை பிரிகின்றது..!இப்படி ஒரு கொடுமையை அனுபவித்து மரணிக்கும் அந்த குழந்தையை காக்க முடியவில்லை...!

மிக ..மிக தெளிவாய் உணரலாம் இப்போது இறைவன் என்ற ஒன்று இல்லை என்று..!

ஒரு வேளை இறைவன் இருந்து இதுபோல குழந்தை மரணித்தால் அது இறைவன் அல்ல சாத்தான்...!

கிருஷ்ண பரமாத்மா சொல்லுகிறாராம் நான் எல்லோரையும் ஒரே போலதான் படைத்தேன் அவரவர் செய்யும் வினைக்கு ஏற்ப பலாபலன்களை அனுபவிக்கிறார்கள் என்று. பிறக்கும் போதே மன நலம் குன்றிய நிலையில் பிறந்த இவர்களை படைத்தது யார்..?


பகுத்தறிவு வளர்ப்பதாய் சொல்லும் நாத்திக அமைப்புகளின் தோல்வி..
எல்லா மனிதர்க்குள்ளும் கண்டிப்பாய் ஒரு நாத்திக சிந்தனை இருக்கும். அதை பக்குவமாக வெளிப்படுத்தவைக்கமுடியும்.

ஆனால்..! கடவுளை மறுக்கிறோம்,பகுத்தறிவை வளர்க்கிறோம் என சொல்லிகொண்டு பிரச்சாரம் செய்யும் நாத்திக அமைப்புகள் செய்வது என்ன..? ஒரு காலகட்டத்தில் இவர்கள் செய்த பிரச்சார முறையினாலேயே இந்த அமைப்புகள் சிறுத்து போய் விட்டன.

குடியிருப்பு பகுதிகள்,கோயில் பகுதிகள்,வழிபாட்டு தளங்கள் ஆகிய இடங்களில் நின்று கொண்டு மிகவும் கீழ்தரமான,கொச்சையான,நாலாந்தர மொழியில் இறைவனை விமர்சனம் செய்வார்கள். இவர்கள் பேசும் அந்த ஆபாச மொழியினை கேட்கவே சில விசிலடிச்சான் குஞ்சுகள் இருப்பர்கள். அந்த சிலரை குசி படுத்தி மட்டும் இவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்.
பார்பனீய எதிர்ப்பு என சொல்லிகொண்டு பிராமண வீட்டு பெண்களை பற்றி இவர்கள் செய்யும் விமர்சனம் ஆபாச,அயோக்கியதனத்தின் உச்சம். கேட்டால் பகுத்தறிவை வளர்த்து,பார்பனீயத்தை எதிர்க்கிறார்களாம்.
இவர்களின் இந்த அனுகுமுறை காரணத்தாலேயே இந்த இயக்கம் கட்டெரும்பாய் தேய்ந்து போய்விட்டது.என்னதான் நாத்திக சிந்தனை இருந்தாலும் சிலருக்கு இறை நம்பிக்கை இருந்து கொண்டேதான் இருக்கிறது.ஒரு மனிதனின் வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கையும்,தைரியமும்தான் அந்த தன்னம்பிக்கையும் தைரியமும் இறைவன் நம்பிக்கை என்ற ஒரு மாயை மூலம் கிடைத்தால் கிடைத்து விட்டு போகட்டுமே என்றும் நினைக்க தோன்றுகிறது.

...

>

யார் .அந்த பெண் பதிவர்...?
பக்கத்து மாநிலத்துல இருக்கும் பெண் பதிவர் அவர்..! கவிதையா எழுதிதள்ளுவாங்க..! ஒரு தடவை அவங்க ஊர்ல ஒரு மலை கோவில் ரொம்ப விஷேசம் ன்னு சொல்லி அவங்க ஊருக்கு சக பதிவர்கள் சில பேர அழைக்கவே பதிவர்கள் சிலரும் தங்கள் குடும்பத்துடன் அவங்க ஊருக்கு போனாங்க. அந்தபெண் பதிவரின் கணவர் குழந்தைகள் எல்லாம் சந்தோசமா வரவேற்ப்பு கொடுத்துநல்ல உபசரிப்பு . கொஞ்ச நேரத்துல எல்லோரும் கூட்டமா அங்க இருக்குற மலைகோயிலுக்கு கிளம்பி போனாங்க.

