''லெக் அம்பயர் புடிச்ச கேட்ச்''

ஊருல இருந்தப்போ வருசாவருசம் கிரிக்கெட் போட்டியெல்லாம் நடத்துவோம் பத்து நாள், பதினைஞ்சு நாள் வரைக்கும் கூட போட்டிகள் நடக்கும்! நெறைய அணிகள் வந்து கலந்துக்கும்!


பட்டுக்கோட்டை,அதிராம்பட்டினம்,முத்துபேட்டை,
அத்திவெட்டி,வடசேரி மன்னார்குடி அணிகள் எல்லாம் பிரபலமானவை! எங்க மதுக்கூர் அணியும் தான்!
அப்போ நாங்க விளையாடினது ''கிரிக்கெட் பால்'' ல்லதான்.
இப்போ எல்லாம் டென்னிஸ் பந்துல விளையாடுறாங்க
''டென்னிஸ் பால் கிரிக்கெட்'' இப்போ பெரிய அளவில
போட்டி எல்லாம் நடக்குது!


இது தான் எங்க டீம் ஒரு போட்டில ஜெயிச்சப்போ எடுத்தது இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;))

அம்பயரிங்!!!

நாங்க போட்டி நடத்தும்போது நாங்களேதான் அம்பயரா இருப்போம்! சிலருக்கு அம்பயரா இருக்க புடிக்கும் சிலருக்கு புடிக்காது! இந்த அம்பயரிங்க்லதான் பெரிய காமெடியெல்லாம் நடக்கும்! சில அணி காரங்க களத்துல்ல இறங்கும்போதே அம்பயர பார்த்து ஒரு மெரட்டு மெரட்டு ட்டிட்டுதான் உள்ள இறங்குவாங்க ஹலோ அம்பயரே ஒழுங்கா அப்பயரிங் பண்ணனும் சரியா? அப்படின்னு!!!

சிலர் அம்பயரா நிக்கும்போது கவனமில்லாம சும்மா ஒப்புக்கு நிப்பாங்க ஒருவாட்டி ஒருத்தன் அம்பயரா நிக்கும்போது ரன் அவுட் க்கு அப்பீல் பண்ணுறாங்க! உடனே அவன் சாரி கவனிக்கல அப்படின்னு சொல்ல
ஆட்டகரங்க எல்லாம் கடுப்பாயி ஒன்னு அவுட்டுன்னு சொல்லு இல்லாட்டி இல்லன்னு சொல்லு அதென்ன கவனிக்கலன்னு சொல்லுற அப்புறம் எதுக்கு
அம்பய்ரா நிக்குரன்னு சொல்லி தகராறு பண்ணி ஆட்டத்த தொடர்ந்தாங்க!

இதுக்கெல்லாம் மேல ஒருசம்பவம், லெக் அம்பயரா நின்ன ஒருத்தன் ஒருவாட்டி ஆர்வ கோளாறுல கைகிட்ட பால் வரவே தன்னை மறந்து கேட்ச் புடிச்சிட்டான்! பால புடிச்சுட்டு டக்குன்னு நிதானத்துக்கு வந்து ஐயோ நான் இல்லங்குற மாதிரி பால கீழ போட்டுட்டான்!

அப்புறம் என்ன ஒரே தகராறுதான் கடசியா அம்பயருக்கு அவுட் கொடுத்து வெளிய அனுப்பிட்டு ஆட்டத்த தொடர்ந்தாங்க!!!!!

>

20 comments:

S.A. நவாஸுதீன் said...

நானும் மதுக்கூர் டோர்னமென்ட்ல ஆடி இருக்கேன் அண்ணா.

இதுக்கெல்லாம் மேல ஒருசம்பவம், லெக் அம்பயரா நின்ன ஒருத்தன் ஒருவாட்டி ஆர்வ கோளாறுல கைகிட்ட பால் வரவே தன்னை மறந்து கேட்ச் புடிச்சிட்டான்! பால புடிச்சுட்டு டக்குன்னு நிதானத்துக்கு வந்து ஐயோ நான் இல்லங்குற மாதிரி பால கீழ போட்டுட்டான்!

ஹா ஹா ஹா. இந்த மாதிரி நிறைய பார்க்கலாம் அந்த சமயங்களில்

யூர்கன் க்ருகியர்..... said...

a very good laugh!

remembering my area tournaments too :)

அபுஅஃப்ஸர் said...

