பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!

ஒரே நாளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் காலி ..! அதுவும் சில மணிநேரத்துக்குள்..! ஒரு சிறுத்தை குட்டி, ஆட்டு குட்டி விலையில் கிடைக்கிறது
என வர்ணிக்கப்பட்ட ரிலையன்ஸ் பெட்ரோலியம் பங்குகள் மள மள வென சரிகிறது. பதட்டம்..!படபடப்பு...!பயம்..! மாதம் முழுவதும் இரவும் பகலுமாய் வேலை செய்து கிடைக்கும் ஒரு தொகையை இப்படி பங்குசந்தையில் தொலைக்கின்றோமே என்ற ஒரு குற்ற உணர்ச்சி..! வீட்டிலும் சொல்ல முடியாது
கடும் மன உளைச்சல்..!! பங்குசந்தையை விட்டு விலகவும் முடியவில்லை..!
விட்டதை விட்ட இடத்தில் தான் தேட வேண்டும் என்ற ஒரு வேகம்..! சில ஆயிரங்கள் சில நாட்களில் லாபம் என்றால்... பல ஆயிரங்கள் பல நாட்களில் நஷ்ட்டம்..!
பங்கு சந்தையை பற்றி அறிந்து கொள்ள ஆவல்...! ஆனால் அந்த தகவல்களை தரும் தளங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருந்தன..! போதிய ஆங்கில அறிவும் இல்லை..! சில தமிழ் புத்தகங்கள் கிடைத்தன ஆனால் அவை தந்த தகவல்கள் மேலோட்டமாகவே இருந்தன.

பங்கு சந்தையின் ஆழம் தெரியாமல் இறங்கி தத்தளித்து கொண்டிருந்த நிலையில் கலங்கரை விளக்கமாக கண்ணில் பட்டதுதான் தமிழில் பங்குவணிகம் என்ற இந்த தளம் ...! இந்த தளம் என்கண்ணில் பட்ட நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள்..! இந்த தளத்தில் சந்தை பற்றிய தகவல்களுடன்
பைசா பவர் என்ற ஒரு சாட் அறை உருவாக்கி அதன்மூலம் சந்தையின் போக்கை
தொழில் நுட்ப பகுப்பாய்வின்படி எப்படி கணிப்பது என்ற ஒரு பெரிய விஷயத்தை எளிய முறையில் விலா வாரியாக சொல்லி கொடுத்தார் இந்த தளத்தின் ஆசிரியர் எங்கள் குரு திரு,எம். சரவணக்குமார் அவர்கள்..!

எத்தனை.. எத்தனை ..விஷயங்கள் எல்லாவற்றையும் பொறுமையுடனும் விளக்கமாகவும் கற்று கொடுத்து நஷ்ட்டங்களில் இருந்து மீள வைத்தார். இவரிடம் கற்று தேர்ந்த சிலர் இன்று பங்குசந்தை நிபுணர்களாகவே ஆகிவிட்டனர். ஒரு தொகையை பெற்று கொண்டு தொழில் நுட்ப பகுப்பாய்வினை சொல்லி கொடுப்பவர்களை விட நூரு மடங்கு விஷயங்களை இலவசமாக கற்று கொடுத்தார்.

இன்று எங்கள் நஷ்டங்களில் இருந்து விலகி லாபமான பாதையில் பயணித்து கொண்டு இருக்கின்றோம்..!

4.7.2011 இல் எங்கள் மரியாதைக்குரிய குரு எம்.சரவணக்குமார் பிறந்த நாள் காண்கிறார்..! அவர் வாழ்வில் எல்லாவகையான இன்பங்களையும் அடைந்து நோய்நொடியின்றி,நீடித்தஆயுளுடன் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்...!

>