அது கொஞ்சம் திகிலான காட்டு பாதை மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி..!


எல்லா பதிவர்களின் குடும்பத்தினரும் நல்ல அன்யோன்யமா பழகி கல கல ன்னு கோயிலுக்கு போயிட்டு திரும்பிகிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு நாலைஞ்சு பேரு முக மூடி போட்டுக்கிட்டு கைல துப்பாக்கியோட அவங்கள சுத்தி வலைசுட்டாங்க..! ம்ம்ம் போட்டு இருக்குற நகைகள் எல்லாம் கழட்டுங்க னு சொல்லவே..!
ஆளாளுக்கு பயத்துல சத்தம்போட..! அந்த பெண் பதிவர் மட்டும் அசரவே இல்ல..! அந்த மூகமுடி காரங்கள நோக்கி மெல்ல முன்னேற ஆரம்பிக்க அவங்க எல்லோரும் கொஞ்சமா பின்னாடி போறாங்க தன் கூட வந்தவங்கள பார்த்து கொஞ்சம் எட்டி போக சொல்லுறாங்க அந்த பெண் பதிவர் . இங்க சக பதிவர்களுக்கு குழப்பம் என்ன இவங்க மட்டும் தனியா போறாங்க பயமே இல்லாம ஒருவேள விஜய சாந்தி கணக்கா சண்டை ஏதும் போடுவாங்களோ அப்படின்னு யோசிச்சுகிட்டே அந்த பெண்பதிவரின் கணவர் ,குழந்தைகள பார்த்தா அவங்க கொஞ்சம் கூட சலனம் இல்லாம தெம்பா நிக்குறாங்க..!


அங்க பார்த்தா அந்த பெண்பதிவர் வானத்த பார்த்து பூமிய பார்த்து மரம் ,மலை எல்லாத்தையும் பார்த்து ஆவேசமா என்னமோ சொல்ல ....!

அவ்வளவுதான் அந்த மூகமுடி காரங்கள பார்க்கணும் எதோ காக்கா கூட்டதுல கல்லெறிஞ்மாதிரி சிதறி அடிச்சு பின்னங்கால் பிடரியில அடிக்க ஓடுரானுங்க ...ஓடுரானுங்க ...ஓடியே போய்ட்டானுங்க ...!

