காதலிச்சுட்டு..... ங்கொய்யால...ஓடவா செய்யறே! (வீடியோ)

இந்த வீடியோவ பாருங்க என்ன தோணுதோ பின்னூட்டத்துல சொல்லுங்க ..!
.....
>

மழையில் சில படங்கள்

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன் சிறிய அளவில் தோட்டம் அமைத்து பூச்செடிகள் வைத்து இருந்தார். சில பூக்களை செல்போனில் படம் எடுத்துகொண்டிருந்தேன் அப்போது மழை பிடித்து கொண்டது..! மழைக்கு முன்னும் பின்னும் எடுத்த சில படங்கள் ...!
...........................................

>

டி.ராஜேந்தரின் துள்ளல் இசை பாடல்கள்


டி.ராஜேந்தர் ஒரு நிஜமான சகலகலா வல்லவன். அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர் பாடல் எழுதுவதில் கவியரசர் கண்ணதாசனிடமே பாராட்டு பெற்றவர் ..! இசை அமைப்பை பொருத்தவரை ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கு நிகராக பேசபட்டவர்..! துள்ளும் இசையுடன் அமைந்த இந்த பாடல்களின் வரிகளையும் கேட்டு ரசியுங்கள்..!

பாடல் மேல் வைத்து கிளிக் செய்தால் அந்த பாட்டு வரும்


மயில் வந்து மாட்டிகிட்டா பாதையிலே


தேகம் சுடுகுது வாடி மோகம் பிறக்குது வாடி


தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ளவிரதத்தில் நானும்


ராக்கால வேளையிலே ராசா நீ வாடையிலே


இந்த மல்லிகை மனச... என் மாமன் புடிக்க

ராக்கோழி கூவையிலே என் ராஜாத்தி நீயும்
இந்த பாட்டு லிங்க் கிடைக்கல

வைச்சுருக்கேன் நான் வைச்சுருக்கேன் (பிற் சேர்க்கை)ஒரு பவுர்ணமி இரவில் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் சவுக்கு தோப்புகளை தாண்டி கடலுக்கு மிக அருகில் காரை நிறுத்தி இந்த பாடல்களை முழு சத்தத்தில் கேட்க வேண்டும். போகும்போது கூடவே சரக்கை......! பாண்டா இல்லாட்டி கோக் ல மிக்ஸ் பண்ணி கொண்டு போய்டணும் கொஞ்ச கொஞ்சமா சரக்கையும் அடிச் சுகிட்டு , ஒருப்பக்கம் முழு சத்தத்தில் இந்த பாடல்கள், மறுபக்கம் பவுர்ணமி அலை ஓசையோடு ரம்மியமா கழிக்க வேண்டும் அந்த பொழுதை..!

>

அனுபவிக்க இனி ஒன்றுமில்லை கடமைதான் பாக்கி (35+)

பத்து பதினைந்து வயதில் வாழ்க்கை குறித்த பயம் இல்லை ஆனால் ஆசைகள் மிக அதிகமாகவே இருந்தது. . அதன் பிறகு வாலிப வயதிலும் அப்படியே ..! திருமண வயதில் எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்தது.

திருமணம் முடிந்தும் குழந்தை, சம்பாத்தியம், குடும்பத்தின் அடிப்படை தேவைகள் என இலக்குகள் இருந்தன...! சம்பாத்தியம் ,திருமணம் ,இல்லறம் ,குழந்தைகள் எல்லாவற்றையும் அனுபவித்தாயிற்று.

குழந்தைகளின் மழலைத்தனம் மாறி வளர துவங்க... கடந்த காலங்களில் வாழ்க்கையில் நாம் அனுபவிக்காமல் எதையும் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் இருந்தது . ஆனால் முப்பத்தைந்து வயதில் அநேகமாக எல்லா முக்கியமான விசயங்களையும் அனுபவித்து விட்டதாகவே தோன்றுகிறது ..!

சரி, இனி அடுத்த பதினைந்து வருடங்கள் எப்படி இருக்கும் ..? இந்த காலத்தில் நாம் அனுபவிக்க வேண்டியவை,செய்யவேண்டிய கடமைகள் என்ன ..? அனுபவிக்க வேண்டிய விசயங்களை தேடினால் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை..!

