மனதில் நிற்கும் சில பதிவர்களின் பதிவுகள்

நாம் படித்த சில புத்தகங்கள் நம் மனதில் நிலைத்திருக்கும் அது போல நான் படித்து மனதில் நிலைத்த சில பதிவர்களின் பதிவுகளை முன் வைக்கிறேன்..!

தலை சிறந்த பெண்பதிவர்களில் இவர் முக்கியமானவர். இவரது பதிவுகள் பெரும்பாலும் சமூக அக்கறையுடனே வெளிவரும் . எயிட்ஸ் நோய் ஒழிப்பு துறையில் அதிகாரியாக பணியாற்றியபோது மரியாதைக்குரிய மங்கை மேடம் நிகழ்த்திய அதிரடி நடவடிக்கையை இந்த பதிவில் பாருங்கள்...!

எச் ஐவியால் பாதிக்க பட்டவளாய் நான்

.......................
இவரது இந்த புல்,மூங்கில் கதை சில சந்தர்ப்பங்களில் எனக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது இந்த கதை உங்களுக்கும் உதவ கூடும். அண்ணன் இராகவன் அவர்களின் இந்த பதிவு .!
போய் விட முடிவு செய்துவிட்டேன் ...
.............
சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் இவர் இப்படிபொருள் பட சொன்னார் வலையுலகில் '' இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு என் பங்களிப்பும் உள்ளது '' என..! அது எந்த அளவு உண்மை என அப்துல்லா இந்த பதிவில் சொல்லுகிறார் .
தீபாவளி நினைவுகள்
.........

ஊருக்கு போய் இருந்தப்போ பார்ல தண்ணி அடிக்கும்போது நண்பன் ஒருவனிடம் இந்த கவிதையை சொன்னேன் கவிதையை கவனமா கேட்டவன் கடைசியில்

//ஏனோஅப்பாதான்
வரவே இல்லை..... ///

என்ற இந்த கடைசி வரியை கேட்டதும் கண் கலங்கிவிட்டான் அந்த கண்ணீரில் தெரிந்தது அந்த கவிஞரின் வெற்றி..!

அண்ணன் தண்டோரா மணிஜி யின் இந்த கவிதையை இந்த பதிவில் வாசியுங்கள்
கருப்பு கலர் ஆரஞ்சு
.............

அருமையான சிந்தனையில் வடிக்கப்பட்ட ஒரு அழகு கவிதை இது அமுதா மேடம் அவர்களின் இந்த பதிவு
ஒரு திண்ணையின் கதை
.............................

இவர் ஒரு பிறவி எழுத்தாளர் இந்த பதிவுதான் என இல்லை இவரின் அனைத்து பதிவுகளுமே இவர் திறமைக்கு சான்று .!

அமிர்த வர்ஷினி அம்மாவின் இந்த பதிவு ஒரு சாம்பிள் மட்டுமே
உளவு
............
எழுத்துலகில் இவர் ஒரு சிறந்த இடத்துக்கு வருவார் என என் உள்ளுணர்வு அடிக்கடி சொல்லும். பாலாசி யின் இந்த பதிவும் மனதில் அடிக்கடி வந்து செல்லும் படித்து பாருங்கள் இந்த பதிவை ..
குடியானவன்




மேலும் பல பதிவுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன் ...!





....

>