நல்லா சொன்னீங்கண்ணா

அதயெல்லாம் நினைச்சா இப்போக்கூட சிரிப்பு வரும் ஹா ஹா ஹா

அது ஒரு காலம்...

பகிர்ந்தமைக்கு நன்றி

Rajeswari said...

நல்ல ஞாபகச்சிதறல்கள்

நட்புடன் ஜமால் said...

அண்ணா சூப்பர் கொ.வ.

S.A. நவாஸுதீன் said...

எவ்வளவோ முயற்சி பண்ணியும் போட்டோவில் உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

S.A. நவாஸுதீன் said...

Clue Please

யட்சன்... said...

அது ஒரு அழகிய நிலாக்காலம்...னு சொல்லுங்க..

லெக் அம்பயர எல்லாம் டீம் போட்டாவுல நிறுத்த மாட்டாங்கல்ல...

அந்த தைரியத்துலதான் கண்டுபிடிக்க சொல்றீங்களாக்கும்....

ஹி..ஹி...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு தொடருங்கள்...

அந்த நாள் ஞாபகங்களை...

அஸ்வினி said...

நல்லா இருக்கு தொடருங்கள்...

அ.மு.செய்யது said...

நானும் நிறைய கிரிக்கெட் டோர்ணமென்டெல்லாம் ஆடிருக்கேன் ஜீவன்.

பழைய ஞாபகமெல்லாம் வந்துடுச்சு..மேச்சினாலே அவ்ளோ இண்ட்ரஸ்ட்.

அதெல்லாம் அந்தக் காலம்...இப்ப வீட்டுக்குள்ளயே கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சிட்டோம்.

லவ்டேல் மேடி said...

ஹே .... தில் மாங்கே மோர்........!!!!!

சூரியன் said...

அண்ணே உரன் அவுட் மேட்டர் , ஹி ஹி நானும் அந்த மாதிரி அம்பயர்ல ஒருத்தன்,ஆனா உங்க ஊர்ல இல்ல எங்க ஊர்ல.

RAMYA said...

ஜீவன் உங்களுக்கு ரொம்ப ஞாபக சக்தி
ம்ம் நல்லா விளையாடி இருக்கீங்க.

இவை எல்லாம் நெஞ்சிலே நிறுத்தி
வைத்திருக்கும் பசுமையான
நினைவுகள் இல்லையா?

அருமை, இன்னும் என்ன என்ன திறமைகள் உங்களுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறது ஒவ்வொன்றாய் சொல்லுங்கள்.

நாங்களும் உங்கள் இனிமையான நினைவுகளை அசைபோடுகிறோம்!

அந்த அம்பயர் ரொம்ப பாவம் ஜீவன்
செமையா மாட்டிக்குவாறு போல :))

பிரியமுடன் பிரபு said...

அப்புறம் என்ன ஒரே தகராறுதான் கடசியா அம்பயருக்கு அவுட் கொடுத்து வெளிய அனுப்பிட்டு ஆட்டத்த தொடர்ந்தாங்க!!!!!
///

ஹ ஹா

வால்பையன் said...

//இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;)) //

இடதுபக்கம் முதாலவதாக் அமர்ந்திருப்பது நீங்க தானே!

அமுதா said...

/*இது தான் எங்க டீம் ஒரு போட்டில ஜெயிச்சப்போ எடுத்தது இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;))
*/
இவ்ளோ நம்பிக்கையா சொல்றீங்கனா.... நீங்க இதுல இல்லையா?

/*அப்புறம் என்ன ஒரே தகராறுதான் கடசியா அம்பயருக்கு அவுட் கொடுத்து வெளிய அனுப்பிட்டு ஆட்டத்த தொடர்ந்தாங்க!!!!!*/
:-)

செந்தழல் ரவி said...

கலக்கல்.........!!!!!!


அப்புறம்....

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருதுக்கு வாழ்த்துக்கள்...!!!

நோ வெயிட்டிங். நீங்க ஆறுபேரை செலக்ட் செஞ்சு விருது கொடுத்தாகனும்....

Anonymous said...

sir

//இது தான் எங்க டீம் ஒரு போட்டில ஜெயிச்சப்போ எடுத்தது இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;)) //

இருந்தால் தானே கண்டுபிடிக்க சரிதானே....

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

sir

//இது தான் எங்க டீம் ஒரு போட்டில ஜெயிச்சப்போ எடுத்தது இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;)) //

இருந்தால் தானே கண்டுபிடிக்க சரிதானே....

எனக்கு தெரியும் எனக்கு தெரியும்