ஆனால் ..! கடமைகள் நிறையவே காத்திருக்கிறது..! குழந்தைகளின் கல்வி , அவர்கள் ஆரோக்கியம், நகரத்தில் நாகரிகம் என்ற பெயரில் நிரம்பியிருக்கும் கலாசார குப்பைகளில் இருந்து அவர்களை காக்க வேண்டும் . கிராமங்களைவிட புவியீர்ப்பு விசை குறைவான நகரத்தில் இருந்துகொண்டு கிராமங்களின் ஈர்ப்பினை புரியவைக்க வேண்டும். நல்ல தமிழை கொடுக்க வேண்டும் .இப்படி பட்டியல் நீளுகிறது...!

ஒன்று மட்டும் புரிகிறது அடுத்த சில வருடங்களுக்கு என்னை சற்றும் ஓய்வெடுக்க விடாமல் கடமை துரத்தி கொண்டே இருக்க போகிறது அது மட்டும் நிச்சயம்.

சில சமயம் தோன்றும் அயர்ச்சியில் இப்படி கூட நினைப்பதுண்டு சட்டென ஒரு பத்து வருடம் போய்விடாதா என்று ...! எனக்காக வேண்டுமானால் பதவி ,புகழ் என எதாவது இலக்கை வைத்துகொண்டு செயல் படலாம், ஆனால்..! அடிப்படை கடமைகளை நிறைவேற்றாமல் எந்த வெற்றியும் ருசிக்கபோவதில்லை.

சரி இனிமேல் அவ்ளோதானா..! என்றால் அதைத் தாண்டி குழந்தைகள் திருமணம், பேர குழந்தைகள் என உறவின் பாற்பட்ட அம்சங்கள் எல்லாம் கடமைகளாய் காத்திருக்கிறது.

குழந்தைகள் திருமணம் என வரும்போது அதை அனுபவிக்க வேண்டிய விஷயம் என்பதை காட்டிலும், நல்லபடியா நடத்தி ஆகணுமே என்ற ஒரு கேப்டன் புத்திதான் அப்போதும் தோன்றுகிறது. பேர குழந்தைகள்....? அதற்க்கு வெகு தூரம் இருக்கிறது நாம் அதுவரை இருப்போமா என்ற கேள்வியும் வருகிறது.

காலை நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க வாக்கிங் போகும் நாற்பதுகளை கடந்த தொப்பை ஆசாமிகளை பார்த்து சிரித்திருக்கிறேன்....இப்போது புரிகிறது அந்த தொப்பைகளின் பின்னால் இருப்பது குடும்ப பாரங்கள்....ம்ம்ம்ம்ம்


>

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

பங்குச்சந்தை வணிகத்தில் எங்கள் பாதையை மாற்றிய எங்கள் குரு ,எங்கள் ஆசான், திரு எம்.சரவணக்குமார் அவர்கள் 04-07-2010 இல் பிறந்த நாள் காண்கிறார் அவரும் அவர் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லா வகையான மகிழ்ச்சியினையும் பெற்று நோய் நொடி எதுவுமின்றி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் ...!
இல்லறம் இனித்து உவந்த நேரம்..!
இதயம் உவக்க ஈன்றனள் நின் தாய் ..!
ஏற்ற இறக்கம் இல்லா நிலையான நின் குணம்,
ஊருக்கு நீர் செய்யும் நற்பணிகள்,
நின்னை உயர்ந்தோன்
எனக்காட்டும் உவமைகளாம் ..!

பங்கு சந்தையில் நின் தமிழ்ப்பணி ..!
மேலும் பலர் பணியாற்றி செழிக்க செய்தீர் ..!
நட்பு கொண்டோர்க்கும் நல்வழியே காட்டி,
ஈன்றோர்க்கும், சான்றோர்க்கும்
இனியவராய் வாழ்கின்றீர் ..!

இனிய குணம் கொண்டவரே.!
இனிய பிறந்தநாள் இதுபோல நூறு காண
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..!

-கவிதைக்கு நன்றி ''எழுத்தோசை'' தமிழரசி

>