''தங்க நகை வாங்க போறீங்களா?''

சமீபத்தில் மதிப்பிற்குரிய இராகவன் நைஜீரியா அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார்கள் அதில்,அவர் கத்தாரில்நகை வாங்கியதாகவும் அந்த நகைக்கு கூலியாக ஏழு சதவீத தொகை மட்டும் மேற்கொண்டு கொடுத்ததாகவும்,ஆனால் நம்நாட்டில் நகை வாங்கும்போது கூலி,சேதாரம் எல்லாம் சேர்த்து மொத்தம் பதினாறு
சதவீதம்போடப்பட்டதாக சொல்லி இருந்தார். அவரின் அந்த பதிவிற்கும்அந்த பதிவில் இடப்பட்டு இருந்த பின்னுட்டங்களுக்கும் நகைதொழில் செய்பவன் என்ற முறையில்விளக்கங்கள் அளிக்க இந்த பதிவு.

''மேலும் நகை தொழில் பற்றியும் நகை வாங்கும்
போது ஏமாறாமல் இருக்கவும் சில தகவல்கள்''


சில வகை நகைகளுக்கு உற்பத்தி செலவு மிக குறைவு அதாவது இயந்திரத்தில் உருவாக்க படுபவை.சில வகை டாலர்கள்,சிலவகை மோதிரங்கள்,சிலவகை செயின்கள். இதுபோன்ற நகைகளை குறைந்த கூலியில் வாங்க சாத்தியம்
உண்டு. 


91.6 kdm நகையாக இருந்து, எல்லாவகை
நகைகளுக்கும் 7 சதவீதம் மட்டும் கூலி
கொடுத்து வாங்கும் நிலை இருந்தால்
கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்
எல்லாவகை நகைகளும் அந்த கூலியில்
கிடைக்கிறதா என தெரியவில்லை.

ஏனெனில் இங்கே நகை செய்பவருக்கே 4-8
சதவீதம் நகையின் தன்மையை பொறுத்து
கூலியாக கிடைக்கிறது.

திரு,இராகவன் அவர்களின் பதிவு
91.6 என்றால் என்ன ?
kdm என்றால் என்ன ?
சேதாரம் எப்படி ஏற்படுகிறது ?
ஒருநகை எப்படி உருவாக்க படுகிறது?
நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய
விஷயங்கள் என்ன ?

இவற்றையெல்லாம் பற்றி சில நாட்களுக்கு
முன்னர் புழுதிக்காடு சிம்பாவின் ஒரு பதிவில்
சொல்லி இருந்தேன் அந்த பதிவு

சேதாரம் என்பதைப்பற்றி ஒரு முழு விளக்கம்
பரம்பரையாக நகை தொழில் செய்யும் குடும்பம்  எங்களுடையது எங்கள் முன்னோர்கள் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தனர் ஒரு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அனைவருக்கும் நகை செய்வதுதான் தொழில்.பின்னர் அந்த கிராமத்திலிருந்து குடி பெயர்ந்து பக்கத்து நகரத்துக்கு வந்து விட்டனர். நான் சிறுவனாக இருந்த போது அந்த கிராமத்தில் கண்ட ஒரு காட்சி! அங்கே முன்னோர் வசித்த வீடுகள் எல்லாம் பாழடைந்து சிதைந்து இடிந்த நிலையில் காணப்பட்டது.எல்லாம் மண் வீடுகள் . அங்கே சிலர் கும்பலாக அமர்ந்து
அந்த வீடுகளில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து அந்த மண்ணை அலசி கழுவி தங்கம் எடுத்து கொண்டு இருந்தனர். அதுவும் எப்படி ? பக்கத்தில் ஒரு குளம் அந்த குளத்தில் இருந்து கால்வாய் வெட்டி தண்ணீரை கொண்டுவந்து
மண் அலசி கொண்டு இருந்தனர். மாதக்கணக்கில் தங்கி இவ்வாறு
செய்கிறார்களாம்.

நகை தொழில் செய்த போது ஏற்பட்ட சேதாரத்தை தான் இவர்கள் அலசி எடுத்து கொண்டு இருந்தனர். அதே சமயம் அந்த வீட்டு உரிமையாளருக்கு சிறிய அளவு தொகை கொடுத்து விடுவார்கள். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் நகை தொழிலில் சேதாரம் ஆவதை தவிர்க்கவே முடியாது என்பதை சொல்லத்தான்.

அதே சமயம் திரு,இராகவன் அவர்கள் தன் பின்னுட்டத்தில்
//பொற்கொல்லர்கள் தங்கத்தை கழுவிய நீரை கூட
சாக்கடையில் கொட்டமாட்டார்கள் ,அதை காய்ச்சி
அதில் இருந்தும் தங்கத்தை எடுத்து விடுவார்கள்
என கேள்விப்பட்டு இருக்கிறேன் விசாரித்து
சொல்லுங்கள்//

என்று கூறி இருந்தார் அதாவது அவர் கூறி இருப்பதன்
கருத்து என்ன?

