யட்சியும்,விரலியும் நானும் குவாட்டரும் ..!

யட்சி விரலி பத்தி ஆதி பதிவ படிச்சதும் ஒரே குழப்பம் யட்சி விரலி பத்தி கேள்விபட்டதே இல்ல ஆனா கேட்ட மாதிரியும் இருக்கு.. ! அப்புறம் ஜெயந்தி ஒருபதிவு போடுறாங்க அதே போல ..! இன்னும் குழப்பம் இதுக்கெல்லாம் காரணம் செல்வேந்திரன் பதிவுதான்..! அவர் யட்சிய மெதுவா வலைக்குள்ள விட்டு வேடிக்கை பார்க்க ...!;) கடசியா எங்க குருதான் யட்சி பத்தி நல்லா விளக்கம் குடுத்தாரு..! ஒரு வழியா நிம்மதி ஆச்சு. சரி நாமளும் யட்சி ,விரலி பத்தி ஒரு பதிவு போட்டுடலாம்னு இந்த பதிவு ...!


வீட்டுக்கு கிளம்பிட்டேன் போற வழில ஒரு குவாட்டரும் வாங்கிட்டு போறேன் ..!


வீட்டுக்கு
போய் பாட்டில தொறந்தா மூடியும் சேர்ந்து சுத்துது. பாட்டில தொரக்கும்போது மூடியும் சேர்ந்து சுத்துனா வர்ற எரிச்சல் இருக்கே..!! மண்டைல ஒரு தட்டு தட்டி தொறந்தா க்கர்ர்ட்டு ன்னு ஒரு சத்ததோட ஓபன் ஆச்சு...! ஓபன் ஆகும்போது எதோ ஒன்னு உள்ள இருந்து வெளில போனாமாதிரி ஒரு பீல்..! மன பிராந்தியா இருக்கும் ..!

கிளாஸ தேடி சரக்க ஊத்தபோனா கிளாசுக்கு பக்கத்துல ஒரு உருவம் ..! யாருன்னு கேட்டா ? நாந்தான் விரலி அப்படிங்குது..!
ஆஹா ..!
என்ன பண்ணுறது ஒன்னும் புரியலையே ..! சரி எங்க இருந்து வந்தே ??

விரலி சொல்லுது ...

ஒருவாட்டி ஒரு காலி குவாட்டர் பாட்டிலில ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தேன் என்னை கவனிக்காம சரக்க ஊத்தி மூடிட்டானுங்க இப்போ உன்னாலத்தான் வெளில வந்தேன்..! சரி நீ சரக்க அடி நான் சும்மா வேடிக்கை பார்க்குறேன் .

சரக்குதான் வாங்கியாந்தேன் சைடு டிஷ் வாங்க மறந்துட்டேன்..!

போய் அடுப்படில எதாச்சும் இருக்கும் எடுத்துகிட்டு வான்னு விரலி சொல்லுது .!

முறைச்சுகிட்டு இருக்குற தங்கமணிய தாண்டி அடுப்படிக்கு போனா அங்க ஒண்ணுமில்ல...! ஊறுகா பானை மட்டும் தான் கண்ணுல பட்டுச்சு பானைகுள்ள கைய விட்டு கொஞ்சம் அடை மாங்கா ஊறுகா எடுத்துகிட்டேன் .

ஊறுகாய் கீழ வைச்சுட்டு சரக்க ஊத்த போரேன் பார்த்தா இப்போ இங்க இன்னொரு உருவம் ...!

ஐயோ நீயாரு...! பதறிபோய் கேக்குறேன் ...!

நாந்தான் யட்சி

யட்சியா ? நீ எப்படி வந்தே ?

ம்ம்ம் எல்லாம் ஊறுகா பானைக்குள்ள இருந்துதான் நான் கூட வாறது கூட தெரியாம வர்றே தண்ணி அடிக்க அவ்ளோ அவசரமா ?

