''தமிழ்ப்படம்'' -இது விமர்சனம் அல்ல..!


இன்னியோட உன் ஆயுசு முடியபோகுது..! இன்னிக்கு நைட் நீ செத்துடுவே...!அப்படிங்குற கண்டிசன்ல உள்ள ஒருத்தன கூட்டிவந்து இந்தப்படம் பார்க்க சொன்னா அவன்கூட தன்னை மறந்து குலுங்கி குலுங்கி சிரிப்பான் அப்படி ஒரு காமெடி...!

படத்துல உள்ள சில காமெடிகள சொன்னா சுவாரஸ்யம் குறைஞ்சுடும்னு சொல்லுறாங்க ஆனா ..? எனக்கு அப்படி தோணல என்னதான் படத்துல உள்ள முழு நீள காமெடிகள விவரிச்சு சொன்னாலும் படம் பார்க்கும்போது யாராலையுமே சிரிப்ப அடக்க முடியாது...!

பாட்ஷா பட ரகுவரன் கெட் -அப்ல இருக்கும் தளபதி பட தேவா மம்முட்டி;

ஒரு உறைல ரெண்டு கத்தி இருக்க கூடாது .!

ஹீரோ சிவா ;

ஏன் ஒரு குவாட்டர்ல ரெண்டு கட்டிங் இல்லையா ? அதுபோல தான் ..!

ஒரு படத்த நக்கல் பண்ணி காமெடி வருது சுவாரஸ்யமா ரசிச்சு சிரிச்சு முடிச்சா அந்த காமெடி குள்ள கொசுறா இன்னொரு காமெடி வருது அதான் அதான் கலக்குது...!

அந்நியன் பட ஸ்டைல வில்லன எருமை மாடுகள மிதிக்க விட்டு கொல்ல போறாரு ஹீரோ ..! வில்லன் மேல எருமை கள ஏவி விட்டா நகர மாட்டேங்குது குடைய விரிச்சு காட்டி மிரள விட்டா .! நோ யூஸ் உடனே லேப்டாப்ல அந்நியன் படத்த மாடுகளுக்கு போட்டு காட்டுறாரு அப்போவும் மாடுக அசையல..!

இதெயெல்லாம் பார்த்து வில்லனுக்கு சிரிப்பு வந்துடுது விழுந்து .விழுந்து சிரிக்கிறாரு சிரிச்ச சிரிப்புல நெஞ்ச புடிச்சுகிட்டு கீழ விழுந்து செத்து போறாரு..!

ஹீரோ சிவா ; நீ ஹார்ட் பேசன்ட்னு தெரியும்டா ..! மாடுகள விட்டு கொல்ல நான் என்ன சர்க்கஸ் கம்பெனியா வைச்சு இருக்கேன் ..? உன்ன சிரிக்கவைச்சு கொல்லுரதுதான் என் திட்டமே...!


இதுபோல நெறைய சொல்லிகிட்டே போகலாம்..!

படம் பார்க்கும்போது பக்கத்துல இருந்த என் ஆறு வயசு பொண்ணு மட்டும் எதுக்குப்பா எல்லாரும் சிரிக்கிறாங்கன்னு அடிக்கடி கேட்டுகிட்டே இருந்துச்சு..!

குறைகள் ;- குறைகளை கண்டுபிடிச்சு சொல்ல நான் விமர்சகன் அல்ல நான் ரசிகன். நான் ரசித்ததை மட்டும் சொல்லுறேன். ஆமா ..! இவ்ளோதூரம் போய் படம் பார்த்துட்டு குறைகள கண்டு புடிச்சு நம்ம சந்தோசத்த ஏன் கெடுத்துக்கணும் ..?போனமா சிரிச்சமான்னு இல்லாம ..?

தமிழ் படம் பார்ட் 1 ,பார்ட் 2 ன்னு ஆறுமாசத்துக்கு ஒருதடவ இந்த மாதிரி படம் வந்தா கூட அலுக்காம பார்க்கலாம்னு தோணுது ..!