அத பார்த்த சக பதிவர்களுக்கு ஏதோ கொஞ்சம் புரிய.... பதிவர் மனைவியருக்கு குழப்பம்.ஒரு பதிவர் மனைவி அவர் கணவரிடம்ஏங்க என்ன சொல்லி இருப்பாங்க கொள்ளை காரனுங்க இப்படி ஓடுராங்க...!அனேகமா கவிதை எதும் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.!கவிதையா ..? அதுக்கா இப்படி..? நீங்க அவங்க கவிதை எல்லாம் படிச்சு இருக்கீங்கதானே...?ம்ம்ம்.. ப்லாக் ல படிக்கும் போது ஒரு மாதிரிதான் இருக்கும் ஆனா நேர்ல பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் பயமாதான் வருது...!என்னங்க இப்படி மாட்டி உட்டுடீங்க ...! நம்மகிட்ட கவிதை எதும் சொல்லிட போறாங்க குழந்தைகள் எல்லாம் பயந்துறபோராங்க என்ன பண்ணுறது ..!ம்ம்ம் பயப்படாத கொஞ்சம் அட்ஜெஸ் பண்ணிக்கோ நைட்டுகுள்ள எப்படியும் கிளம்பிடலாம்..!ஒரு வெற்றி புன்னகையுடன் பெண்பதிவர் திரும்பி வருகிறார் எல்லோரும் புறப்பட தயாராக... பெண் பதிவரின் கணவரை காணோம். தேடி பார்த்தா பக்கத்துல இருக்குர ஒரு கொடுக்காபுளி மரத்துல கைய வைச்சுகிட்டு வானத்த பார்த்த படி நிக்குறார். கண்ணெல்லாம் சிவந்து உணர்ச்சி வசபட்ட நிலையில இருக்கார். பதிவர் எல்லாம் அவர கூட்டி வராங்க .கொஞ்சதூரம் யாரும் எதுவும் பேசல ஒரு பதிவர் மட்டும் அந்த பெண்பதிவரின் கணவரிடம் மெல்ல பேச்சு கொடுக்கிரார்.வீட்டுல எல்லாம் எப்படிண்ணே கவிதை எதும் சொல்லிட்டே இருப்பாங்களா..?ஆமா.. சொல்லுவாங்க...!அவங்க கவிதை உங்களுக்கு புடிக்குமா..?அதுக்கு அவர் கோவமா ஒரு பார்வை மட்டும் பார்க்குறார்..!இல்ல.... எப்படி சமாளிக்கிறீங்க அதான் கேட்டேன்..!வீடு நெருங்கவே பெண்பதிவர், பதிவர் மனைவியர் எல்லாம் வீட்டிற்க்கு செல்ல..!பெண்பதிவரின் கணவர் பதிவர்களை ஒரு கோயில் மண்டபத்திற்கு கூட்டி செல்கிறார்.அங்கே எல்லோரையும் அமர சொல்கிறார்..! கொஞ்சம் கனைத்த படி பேச ஆரம்பிக்கிறார்..!கவிதைங்கிற பேர்ல அவங்க வீட்டுல எப்ப்டியெல்லம் சித்ரவதை பண்ணுறாங்க தெரியுமா..! என் மனசுல உள்ள பாரத்த சொல்லுறேன்...!அவர் பட்ட அவஸ்த்தையை,அந்த ரத்த சரித்திரத்தை சிவப்பு கலர்ல சொல்லுரார் கேளுங்க...!காலைல டிபன் சாப்பிடுறத்துக்கு முன்னாடி எனக்கு ரெண்டு..! ,பசங்களுக்கு ரெண்டு..!என்ன .. ரெண்டு..?என்னவா? கவிதைதான் அதும் அந்த கவிதைக்கு கருத்து சொல்லிட்டுதான் சாப்பிடவே ஆரம்பிக்கனும் இல்லாட்டி சாப்பாடு கிடைக்காது .!இதுக்காகவே மதிய சாப்பாட்டுக்கு நான் வீட்டுக்கு போறது இல்ல..! ஆனா அப்படியும் விட மாட்டாங்க சாப்பாடு கொடுத்து அனுப்பும்போது கவிதையும் எழுதி கொடுத்து விடுவாங்க அதுக்கு போன் பண்ணி கருத்து சொல்லனும்..! சாப்பாடு நான் மீதம் வைச்சுட்டா.. ஏன் மாமா சாப்பாடு சரியா சாப்பிடல கவிதை புடிக்கலையான்னு கேள்வி வேற..!ஐயோ...!அவங்களுக்கு எப்போ கவிதை வரும்னே தெரியாது..!

சில சமயம் நான் பாத்ரூம் ல குளிச்சுகிட்டு இருக்கும் போது வெளில நின்னு கவிதை சொல்லுவாங்க ..! அதும் அந்த கவிதையை கேட்டு பாத்ரூம் ல இருந்தபடியே கைதட்ட சொல்லுவாங்க..என்ன பண்ணுறது நானும் உள்ள இருந்தபடி கைதட்டுவேன்...!நைட்டு ரெண்டு மணிக்கு எழுப்பி மாமா கவிதை கேளுங்கன்னு சொல்லி இருக்காங்க தெரியுமா?


