''லெக் அம்பயர் புடிச்ச கேட்ச்''

ஊருல இருந்தப்போ வருசாவருசம் கிரிக்கெட் போட்டியெல்லாம் நடத்துவோம் பத்து நாள், பதினைஞ்சு நாள் வரைக்கும் கூட போட்டிகள் நடக்கும்! நெறைய அணிகள் வந்து கலந்துக்கும்!


பட்டுக்கோட்டை,அதிராம்பட்டினம்,முத்துபேட்டை,
அத்திவெட்டி,வடசேரி மன்னார்குடி அணிகள் எல்லாம் பிரபலமானவை! எங்க மதுக்கூர் அணியும் தான்!
அப்போ நாங்க விளையாடினது ''கிரிக்கெட் பால்'' ல்லதான்.
இப்போ எல்லாம் டென்னிஸ் பந்துல விளையாடுறாங்க
''டென்னிஸ் பால் கிரிக்கெட்'' இப்போ பெரிய அளவில
போட்டி எல்லாம் நடக்குது!


இது தான் எங்க டீம் ஒரு போட்டில ஜெயிச்சப்போ எடுத்தது இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;))

அம்பயரிங்!!!

நாங்க போட்டி நடத்தும்போது நாங்களேதான் அம்பயரா இருப்போம்! சிலருக்கு அம்பயரா இருக்க புடிக்கும் சிலருக்கு புடிக்காது! இந்த அம்பயரிங்க்லதான் பெரிய காமெடியெல்லாம் நடக்கும்! சில அணி காரங்க களத்துல்ல இறங்கும்போதே அம்பயர பார்த்து ஒரு மெரட்டு மெரட்டு ட்டிட்டுதான் உள்ள இறங்குவாங்க ஹலோ அம்பயரே ஒழுங்கா அப்பயரிங் பண்ணனும் சரியா? அப்படின்னு!!!

சிலர் அம்பயரா நிக்கும்போது கவனமில்லாம சும்மா ஒப்புக்கு நிப்பாங்க ஒருவாட்டி ஒருத்தன் அம்பயரா நிக்கும்போது ரன் அவுட் க்கு அப்பீல் பண்ணுறாங்க! உடனே அவன் சாரி கவனிக்கல அப்படின்னு சொல்ல
ஆட்டகரங்க எல்லாம் கடுப்பாயி ஒன்னு அவுட்டுன்னு சொல்லு இல்லாட்டி இல்லன்னு சொல்லு அதென்ன கவனிக்கலன்னு சொல்லுற அப்புறம் எதுக்கு
அம்பய்ரா நிக்குரன்னு சொல்லி தகராறு பண்ணி ஆட்டத்த தொடர்ந்தாங்க!

இதுக்கெல்லாம் மேல ஒருசம்பவம், லெக் அம்பயரா நின்ன ஒருத்தன் ஒருவாட்டி ஆர்வ கோளாறுல கைகிட்ட பால் வரவே தன்னை மறந்து கேட்ச் புடிச்சிட்டான்! பால புடிச்சுட்டு டக்குன்னு நிதானத்துக்கு வந்து ஐயோ நான் இல்லங்குற மாதிரி பால கீழ போட்டுட்டான்!

அப்புறம் என்ன ஒரே தகராறுதான் கடசியா அம்பயருக்கு அவுட் கொடுத்து வெளிய அனுப்பிட்டு ஆட்டத்த தொடர்ந்தாங்க!!!!!

>