நகை தொழில் செய்பவர்கள் ஏற்படும் சேதாரம் எல்லாத்தையும் எடுத்து விடுகிறார்கள் அப்படி சேதாரம் என்று தனியாக ஏன் வாங்க வேண்டும்
என்பதுதான்?

முடிந்த வரை இழப்புகளை எடுக்க முடியும் ஆனால் முழுமையாக எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

அதற்க்கு மேலே நான் சொன்ன எங்கள் முன்னோர் கிராமத்தில்
நடந்த செயலே சாட்சி!

சரி! அது அந்த காலம் நவீன தொழில் நுட்பங்கள் ஏதும்
இருந்து இருக்காது அதனால் சேதாரம் ஏற்பட்டு இருக்கும்
இன்றுமா அப்படி என கேட்கலாம்?


ஆமாம்!!! இன்றும் அப்படிதான் இப்போது நகை தொழில் செய்யும் கடைத்தெருவை அந்த கடை வாசலை தினமும் பெருக்கி எடுத்து செல்ல ஒரு கும்பலே இருக்கிறது.

இதை அவர்கள் என் ஏரியா உன் ஏரியா என பிரித்து வைத்து கொள்கிறார்கள்!
மேலும் கோவை பகுதியில் தினமும் ஒரே இடத்தில் சாக்கடையை கழுவி தங்கம் எடுப்பதை இப்போதும் பார்க்கலாம். சேதாரம் ஏற்படவில்லை என்றால்
சாக்கடையில் எப்படி தங்கம் கிடைக்கும்..

நகை தொழிலாளருக்கு சேதாரம் கொடுக்கப்படுகிறதா?
தற்போது பெரும்பாலும் பொற்கொல்லரிடம் நகை  செய்வதை விட நகைகடைகளிலேயே அதிகம்பேர் நகை வாங்குகின்றனர். நகை செய்யும் தொழிலாளருக்கு சேதாரம் ஏதும் கொடுக்க படுவது கிடையாது
தொழிலாளருக்கு கிடைக்கும் அவருக்குண்டான கூலியான நகையின் வகையை பொறுத்து நான்கு முதல் எட்டு சதவீத கூலியில் அவர்
இழப்பு அடக்கம்.

''தொன்று தொட்டு பழகிவிட்ட சேதாரம் என்ற
சொல் நியாயமாக கிடைக்கவேண்டிய நகை
தொழிலாளருக்கு கிடைக்காமல்
நகைகடைகாரர்களுக்கு லாபத்தை
ஈட்டி தருகிறது''

அதேசமயம் நகை கடைகாரர்களுக்கும் சிக்கல் இல்லாமல் இல்லை. ஒரு நகை தொழிலாளியிடம் உருவாகும் நகையானது பல வியாபார நிலைகளை
தாண்டித்தான் நகை கடைக்கு வருகிறது.அப்போது அதன் உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது.

ஒரு விவசாயி ஒரு விளை பொருளை
வயலில் உழுது நீர்பாய்ச்சி உரம்போட்டு
உற்பத்தி செய்கிறார் அந்த பொருளுக்கு
அவருக்கு கிடைக்கும் விலைக்கும்
சந்தையில் விற்கப்படும் விலைக்கும்
எவ்வளவு வித்தியாசம் உள்ளது?

ஒரு சட்டை தைக்க இன்றைக்கு தையல்
காரருக்கு நூறு ரூபாய்வரை கொடுக்கிறோம்
அதேசமயம் சட்டையே நூறு ரூபாய்க்கு
கிடைக்கிறது.

பிளாட்பார கடைகளில் இருநூறு ரூபாய்க்கு
கிடைக்கும் அதே பொருள் பெரிய ஷோரூம்களில்
நானூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாம் பெரிய கடைகளை தேடி போகும்போது
அந்தகடை ''ஏசி'' மற்றும் அவர்களின் விளம்பர
செலவு எல்லாம் மக்கள் மீது சுமத்தப்படுகிறது.


''நகை வாங்கும்போது மக்கள் எப்படி ஏமாற்ற படுகிறார்கள்''நகை தொழில் செய்து கொண்டு நகை
தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலி பற்றி
நான் விமர்சனம் செய்ய சில சமரசங்களை செய்ய
வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த தொழிலில்
யாராவது மோசடி செய்தால் அதை எடுத்து சொல்ல
எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

தொழில் ரகசியம்.

எல்லா தொழிலிலும் ரகசியங்கள் உண்டு அந்த
தொழில் ரகசியம் என்பது மக்களின் வாங்கும் திறனை
அதிகப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்
மக்களை ஏமாற்ற அது பயன்படுத்த பட கூடாது!!