குறிப்பு ;- கூட்டம் குறையட்டும் கொஞ்ச நாள் கழிச்சு படம் பார்த்துக்கலாம்னு யாரும் இருக்காதீங்க ...! தேட்டர்ல அரங்கம் அதிரும் அப்ளாஸ் கூட படம்பார்க்கணும் அதுதான் நிஜமான சுவாரஸ்யம்...!

திருட்டு dvd பார்க்க நினைக்கிறவங்களுக்கு ;- அது வேஸ்ட்டுங்க .! இதமாதிரி படம் எப்போவாச்சும் தான் வரும் அத தியேட்டர்ல போய் பார்க்கும் நல்ல அனுபவத்த மிஸ் பண்ணாதீங்க...!

>

மரங்களை ரசிப்போம் (அன்றும் -இன்றும்)

சில மாதங்கள் முன்னர் மரங்களை ரசிப்போம் வாருங்கள் என ஒரு பதிவு எழுதி இருந்தேன். அந்த பதிவில் எங்கள் ஊரில் உள்ள சில மரங்களின் படங்களை போட்டு இருந்தேன்.அந்த பதிவில் உள்ள அதே மரங்களை இரண்டு மாதங்கள் முன்னர் ஊருக்கு சென்றபோது படம் எடுத்தேன். இப்போது இரண்டு நாள்கள் முன்னர் ஊருக்கு சென்ற போது மீண்டும் அந்த மரங்களை படமெடுத்தேன் மாற்றத்தை பாருங்கள் ..!..!

ஆற்றங்கரை தேக்கு மரம்

1


2


3


வயல் காட்டு பனைமரம்

1

2

3


ஒதிய மரம்

1

2

3

நாணல்


இது இப்போ எடுத்தது அடுத்த தடவ ஊருக்கு போகும்போது இது எப்படி இருக்கும்னு ???? பார்க்கணும்...!


>

நானும் போயிட்டு வந்துட்டேன்...!

வேற எங்க..? புத்தக கண்காட்சிக்குதான் இன்னிக்கு சனி கிழமை நாளைக்கு கடைசிநாள் அதனால நல்ல கூட்டம் ..!

ஒருபதிவ போட்டுட்டு படிக்கலாம்னு நெனச்சேன்..!ராஜீவ் கொலை வழக்கு

படிக்க ஆரம்பிச்சு ஒரே மூச்சுல முடிச்சுட்டேன்

படிச்சு முடிச்சதும் மனசுல நிக்குறது

அந்த நூறு ரூவா சலவை நோட்டும்


புத்தகத்தில் இடம் பெற்ற கீழ் கண்ட வரிகளும்

ஷாப்பிங் போன சமயம் தி நகரில் சுபாவின் கண்ணில் ஒரு சர்தார்ஜி பட்டார் .அதுவரை சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று முகம் மாறினார் .அவரது உடம்பு உதற தொடங்கியது . நளினியின் கையை பிடித்து கொண்டிருந்தவர் , மேலும் அழுத்தமாக பற்றிகொண்டார் . வியர்த்துவிட்டது.

நளினிக்கு ஒன்றும் புரியவில்லை .என்ன.. என்ன . என்று பதற எனக்கு அவனை ஓங்கி அறைய வேண்டும் போலிருக்கிறது சர்தார்ஜியை பார்த்தாலே வயிறு எரிகிறது .என்று சுபா சொன்னார்.

இலங்கை சென்ற இந்திய அமைதி படையில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் என்பதை தணு விளக்கினார்.


மேலும் நான் வாங்கிய புத்தகங்கள்

எர்னஸ்டோ சேகுவேரா

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

அய்யனார் கம்மா

கருவேல நிழல்

கிளிஞ்சல்கள் பறக்கின்றன

பெருவெளிச்சலனங்கள்

மரப்பாச்சியின் சில ஆடைகள்


குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்து இருக்கிறது

சிறந்த பேச்சாளராக

அதிஷ்ட ஜோதிட சாஸ்திரம்

ஸ்ரீ மத் பகவத் கீதா


>