குழந்தை தேசம்

தாய், தாய்மை, தாய்நாடு இவை எல்லாமே நம் இயல்புக்கு மேலானதாக, வணக்கத்துக்குறியதாக,ஆராதிக்கிற ஒன்றாகவே அறிமுகப்படுத்தப் பட்டு, ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி பட்ட ஒரு சிந்தனையை தலைகீழாக திருப்பினால் என்ன ஆகும் ...?

என் தாய்நாடு, என் குழந்தையாக இருந்தால்...!

நம்
நாட்டை தாயாக நினைக்கும்போது என்ன தோன்றுகிறது..? தாயை காக்கவேண்டும்,போற்றவேண்டும் ,வணங்க வேண்டும் இப்படித்தான் தோன்றுகிறது அப்படித்தான் அறிவுறுத்தவும் படுகிறது.

அதே சமயம்..!

நம் தேசத்தை நம் குழந்தையாய் நினைக்கும்போது என்ன தோன்றும் ? குழந்தையை ஆரோக்கியமாய் வளர்க்க வேண்டும்,நல்ல கல்வி கொடுக்கவேண்டும், கண்ணியம், தைரியம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதோடு குழந்தையின் மேல் முழு அக்கறையும் பொறுப்பும் சேர்ந்து கொள்கிறது.

ஒரு தேசத்தை தாயாய் போற்றுவதைவிட குழந்தையாய் நினைத்தால் அதிக நன்மை கிடைக்கும் என தோன்றுகிறது.

நம் தேசம் நம் குழந்தை என்ற எண்ணம் ஆணித்தரமாக உருவாகிவிட்டால் நாம் இறக்கும் தருவாயில் கூட நமக்கு பிறகும் இந்த தேசம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எதாவது செய்துவிட்டு செல்ல எண்ணம் வரும்.

ஆரம்ப பள்ளிகளில் தேசத்தை தாயாக சொல்லிகொடுக்கலாம் . பள்ளி இறுதி வகுப்பு மற்றும் கல்லூரிகளில் தேசத்தை நம் குழந்தையாக போதிக்க பட்டால்
நன்றாக இருக்கும் என தோன்றுகிறது .

நான் நம் தேசத்தை என் குழந்தை போல எண்ண துவங்கிவிட்டேன்.!

>

11 comments:

நட்புடன் ஜமால் said...

குழந்தைகளை அதிகம் நேசிக்க துவங்கிட்டீங்க அதான் எல்லாத்தையும் குழந்தையோடு ஒப்பிட தோனுது

ஆரோக்கியம் :)

Anonymous said...

புதுவிதமா சிந்தனை..தாய் நாட்டை குழந்தையாய் சிந்தித்து..இப்படி எல்லாரும் சிந்திக்க ஆரம்பித்தால் பொருப்பாக கடமை தவறாமல் காப்பாற்ற தவறமாட்டோம்...ஆனாலும் இந்த தேசபற்று என்பது என்னதான் சுய நலவாதிகளாய் வாழ்ந்தாலும் இது நம் எல்லாருடைய ரத்ததிலும் ஊறி ஒன்றிப்போய் விட்ட ஒன்று என தான் எனக்கு தோன்றுகிறது.. நானும் நேசிக்க ஆரம்பித்து விட்டு இன்று முதல் குழந்தையாய் என் தேசத்தை....

மங்கை said...

வித்தியாசமான சிந்தனை...

எதுவா இருந்தாலும் பொறுப்பும், நல்ல எண்ணங்களும் இருந்தா நாட்டை காப்பாற்றும் அக்கறை தானா வரும், வரனும்...

பொன் மாலை பொழுது said...

தேவையான , மாறுபட்ட, நல்ல சிந்தனை.

டுபாக்கூர் பதிவர் said...

கணப் பொழுதில் நிகழும் சிந்தனை மாற்றங்கள் பெரிய புரட்சிகளுக்கான விதைகளாய் இருந்திருக்கின்றது....

அந்த வகையில் உங்களின் இந்த சிந்தனைகள் விருட்சமாய் விரிந்து நல்ல பலனை தந்தால் மகிழ்ச்சியே!

ஹுஸைனம்மா said...

//என் தாய்நாடு, என் குழந்தையாக இருந்தால்...//

நிச்சயமா நல்ல எண்ணம்தான்!!

ஹேமா said...

சரியாப்போச்சு ஜீவன்.

நீங்க நல்ல அப்பாவா இருக்கப்போய் குழந்தைகளின் ஆரோக்யத்தை நினைக்கிறீங்க.ஆனா குழந்தையோட குழந்தையா இருக்கிற நிறைய அப்பாக்கள் இருக்காங்க.அவங்க என்ன செய்வாங்க.கிள்ளி அடிச்சு விளையாடுவாங்க.அதுதான் இப்போ கூடுதலா நடக்குது.

மண் மதிப்போடும் மரியாதையோடும் தாய்மண்ணாகவே இருக்கட்டும்.
என்றாலும் யாரும் நின்னைத்திருக்காத சிந்தனை !

பொன்னை உருக்கிக்கொண்டே மூளையையும் உருக்குறீங்களோ !

தோழி said...

மிகவும் உணர்ச்சிவயப் பட்ட ஒரு தந்தையின் மனநிலையில் இருந்து எழுதியிருப்பீர்கள் போலிருக்கிறது..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.

ம.தி.சுதா said...

பதிவு நல்லாயிருக்கு... குழந்தைகள் தான் உலகின் சந்தோசம்... என் தள வருகைக்கு நன்றிகள்..

சிவராம்குமார் said...

வித்தியாசமான ஆனால் அதே சமயம் நல்ல பதிவு!