இல்ல கவனிக்கல.!

யட்சியும் ,விரலியும் பக்கத்துல வைச்சுகிட்டு சரக்க அடிக்கணும் ஏதும் சிக்கல் வருமோ ?

மெதுவா விரலிகிட்ட பேச்சு கொடுக்குறேன் விரலி ஒனக்கு கோவம் ரொம்ப வருமாமே ?

ஆமா கோவம் வரும் நான் யட்சி போல கிடையாது...!

இத கேட்டு யட்சிக்கு ஈகோ பிராப்ளம் வந்துட்டு .!

என்ன ..? என்ன ..? உனக்கு தான் கோவம் வருமா ? எனக்கும் வரும் பாக்குறியா ?

இத விரலி கண்டுக்கவே இல்ல ..!

யட்சி இன்னும் கடுப்பாயிடுச்சு என் பக்கம் திரும்பி டேய் ..! எனக்கும் சரக்க ஊத்துடா நானும் கோவக்காரித்தான்.

யட்சிக்கு கொஞ்சம் ஊத்தி கொடுத்துட்டு நானும் கொஞ்சம் போட்டுகிறேன்..!

இப்போ யட்சி சவுண்டு விடுது .!

பொறுத்து பார்த்த விரலி தங்க முடியாம என் பக்கம் திரும்பி


டேய் போய் எனக்கும் ஒரு குவாட்டர் வாங்கிட்டு வாடா ..!


ஐயோ வேணாம் விரலி ..!


அவளுக்கு மட்டும் ஊத்தி கொடுக்குறே போடா எனக்கும் வாங்கிட்டு வா வரும்போது மறக்காம சைடு டிஷ் வாங்கிட்டு வந்துடு...!
ஓடிப்போய் ஒரு குவாட்டர் வாங்கிட்டு வரேன்..! மீதி இருந்த சரக்கெல்லாம் யட்சி அடிச்சுட்டு தள்ளாடிட்டு இருக்கு ..! இப்போ விரலி எனக்கு கொஞ்சம் ஊத்தி கொடுத்துட்டு அதும் நல்லா ஏத்திக்குது . ரெண்டுக்கும் செம வாக்குவாதம் நானும் குறுக்க குறுக்க பேசி சமாதான படுத்தி பார்க்குறேன் முடியல ...!

கதவ மெல்ல தொறந்து சிங்க மணி என்னங்க குடிச்சுட்டு தனியா
புலம்புறீங்களா...?

இல்ல இல்ல நீ போ..!

சிங்க மணிய பார்த்த யட்சியும் ,விரலியும் கப் சிப்னு ஆயிடுறாங்க எனக்கு லேசா பெருமை காலர தூக்கி விட்டுக்கிறேன்..!

இத விரலி கவனிச்சுட்டு ..!

என்னடா ..? உன்பொண்டாட்டிய பார்த்து பயந்துட்டேன்னு நெனைச்சியா கூப்புடுடா அவளை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்.

இப்போ யட்சி சொல்லுது இதான் உனக்கும் எனக்கும் வித்தியாசம் வம்பு பண்ணுற புத்தி உனக்குத்தான் எனக்கு அந்த எண்ணம் வரல பாரு ..?

விரலியும் யோசிக்குது ...! நேரம் ஆக ஆக எல்லோரும் டயர்டு ஆயிடுறோம்

யட்சி மெதுவா ஊறுகா பானைக்கு போய்டுது . விரலி ஒரு காலி பாட்டில்ல படுத்துக்குது பாட்டிலில இருந்த படியே சொல்லுது .

அடுத்தவாட்டி தண்ணி அடிக்கும்போது மறக்காம எங்க ரெண்டுபேரையும் கூப்பிடு...!

அய்யோ இது வேறயா ??? கொஞ்ச நேரத்துல நானும் தூங்கிடுறேன்..!
>