குழந்தை தேசம்

தாய், தாய்மை, தாய்நாடு இவை எல்லாமே நம் இயல்புக்கு மேலானதாக, வணக்கத்துக்குறியதாக,ஆராதிக்கிற ஒன்றாகவே அறிமுகப்படுத்தப் பட்டு, ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி பட்ட ஒரு சிந்தனையை தலைகீழாக திருப்பினால் என்ன ஆகும் ...?

என் தாய்நாடு, என் குழந்தையாக இருந்தால்...!

நம்
நாட்டை தாயாக நினைக்கும்போது என்ன தோன்றுகிறது..? தாயை காக்கவேண்டும்,போற்றவேண்டும் ,வணங்க வேண்டும் இப்படித்தான் தோன்றுகிறது அப்படித்தான் அறிவுறுத்தவும் படுகிறது.

அதே சமயம்..!

நம் தேசத்தை நம் குழந்தையாய் நினைக்கும்போது என்ன தோன்றும் ? குழந்தையை ஆரோக்கியமாய் வளர்க்க வேண்டும்,நல்ல கல்வி கொடுக்கவேண்டும், கண்ணியம், தைரியம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதோடு குழந்தையின் மேல் முழு அக்கறையும் பொறுப்பும் சேர்ந்து கொள்கிறது.

ஒரு தேசத்தை தாயாய் போற்றுவதைவிட குழந்தையாய் நினைத்தால் அதிக நன்மை கிடைக்கும் என தோன்றுகிறது.

நம் தேசம் நம் குழந்தை என்ற எண்ணம் ஆணித்தரமாக உருவாகிவிட்டால் நாம் இறக்கும் தருவாயில் கூட நமக்கு பிறகும் இந்த தேசம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எதாவது செய்துவிட்டு செல்ல எண்ணம் வரும்.

ஆரம்ப பள்ளிகளில் தேசத்தை தாயாக சொல்லிகொடுக்கலாம் . பள்ளி இறுதி வகுப்பு மற்றும் கல்லூரிகளில் தேசத்தை நம் குழந்தையாக போதிக்க பட்டால்
நன்றாக இருக்கும் என தோன்றுகிறது .

நான் நம் தேசத்தை என் குழந்தை போல எண்ண துவங்கிவிட்டேன்.!

>