பழைய நெனப்பு

அமிர்த வர்ஷினி அம்மா ஒரு பதிவு போட்டு இருக்காங்க
பணத்தின் ருசி அப்படின்னு. அத படிச்சோன நமக்கும்
பழைய நெனப்பு வந்துடுச்சிஎன்ன பதிவு போடலாம்ன்னு
சரக்கு இல்லாம முழிச்சிகிட்டு இருந்தப்போ
நல்ல மேட்டர் மாட்டிகிச்சு.

ஆமாங்க! ஊருல வேப்பங்கொட்டை பொறுக்கி
கிலோ ஒரு ரூபாய்க்கு எங்க ஊரு எஸ் எஸ் பி மில்லுல
வித்துபுட்டு, எங்க ஊரு ஐயப்பா தேட்டர்ல
அம்பது காசு டிக்கடுல
(ஆமா! பெஞ்சு அம்பது காசு,பேக் பெஞ்சு எழுவத்தி அஞ்சு காசு,
சேர் ஒரு ரூவா! அப்போ நெனைச்சுக்குவேன்
என்னிக்காவது ஒருநாள் ஒரு ரூவா சேர் டிக்கடுல
உக்காந்து படம் பாக்கணும்)
மூட்ட பூச்சி கடியோட 'தாய் மீது சத்தியம்'படம் பார்த்த
அந்த ''எபெக்ட்'' இப்போ இங்க ''சத்யம்'' லயும் ''அபிராமி'' லயும்
இருக்குற'' DTS '' எபெக்ட்'' டுக்கு இல்லையே ?

என்ன பாத்து எங்கம்மா அடிக்கடி சொல்லுற வார்த்தை!
''நாய்க்கு வேலையும் இல்லையாம் அதுபோல
அலைச்சலும் இல்லையாம்''ஊரெல்லாம் வெயில்ல
சுத்திட்டு பசியோட வீட்டுக்கு வந்து எங்கம்மா போடுற
ஒரு சட்டி பழையது அதுக்கு தொட்டுக்க நார்த்தங்கா ஊறுகா,
உப்புல ஊறவைச்ச பச்ச மாங்கா,கொத்தவரங்கா வத்தல்.
அந்த பழைய சோறு கொடுத்த அந்த நிறைவான சுவை
இப்போ எத தின்னாலும் கிடைக்கலையே?

தீவாளிக்கு பத்துநாள் முன்னாடில இருந்து கிடைக்கிற
காசுல கொஞ்ச,கொஞ்சமா வெடியும் மத்தாப்புமா
வாங்கி சேர்த்து தீவாளிக்கு முதநாள் கண்ணு முழிச்சு
கொளுத்தி கொண்டாடுன அந்த தீவாளி எங்க ?


பொங்கல் நேரத்துல பள்ளிக்கூடம் போகும்போது
எந்த கடைல நல்ல எட்டி எட்டி கரனை இருக்கோ,
அந்த கடைலதான் கரும்பு வாங்கனும்னு
முன்னாடியே பார்த்து வைச்சுக்குவோமே
அந்த பொங்கலும் காணா போச்சே ?


ஆனா! ஆனா!

இப்போ, கொஞ்ச நாளா நான் தொலைச்ச அந்த தீவாளியும்,
பொங்கலும் என் புள்ளைங்க முகத்துல தெரியுதே!
தீவாளிக்கும், பொங்கலுக்கும் புள்ளைங்க பழைய
நெனப்ப கொண்டு வருதே! அப்போ கெடைச்ச
சந்தோசம் இப்போயும் கிடைக்குதே! இது போதுமே !


இப்போ நாம எல்லோரும் கடந்த காலத்த நெனைச்சு
ம்ம்ம்..... அதெல்லாம் ஒருகாலம் அதெல்லாம்
மறுபடி கிடைக்குமா? அப்படின்னு ஒரு ஏக்கமா
நெனைச்சு பாக்குறோமே? ஏன்? வருங்காலத்த
ஒரு பசுமையான காலமா உருவாக்க முயற்சி
பண்ணினா என்ன?

என் பசுமையான எதிர்காலத்துக்கு நான் ஒரு கனவு
வைச்சு இருக்கேன்.ஒரு நூறு தென்ன மரம் இருக்குற
ஒரு தோப்பு, அதுல சின்னதா ஒரு குளம் அதுல மீன்
வளர்த்து தூண்டி போட்டு மீன் புடிக்க.
அப்புறம் இறகு பந்து ஆட ஒரு களம்.
சின்னதா ஒரு தோட்டம் அதுல நெறைய
செடி வளர்க்கணும் மிளகாய் செடி உட்பட.
நடுவுல பம்பு செட்டு இருவது அடி உயரத்துல
இருந்து தண்ணி ஊத்துரதுபோல அருவிபோல
அமைச்சுக்கனும். நேரம் கிடைக்கிறப்போ
அங்க உக்காந்து தண்ணி அடிக்கணும் .
(ராம லட்சுமி அம்மா இந்த வரிய மட்டும் படிக்காதிங்க )
>