மறைக்கப்பட்ட ஆடி மாத ரகசியம்...!

ஆடிமாதம் திருமணம் செய்ய கூடாது என்பதற்கு சொல்ல படுகின்ற காரணங்கள் என்ன ..?

ஆடி மாதம் விவசாயம் துவங்கும் காலம் அப்போது கல்யாணம் கச்சேரி என நேரத்தை செலவிடாமல் விவசாயத்தில் முழு கவனம் கொள்ள வேண்டும் ..!

ஆடியில் திருமணம் செய்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் சித்திரை கடும் வெய்யில் காலம் அந்த நேரத்தில் குழந்தைக்கு பாதிப்பு வரலாம் ..!

ஜோதிடரீதியான காரணம் ..!

சித்திரை மாதம் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் சூரியன் உச்சத்தில் இருப்பார் . சூரியன் உச்சத்தில் இருக்க பிறந்தவர்களுக்கு தலைமை பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் (இங்கேதான் கவனிக்க வேண்டும்) . வீட்டில் விரைவில் குடும்ப தலைவர் ஆகிவிடுவாராம் . அதாவது தந்தைக்கு ஆகாது ..!!!
அதனால் ஆடியில் திருமணம் முடிக்கக் கூடாது என அவாள் சொன்னது ..!

ஆனால் அவாள் மட்டும் ஆடியில் திருமணம் செய்து கொள்வார்கள் ..!
அவாள் விவசாயம் செய்ய மாட்டாள் ..! சரி .. சித்திரையில் அவாள் மேல் வெய்யில் அடிக்காதா ..? அவாள் வீட்டு அப்பாக்கள் என்ன சிறப்பு தகப்பன்களா ..?

மற்றவர்களை வேண்டாமென சொல்லிவிட்டு அவர்கள் மட்டும் ஆடியில் திருமணம் செய்ய காரணம் ..!

சூரியன் உச்சத்தில் இருக்க பிறந்தவர்கள் எஸ் , ஐபிஎஸ் பதவிகள் மற்றும் அரசு பதவிகள் மேலும் மற்றவர்களை அடக்கியாளும் பொறுப்புகள் வகிப்பார்கள்.

அதனால் தான் அவாள் மட்டும் தலைமை பதவிகள் வகிக்க வேண்டும் என்ற சூழ்ச்சி எண்ணத்தில் ஜோதிடத்தை காரணம் காட்டி மற்றவர்களை பெரும் பதவிகளுக்கு வரவிடாமல் தடுத்து உள்ளனர். ஒரு பிரபல ஜோதிடரிடம் பேசிக்கொண்டு இருந்த போது இதை சொன்னார் இதில் ஒரு ஆச்சரிய விஷயம் என்னவெனில் அவர்களது ஆட்களை அவரே போட்டு கொடுத்ததுதான்.நானும் என் பங்கிற்கு சில விஷயங்களை ஆராய்ந்த போது அட ஆமாம்ல என தோன்றியது ..!

ஆடிப்பட்டம் தேடி விதை ..! என்பதை இனி ஆடிப்பட்டம் கூடி விதை ..! என்றும் சொல்லலாம்


இந்த பதிவின் மூலம் சொல்ல படுவது யாதெனில் ;- ஆடியில் கூடி சித்திரையில் ஒரு தலைவனை பெற்றெடுக்கும் படி அறிவுத்தபடுகின்றது ..!

ஆடி பிறக்க இன்னும் ஜஸ்ட் அஞ்சு மாசம்தான் இருக்கு ..!

>