நமீதா ரசிகன்அந்த காலம் முதல் இப்போதுவரை கவர்ச்சி நடிகைகளுக்கென ஒரு தனி இடம் உண்டு..! கருப்பு வெள்ளை காலம் அதற்கு அடுத்த நிலை பற்றி தெரியவில்லை ..!ஜெய மாலினியை ஓரளவுக்கு தெரியும், அதன் பிறகு சிலுக்கு ஸ்மிதா ..! சில்க் கவர்ச்சி மட்டுமின்றி நல்ல குணசித்திர நடிகையாகவும் வலம் வந்தவர்..! எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கவர்ச்சி கன்னியாக இருந்தவர்.

சிலுக்குக்கு நிகராக இன்றுவரை யாரையும் சொல்ல முடியவில்லை ...!

ஆனால் ..!சமீபகாலமாக இந்த நமீதா கொடுக்கும் தொல்லை சற்று அதிகமாகவே இருப்பதாக தோன்றுகிறது..! சிலுக்குக்கு அடுத்த இடத்தில் சொல்லும் அளவுக்கு அவஸ்தை படுத்துகிறார்..!

பத்து வயசு பசங்க கூட ஹை நமீதாங்குரானுங்க..!நமீதா பாட்டு போகும்போது டிவி சேனல் மாத்தினா பெருசுங்க கூட முணுமுணுக்குது .!
நடிகை,கவர்ச்சி என்பதை விட ஒரு சினேகிதமான முக அமைப்பு அல்லது சினேகிதமான பேச்சு இவை இருந்தால்தான் மனதில் இடம் பிடிக்க முடியும் என தோன்றுகிறது.அப்படி ஒரு அமைப்பு நமீதாவிடம் நெறயவே உள்ளது ..!

கவர்ச்சி ..??? அதுமட்டும் என்ன கொஞ்சமாவா இருக்கு..! ம்ம்ம் நமக்கில்ல..நமக்கில்ல... அப்படின்னு நெனைச்சு சீ ..சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்லிட்டு விலகி போகவா தோணுது ?நின்னு வேடிக்கை பார்க்கத்தான் தோணுது ..! திருவிழா கூட்டத்துல முட்டாய் கடைய வேடிக்கை பார்க்குரதுபோல பார்க்குரோமோன்னு நமக்கே ஒரு பீல் வருது..!

இதுல நம்மள மட்டும் குறை சொல்லிக்க கூடாது..! அந்த புள்ளையும் என்ன சும்மாவா இருக்கு ...! நம்ம வேலைய பார்த்துகிட்டு சும்மா இருந்தா கூட மச்சான்... மச்சான்... மச்சான்... ன்னு சொல்லி உசுப்பேத்தி விடுது..!

பலபேரு நமீதாவ தன்னோட அத்தை பொண்ணு ரேஞ்சுக்கு நெனைச்சுகிட்டு இருக்காங்க..!

எப்படியோ....! இளைஞர் களின் இதய கிளி..! குலதெய்வம் நமீதா இதே இளமையுடனும் அழகுடனும் வாழட்டும் பல்லாண்டு..!இந்த பதிவு பற்றி ஒரு கேள்வி பதில் கேள்வியும் நானே பதிலும் நானே..!

நல்லாத் தானே போயிட்டு இருந்துச்சி எதுக்கு இப்படி ஒரு பதிவு ???

எல்லா தலைப்புலையும் நான் எழுதுறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் இப்படி ஒன்னு எழுதலாமேன்னு...!

குடும்ப தலைவனா லட்சணமா இல்லாம ஒரு கவர்ச்சி நடிகைக்காக பதிவு எழுதுறது நல்லவா இருக்கு ???

புத்திக்கு தெரியுது ஆனா ..? நமீதா பேரை கேட்டாலோ இல்ல அந்த புள்ள ஸ்டில் எதாச்சும் பார்த்தாலோ எனக்கு கல்யாணம் ஆனதே மறந்து போய்டுது...!

சரி எப்போலேர்ந்து நமீதா ரசிகன்...?

மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ..!

அது வேறயா ...? அது என்ன மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ....???

இல்ல இன்னொருத்தர் மனைவிக்கு எப்படி ரசிகன்னு சொல்லுறது நம்ம பண்பாடு கலாசாரம் ...இதெல்லாம் ...!

சரி ..சரி.. அது என்ன ஒரு நடிகைய போயி குலதெய்வம்னு ...! இப்படியெல்லாம் உனக்கு யார் சொல்லி கொடுக்குறது ....?

அது வந்து எங்க ..... இல்ல நாங்கல்லாம் அப்படித்தான் சொல்லுவோம்...!இந்த நமீதா மேட்டர் உங்க வீட்டுகார அம்மணிக்கு தெரியுமா ?ம்ம் .. தெரியும் தெரியும்...! நமீதா வ என்ன வீட்டுக்கா கூட்டியார போறார்னு நினைச்சுதோ என்னமோ தொலைஞ்சு போகட்டும்னு விட்டுடுச்சி ..!வீட்டுகார அம்மிணி க்கே தெரியும்போது வேற யாருக்கு பயப்புடனும்னு சொல்லி தான் இந்த பதிவு ...!

சரி தொலைஞ்சு போ...!
>