இப்போது சில அல்லது பல இடங்களில்

91.6 என்ற முத்திரை மட்டும் இடப்பட்டு தரம் குறைந்த
நகை விற்பனை செய்ய படுகிறது. இந்த விசயத்தில்
நகை வாங்குபவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
ஒரு நகை வாங்கினால் அதை திரும்ப விற்கும் போது
நீங்கள் வாங்கும்போது அந்த நகைக்கு மேற்கொண்டு
கொடுத்த கூலி ,சேதம் மட்டுமே குறையவேண்டும்.
அதற்குமேல் குறையக்கூடாது. இந்த உத்திரவாதத்தை
அந்த நகைகடையில் பெற்று கொள்ளவேண்டும்.
சென்னை,மதுரை,கோவை போன்ற நகரங்களில்
இருபத்து ஐந்து ரூபாய் செலவில் உங்கள் நகையை
சோதித்து கொள்ளும் வசதி உள்ளது.


91.6 kdm நகைகளை மட்டும் வாங்குங்கள்
ஏமாற்றத்தை தவிருங்கள்!!(மேலும் நகை வாங்குவது பற்றி பின்னுட்டத்தில்
கேளுங்கள் பதில் அளிக்கிறேன் )

...................................................................

>

ஒரு கதை

இந்த கதை சமீபத்துல ஜெயா டிவி ல சொன்னாங்க..........

ஒரு ஊருல ஒரு புருஷன் பொண்டாட்டி, முணு புள்ளைங்கன்னு ஒரு குடும்பம் .

புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிக்கடி சண்டைவரும் பொண்டாட்டிகாரி சொல்லுறா ,... இந்த வீட்டுக்கு நான்தான் அதிக வேலை செய்யுறேன் துணி தொவைக்கிறது,சமைக்கிறது ,புள்ளைங்கள கவனிக்கிரதுன்னு எனக்குதான் வேலை அதிகம்னு .
புருஷன் சொல்லுறான் .... நான்மட்டும் என்ன ? சும்மாவா இருக்கேன் ,இந்த குடும்பத்துக்காகத்தான் மாடா உழைக்கிறேன் வெயில்லயும் மழைல அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்யுறேன் அப்படின்னு ...


சண்டை அதிகரிச்சுகிட்டே போகுது இவங்க சத்தம் தாங்க முடியாம ,அவங்க முன்னாடி கடவுள் தோன்றுகிறார்!
ஏன் இப்படி சண்டை போடுறீங்க என்ன விவரம்ன்னு கேக்குறார் ?
ரெண்டுபேரும் நான்தான் அதிக வேலை செய்கிறேன் !!நான்தான் அதிக வேலை செய்கிறேன் !! அப்படின்னு சொல்லுறாங்க .

உடனே கடவுள் ஒரு யோசனை சொல்லுறார் ,,, அதாவது புருஷனை பொண்டாட்டியாகவும்,பொண்டாட்டியை புருஷனாகவும் மாத்திடுறேன் புருஷன் வேலைய பொண்டாட்டியும் ,பொண்டாட்டி வேலைய புருசனும் பாருங்க யாருக்கு வேலை அதிகம்னு உங்களுக்கே புரியும்னு சொல்லுறார் .


ரெண்டுபேரும் ஒத்துகிறாங்க !! அதுபோல கடவுள் ரெண்டுபேரையும் மாத்திடுறார்

இப்போ புருஷன் காரன் காலைல சீக்கிரம் எழுந்து புள்ளைங்கள ஸ்கூலுக்கு கிளப்பிவிட்டு ,டிபன் பண்ணி ,பாத்திரம் கழுவி , புருஷனை வேலைக்கு அனுப்பி ,வீடுபெருக்கி ,மதியம் சாப்பாடு பண்ணி , புள்ளைங்களுக்கு மதிய சாப்பாடு கொடுத்து , அப்புறம் மாலை ஆனதும் துணி தொவைச்சு ,அப்படி இப்படின்னு பெண்டு நிமிருது !!

கொஞ்சநாள் கழிச்சு புருஷன் ஒத்துகிறான் பொண்டாட்டிக்குதான் வேலை அதிகம்னு !

அவனால சமாளிக்க முடியாம கடவுள் கிட்ட போய் என்னால முடியல மறுபடியும் என்ன ஆம்பிளையா மாத்திடுங்கன்னு !

உடனே கடவுள் இதுக்குதான் அவங்க அவங்க வேலைய அவங்களே செய்யணும்

அடுத்தவங்க வேலையே சாதாரணமா நினைக்க கூடாதுன்னு சொல்லுறார் !!

அவனும் ஒத்துகிறான் ...................

சரி... கதை இதோட முடிஞ்சுதா ?
அதுதான் இல்ல !

சரி என்னை ஆம்புளையா மாத்துங்க ன்னு சொல்லுறான்
அதுக்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா ?
இப்போ நீ கர்ப்பமா இருக்கே இப்போ மாத்த முடியாது !! பிரசவம் முடிஞ்சு வா !!


............................
>