மரங்களை ரசிப்போம் வாருங்கள்!!!

இயற்கையின் படைப்புகளில் அனைத்துமே ரசிக்க கூடியதுதான்! மலைகள்,வானம்,மேகம்,அருவிகள்,றுகள்,நிலவு நட்சத்திரங்கள்,சூரியன்,கடல், மழை,பனி,காலை,மாலை,இரவு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! இயற்கையின் டைப்புகளில் நம்மை மிகவும் வியக்க வைப்பது மரங்களும் கூடத்தான்! எத்தனை விதமான மரங்கள்? பூப்பூக்கும் மரங்கள்! காய் கொடுக்கும் மரங்கள்!கனி கொடுக்கும் மரங்கள்! நிழல் கொடுக்கும் மரங்கள்! அதிகமா நாம் மரங்களை பார்த்து ழகி விட்டதால் தை கவனிக்காமல் அதன் அழகினை ரசிக்காமல் விட்டு விடுகின்றோமோ தோன்றுகிறது!

நடமாடும் உயிரினங்களில் அவலட்சணமான! தொந்தி தொப்பையுடன்! கூடிய அருவெருக்க கூடிய சில வகை உயிரினங்களை காணலாம்! ஆனால் மரங்களை பாருங்கள் மிக நேர்த்தியான வகையில் செய்து வைத்தாற்போல அதன் அமைப்பும் வளர்ச்சியும் இருக்கும்!

மரங்களை வைத்து பதிவெழுத வேண்டும் வித விதமான மரங்களை படமெடுக்க வேண்டும் என நினைத்த பிறகு ,போன வாரம் ஊருக்கு சென்ற போது தஞ்சை -பட்டுக்கோட்டை இடையே பஸ்சில் சென்ற போது மரங்களை கவனித்தால் அடடா! எத்தனை எத்தனை விதமான மரவகைகள்
பஸ்சில் போனதால் எதையும் படமெடுக்க முடியவில்லை!

அடுத்த முறை ஊருக்கு போகும் போது நிறை மரங்களை பிடித்து வர வேண்டும்!

இப்போது வலையில் சுட்ட சில படங்களுடன் எங்க ஊரில் எடுத்த சில மரங்கள்!

மா மரம்

(வலைப்படம்)
மாமரம் என்றால் நினைவுக்கு வருவது!!! எங்க ஊரில் சித்திரை மாதம் துவங்க இருக்கும் நேரங்களில் இந்த ''மாம்பூ''வாசனை எங்கும் வீசும் சித்திரை மாதம் மாம்பூ வாசனை என்றால் ஊர் திருவிழா நினைவுக்கு வரும்! அப்புறம் பழைய சோற்றுக்கு துவர்ப்புடன் கூடிய உப்பில் போட்ட மாவடு!!
வேப்ப மரம்


(வலைப்படம் )
வீட்டில் யாருக்காவது அம்மை போட்டு இருந்தால் வாசலில் வேப்பிலை தொங்கும்! எனக்கு வேப்பமரம் என்றால் சின்ன வயதில் வேப்பங்கொட்டை பொறுக்கி விற்றதுதான் நினைவுக்கு வரும் அப்போ கிலோ ஒரு ரூபாய்!
புளிய மரம்

புளிய மரங்களை பார்க்கும்போது வயதான பெரிய மனிதர்களை பார்க்கும் ஒரு உணர்வு உண்டாகிறது! இப்போது இருக்கும் புளிய மரங்கள் எல்லாம் மிக வயதான மரங்களாக தோன்றுகிறது! புதிதாக யாரும் புளிய மரங்களை நடுவதாக தெரியவில்லை! இப்போது உள்ள ரங்களின் ஆயுள் முடிந்து விட்டால் அடுத்தடுத்த தலை முறையினருக்கு புளி கிடைக்குமா ??

பலா மரம்


பலா மரம் மிக உறுதியானது எளிதில் வளராது,பலா
பிஞ்சை எங்கூரு பக்கம்
பலா மூஸ் அப்படின்னு சொல்லுவாங்க!
அத புளி குழம்பு,கறி குழம்புல போட்டு சமைப்பாங்க நல்லா இருக்கும்!!

