என்னை திருடியவர்கள்..... தொடர் பதிவு

இதற்க்கு முன்னர் ''என்னை கவர்ந்தவர்கள்'' பதிவிற்கு அழைத்த மதிப்பிற்குரிய திரு ,ராகவன் அண்ன் அவர்கள் இப்போது என்னை திருடியவர் பதிவிற்கு அழைத்து உள்ளார்.அவருக்கு என் நன்றிகள்.....

என்னை கவர்ந்தவர்கள் பதிவில் மாவீரன் நேதாஜி பற்றி எழுதி இருந்தேன் என்னை திருடியவர் என்றாலும் நேதாஜி பற்றித்தான் எழுத தோன்றுகிறது.ஆனால் ? இப்போது என்னை திருடியவராக நான் எழுத இருப்பது செஞ்சோற்று கடனுக்காக தன் குடும்பத்தினரையே எதிர்த்து போரிட்ட கொடை வள்ளல் கர்ணன் பற்றி!
ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு வாசம்

நாம் சிலரை பார்த்து இருப்போம் அதாவது,யாரவது எதாவது செய்து பெரியபேர் வாங்கிவிட்டால் ! இதென்ன பிரமாதம் நானாக இருந்தால் இதைவிடசிறப்பாக செய்து இருப்பேன் என சொல்லுவார்கள் . ஏன் நமக்கு கூட அப்படி சில சமயம் தோன்றி இருக்கும்.

ஆனால்! சிலருக்கு மட்டுமே சில விஷயங்கள் தோன்றும் எல்லோருக்கும் தோன்றி விடாது! கர்ணன் வாழ்வில் ஒரு சம்பவம்!


சிறந்த வள்ளல் என கர்ணனை மட்டும் சொல்லுகிறார்களே நானும்தான் அள்ளி, அள்ளி கொடுக்கிறேன் என்னை யாரும் வள்ளல் என சொல்லவில்லையே என்று அர்ஜுனனுக்கு பொறாமை!


உடனே அர்ஜுனன் கிருஷ்ணபகவானிடம் போய் நானும் வள்ளல்தான் ஆனால் எல்லோரும் கர்ணனையே வள்ளல் என்று போற்றுகிறார்களே?என கேட்கிறான்? அதற்க்கு NT .ராமாராவ் சொல்கிறார் ஒருநாளும் நீ கர்ணனை போல ஆக முடியாது என்று!


அதற்க்கு அர்ஜுனன் ஒத்துக்கொள்ள வில்லை. இல்லை என்னாலும் கர்ணனைவிட அதிகமாக தானம் கொடுக்க முடியும் என வாதிடுகிறான்.

உடனே கிருஷ்ண பகவான் தங்கத்திலான இரண்டு மலைகளை உருவாக்கி இன்று மாலை மாலை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் தானம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் நீதான் பெரிய வள்ளல் என சொல்லுகிறார்.

அர்ஜுனனும் ஒப்பு கொள்கிறான்! தானம் செய்ய துவங்குகிறான் வருவோர் போவோர்கெல்லாம் வண்டி ,வண்டியாக தங்கத்தை வெட்டி வெட்டி கொடுக்கின்றான்.ஆனால் தங்க மலைகள் குறைந்த பாடில்லை. சூரிய அஸ்தமன நேரம் நெருங்குகிறது அர்ஜுனனால் முடியவில்லை. அப்போது அங்கே NT. ராமாராவ் வருகிறார்,என்ன அர்ஜுனா முடியவில்லையா என கேட்க அதற்கு அர்ஜுனன் முடியவில்லை என சொல்கிறான்.

உடனே கிருஷ்ணர் அங்கே கர்ணனை அழைக்கிறார் அப்போது சூரிய அஸ்தமனத்திற்கு சில வினாடிகளே உள்ளன.

கிருஷ்ணர்!! கர்ணனை பார்த்து!! கர்ணா! இன்றைய சூரிய அஸ்தமணத்திற்குள் இந்த இரண்டு தங்க மலைகளையும் தானம் செய் என சொல்லுகிறார்! அங்கே அப்போது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல கர்ணன் வாரார்!!


அஸ்தமித்து கொண்டிருக்கும் சூரியனை ஒரு பார்வை பார்க்கிறார் !
அப்போது சாலையில் சென்று கொண்டு இருந்த இருவரை அழைத்து
ஆளுக்கு ஒரு மலையை எடுத்து கொள்ள சொல்லி இரண்டு மலையையும் தானம் செய்து விட்டு ,
வர்ர்ட்டா! ன்னு சொல்லி போய் விடுகிறார்.

அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனை பார்த்து பார் இது உனக்கு தோன்றாமல் போய்விட்டதே அதான் கர்ணன் என்கிறார்.அர்ஜுனனும் உணர்ந்து கொள்கிறான்.


கடவுளையே தன்னிடம் கையேந்த வைத்த கர்ணன் பற்றி நெறைய சொல்லலாம் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த விஷயங்களாகத்தான் இருக்கும்..***********************************************************************************


>