அட கொடுமையே..?ஒரு தடவை அவங்க பாட்டி செத்துத்டாங்க...! இவங்களுக்கு அந்த பாட்டின்னா உயிரு அங்க சாவுல ரொம்ப அழுது ஆர்பாட்டம் பண்ணிடாங்க.. எனக்கே அப்போ ரொம்ப பாவமா போச்சு அழுதுகிட்டே என்னை கூப்பிட்டாங்க அழுதுகிட்டுதானே கூப்பிடுறாங்கன்னு நம்பி போனேன் என்னை தனியா கூட்டிகிட்டு போய் அழுதுகிட்டே முழுசா மூணு கவிதை சொல்லிட்டு அழுதுகிட்டே போய்ட்டாங்க...!என்னால எவ்வளவுதான் தாங்க முடியும் சொல்லுங்க..? நானும் மனுசன் தானே .. என்னை என்ன இரும்புலையா செஞ்சு இருக்காங்க..?
ஒரு கட்டத்துமேல என்னால முடியல நேரா அவங்க அம்மா,அப்பா கிட்ட சொல்லி வந்து புத்திமதி சொல்லிட்டு போங்கன்னு சொல்லி கூப்பிட்டேன். அதுக்கு அவங்க அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா...? அவ கவிதை தாங்க முடியாமதான் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சோம் அங்க வந்தும் ஆரம்பிச்சுட்டாளா..? அப்படின்னு சொல்ல என்னை எப்படி மாட்ட வைச்சு இருக்காங்கன்னு அப்போதான் புரிஞ்சது..!
ஒரு ரெண்டு நாள் கழிச்சு அவங்க அம்மாவும்,அப்பாவும் வந்தாங்க, வரும் போது கூட ஒருத்தர கூட்டி வந்தாங்க அவருக்கு ஒரு எண்பது வயசு இருக்கும் நாட்டாம தாத்தா னு சொல்லுவாங்களாம். அவர் பேச்சுக்கு அவங்க ஊரே கட்டுப்படுமாம் அப்படி ஒரு மரியாதை அவருக்கு..! பாவம் நடக்க முடியாம நடந்து வந்தார்..! எல்லோரும் இவங்ககிட்ட எடுத்து சொல்லி நெறைய புத்தி மதி சொல்லிகிட்டு இருந்தாங்க, அப்போ, திடீர்னு ’’இறையே எனக்கு ஏன் இச்சோதனைனு’’ சொல்லி சத்தமா ஒரு கவிதை ஆரம்பிச்சாங்க பாருங்க ...அவ்ளோதான் நடக்க முடியாம வந்த அந்த நாட்டம தாத்தா எந்திரிச்சு ஓடீருக்காரு பாருங்க ஓட்டம் அவர் ஓடி போன அந்த காட்சி இன்னமும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது..! ஓடி போன அந்த தாத்தா ஒரு ஷேர் ஆட்டோ புடிச்சு தப்பிச்சு போயிட்டார்.ஆனா இவங்க கவிதை ய நிறுத்தல அவங்க அப்பா இருக்க்க்கி காதை பொத்திகிட்டார். அவங்க அம்மா தலைலயே அடிச்சுகிறாங்க. நான் மட்டும் ங்ஙே னு உக்காந்து இருக்கேன் வேற என்ன செய்ய..?
அப்படியே ஒரு வாரம் போச்சு இவங்க என் கிட்ட வந்து மாமா நான் இனிமே கவிதை சொல்ல மாட்டேன் அப்படின்னு சொல்ல எனக்கு ஆச்சர்யம், சந்தோசம் தாங்கல..! ஏன் இப்படி ஒரு முடிவுன்னு கேட்டா... அதெல்லாம் கேக்காதீங்க நான் இனி கவிதை சொல்லல அதுக்கு தினமும் எனக்கு இருநூரு ரூவா வேணும் னு சொல்ல ஏன் எதுக்குன்னு கேக்காம நானும் சரின்னுட்டேன்..!
ஒரு அஞ்சு நாள் நல்லா நிம்மதியா போச்சு ஆறாவது நாள் ஒரு பெரியவர் நான் வேலை செய்யுற இடத்துக்கு வந்தார் அந்த பெரியவர் மனைவி தினமும் ஆஹா..!அருமை..!பிரமாதம்..! அப்படினு புலம்புறாங்களாம் என்ன காரணம் னு என் கிட்ட கேக்குறார் அவர் யாருன்னே எனக்கு தெரியல நான் என்ன சொல்ல.? அதோட உங்க வீட்டுல என் மனைவி வேலைக்கு சேர்ந்த பிறகுதான் இப்படி புலம்புது அப்படி சொல்ல ..! இவர் ஏதோ அட்ரஸ் மாறி வந்துட்டார்னு நினைசேன் ஆனா விலாசம் என் மனைவி பேரு எல்லாம் சரியா சொல்லுரார் என்ன அப்படின்னு விசாரிச்சா..? என்ன நடந்தது தெரியுமா? இவங்க என்ன காரியம் செய்ஞ்சு இருக்காங்க பாருங்க..
பக்கத்துல ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி ல வேலை பார்க்குற ஒரு அம்மாவ கூப்பிட்டு அங்க கொடுக்குறத விட சம்பளம் அதிகமா தரேன்னு சொல்லி வீட்டுல உக்கார வைச்சு ஹார்லிக்ஸ்,பூஸ்ட் எல்லாம் போட்டு கொடுத்து சம்பளம் கொடுத்து கவிதை சொல்லி இருகாங்கப்பா எங்கயாச்சும் நடக்குமா? இவங்க சொல்லுற கவிதைக்கு எல்லாம் ஆஹா..!அருமை..!!பிரமாதம்...!!!அப்படின்னு மட்டும் சொல்லனுமாம் அந்த அம்மா.. இதான் ஒப்பந்தம் .
அதயே வீட்டுலயும் போய் புலம்பி இருக்கு அந்த அம்மா..!