தென்னை மரம்தென்னை மரத்த பத்தி என்ன சொல்ல! நெறை சொல்லலாம்! தென்னைய பெத்தா இளநீரு +கள்ளு, புள்ளைய பெத்தா கண்ணீரு! இப்போதைக்கு இதான்!

ஈச்சை மரம்

இந்த ஈச்சை மரத்தின் பழங்கள் நல்ல சுவையுடன்தான் இருக்கும். ஆனால் சதை பற்று இருக்காது! ஆனால் அதன் கொட்டை மட்டும் பேரீச்சம் பழ கொட்டை போல இருக்கும்!


பனை மரம்

அண்ணன் தம்பி போல இருக்குல்ல? பனை மரம்னா பனங்கள்ளு,நண்டு ,தோசை,கார சட்னி இதான் நினைவு வருது!

நாவல் பழ மரம்


ஊர் பக்கம் இருக்கும் நாவல் பழங்களுக்கு தனி சுவை உண்டு ! இப்போ நாவல் பழ சீசன் மரத்தடியில சின்ன பசங்க பழம் பொறுக்கிக்கிட்டு இருந்தாங்க!!


அரச மரம்

இது சின்ன சைஸ் மரம்! ''அரசன நம்பி புருசன கைவிடாதே'' அப்படின்னு ஒரு பழ மொழி இருக்குல்ல அத இப்படியும் சொல்லுறாங்க ''''அரசை நம்பி புருசன கைவிடாதே'' அப்படின்னு! அரச மரத்து காற்றை சுவாசிக்கும் போது பெண்களின் கர்ப்பப்பை வலிமை அதிகரிக்குமாம் அதனால் குழந்தை தங்காதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்! அதான் அரசை நம்பி புருசன கைவிடாதே!!
ஒதிய மரம்

இந்த மரம் எவ்ளோ பெருசா போனாலும் உறுதியா இருக்காது! அதான் ஒதியன் பெருத்தாலும் உத்திரத்துக்கு ஆகாதுன்னு சொல்லுறாங்க!!


கருவேல மரம்

இந்த கருவேல மரம் மருத்துவ குணம் வாய்ந்தது இதன் பட்டையில் இருந்து பல் பொடி தயார் பண்ணுறாங்க!

ரோட்டோரம் ஆலமரம்

பெரிய ஆல மரம் ஏதும் கண்ணுல மாட்டல!இங்க ஊருக்கு இங்க இருந்து ரெண்டு கிலோ மீட்டர்!!

ஆத்தங்கரை தேக்கு மரம்

இது எங்க ஊரு ஆறு இன்னும் தண்ணி வரல தண்ணி வந்து கொஞ்ச நாள்ல பாக்கணும் ! கரையில உள்ள தேக்கு மரம் எல்லாம் பச்ச பசேல்னு அடர்த்தியா ஆயிடும்! ரெண்டு பக்கமும் உள்ள தேக்கு மரங்கள் ஆத்தையே மூடினது போல இருக்கும் அப்போ மழை பெஞ்சா கூட ஆறு நனையாது!!

கூந்தல் பனை மரம்

இந்த கூந்தல் பனை மிக பிரம்மாண்டமா வளரும் இந்த படத்தில உள்ளது அந்த மரத்தின் கன்றுதான் இதுவே ஒரு பனை மரம் உயரம் இருக்கும்! இது எவ்ளோ உயரம் வளரும்னு கீழ உள்ள படத்த பாருங்க!


நடுவுல உயரமா நிக்குறது பட்டுப்போன கூந்தல் பனை மரம். முன்னாடி இந்த மரம் கம்பீரமா நின்னது பார்க்க பிரம்மாண்டமா இருக்கும்! பட்டுப்போன இந்த மரத்த சுத்தி அரசமரம் ஒன்னு நிக்குது பாருங்க அப்போ இதன் உயரம் எப்படி இருக்கும் ?
மூங்கிலும் நாங்களும்

கிண்டி பூங்காவில் எடுத்த படம்


>