''தமிழ்ப்படம்'' -இது விமர்சனம் அல்ல..!


இன்னியோட உன் ஆயுசு முடியபோகுது..! இன்னிக்கு நைட் நீ செத்துடுவே...!அப்படிங்குற கண்டிசன்ல உள்ள ஒருத்தன கூட்டிவந்து இந்தப்படம் பார்க்க சொன்னா அவன்கூட தன்னை மறந்து குலுங்கி குலுங்கி சிரிப்பான் அப்படி ஒரு காமெடி...!

படத்துல உள்ள சில காமெடிகள சொன்னா சுவாரஸ்யம் குறைஞ்சுடும்னு சொல்லுறாங்க ஆனா ..? எனக்கு அப்படி தோணல என்னதான் படத்துல உள்ள முழு நீள காமெடிகள விவரிச்சு சொன்னாலும் படம் பார்க்கும்போது யாராலையுமே சிரிப்ப அடக்க முடியாது...!

பாட்ஷா பட ரகுவரன் கெட் -அப்ல இருக்கும் தளபதி பட தேவா மம்முட்டி;

ஒரு உறைல ரெண்டு கத்தி இருக்க கூடாது .!

ஹீரோ சிவா ;

ஏன் ஒரு குவாட்டர்ல ரெண்டு கட்டிங் இல்லையா ? அதுபோல தான் ..!

ஒரு படத்த நக்கல் பண்ணி காமெடி வருது சுவாரஸ்யமா ரசிச்சு சிரிச்சு முடிச்சா அந்த காமெடி குள்ள கொசுறா இன்னொரு காமெடி வருது அதான் அதான் கலக்குது...!

அந்நியன் பட ஸ்டைல வில்லன எருமை மாடுகள மிதிக்க விட்டு கொல்ல போறாரு ஹீரோ ..! வில்லன் மேல எருமை கள ஏவி விட்டா நகர மாட்டேங்குது குடைய விரிச்சு காட்டி மிரள விட்டா .! நோ யூஸ் உடனே லேப்டாப்ல அந்நியன் படத்த மாடுகளுக்கு போட்டு காட்டுறாரு அப்போவும் மாடுக அசையல..!

இதெயெல்லாம் பார்த்து வில்லனுக்கு சிரிப்பு வந்துடுது விழுந்து .விழுந்து சிரிக்கிறாரு சிரிச்ச சிரிப்புல நெஞ்ச புடிச்சுகிட்டு கீழ விழுந்து செத்து போறாரு..!

ஹீரோ சிவா ; நீ ஹார்ட் பேசன்ட்னு தெரியும்டா ..! மாடுகள விட்டு கொல்ல நான் என்ன சர்க்கஸ் கம்பெனியா வைச்சு இருக்கேன் ..? உன்ன சிரிக்கவைச்சு கொல்லுரதுதான் என் திட்டமே...!


இதுபோல நெறைய சொல்லிகிட்டே போகலாம்..!

படம் பார்க்கும்போது பக்கத்துல இருந்த என் ஆறு வயசு பொண்ணு மட்டும் எதுக்குப்பா எல்லாரும் சிரிக்கிறாங்கன்னு அடிக்கடி கேட்டுகிட்டே இருந்துச்சு..!

குறைகள் ;- குறைகளை கண்டுபிடிச்சு சொல்ல நான் விமர்சகன் அல்ல நான் ரசிகன். நான் ரசித்ததை மட்டும் சொல்லுறேன். ஆமா ..! இவ்ளோதூரம் போய் படம் பார்த்துட்டு குறைகள கண்டு புடிச்சு நம்ம சந்தோசத்த ஏன் கெடுத்துக்கணும் ..?போனமா சிரிச்சமான்னு இல்லாம ..?

தமிழ் படம் பார்ட் 1 ,பார்ட் 2 ன்னு ஆறுமாசத்துக்கு ஒருதடவ இந்த மாதிரி படம் வந்தா கூட அலுக்காம பார்க்கலாம்னு தோணுது ..!


குறிப்பு ;- கூட்டம் குறையட்டும் கொஞ்ச நாள் கழிச்சு படம் பார்த்துக்கலாம்னு யாரும் இருக்காதீங்க ...! தேட்டர்ல அரங்கம் அதிரும் அப்ளாஸ் கூட படம்பார்க்கணும் அதுதான் நிஜமான சுவாரஸ்யம்...!

திருட்டு dvd பார்க்க நினைக்கிறவங்களுக்கு ;- அது வேஸ்ட்டுங்க .! இதமாதிரி படம் எப்போவாச்சும் தான் வரும் அத தியேட்டர்ல போய் பார்க்கும் நல்ல அனுபவத்த மிஸ் பண்ணாதீங்க...!

>