எதும் சிக்கல் வர போகுதுன்னு அதயும் நிறுத்திட்டேன்..!இப்போ கொஞ்ச நாள் முன்னாடி நாங்க எல்லோரும் காளஹஸ்தி கோயிலுக்கு போனோம் சாமி கும்பிட்டு திரும்பும்போது இவங்கள காணோம் தேடி பார்த்தா ஒரு கோபுரம் முன்னாடி நின்னுகிட்டு ஏ...கோபுரமே..... அப்படின்னு கவிதை சொல்லிட்டு இருக்காங்க..! கூட்டிட்டு வந்துட்டோம் மறுநாள் பார்த்தா அந்த கோபுரமே இடிஞ்சு விழுந்துட்டு..!பயமால்ல இருக்கு..!இப்போ எனக்கு என்ன பயம்னா இவங்க தாஜ்மஹால் பார்க்கணும்னு கூட்டி போக சொல்லி அடம் பண்னுராங்க என்ன செய்ரதுன்னு புரியல ...!

ஐயோ எப்படியாச்சும் தாஜ்மஹால காப்பாத்துங்கண்ணே..!----தொடரும்

டிஸ்கி;-

(நக்கல் பண்ணி பதிவு போட்டா மட்டும் எவ்ளோ பெரிய பதிவா வருது ...! அடுத்த பாகம் இன்னும் நெறய சம்பவங்களுடன் எப்போவாச்சும் வரும்)சரி அந்த பதிவர் யார்னு கண்டு பிடிச்சீங்களா .?? ;;))


.


>