ஜோதிடம் எந்த அளவுக்கு.??

எனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும்..! கொஞ்சம் அப்படின்னா கொஞ்சமாதான்..!ஜோதிடம் பத்தி ஒரு பிளாக் கூட எழுதினேன் ஆனா வலையுலகத்துல சிலர் ஜோதிடம் பத்தி எழுதுறத பார்த்து பிரம்மிச்சு போய் நமக்கு ஜோதிடம் பத்தி எழுத தகுதி இல்லன்னு முடிவு பண்ணி நிறுத்திகிட்டேன் .

நான் ஜோசியம் கத்துக்கணும்னு நினைக்க ஒரு காரணம் இருக்கு..!என் நண்பர்கள் மற்றும் சிலர் பயங்கரமான ஜோதிட பிரியர்கள் தொட்டதுக்கெல்லாம் ஜோசியம் ,ஜோசியம்னு இருப்பாங்க அன்றாடம் நம்ம நிகழ்வுகள கிரகங்களோட சம்பந்த படுத்தி பேசுறத கேட்டா மண்ட காயும்.

ஜோதிடத்த நம்பி சிலர் பண்ணின சொல்லுறேன் ..!

தெரிஞ்ச ஒருத்தர் தீவிர ஜோதிட நம்பிக்கை உள்ளவர். அவருக்கு கல்யாணமாகி ஒரு அவங்க மனைவி கர்பமாகவே ,இவர்நேரா அவங்க குடும்ப ஜோசியர்கிட்ட போய் இப்போ இந்த குழந்தை பெத்துக்கலாமா கேக்க அந்த மேதாவி ஜோசியரும் இப்போ வேணாம்.! இந்த குழந்தைபெத்துகிட்டா பெரிய கஷ்டம் வரும்னு சொல்ல, இவரும் அவர் மனைவிய கட்டாய படுத்தி அபார்சன் பண்ணிட்டாரு.
அதுக்கப்புறம் அவங்களுக்கு சில வருடங்கள் குழந்தை பிறக்கல அஞ்சு வருஷம் கழிச்சுதான் பிறந்தது.

எனக்கு அந்த ஜோசியர பார்த்தா கொலைகாரனை பாக்குறதுபோல பாக்குறதுபோல இருக்கும் . அப்படியென்னகருவை கொல்லுற அளவுக்கு என்ன ..? ஜோசியம்..?

Justify Full
இன்னொரு சம்பவம் என் நண்பன் ஒருத்தன் ஒரு பொண்ண லவ் பண்ணினான். கல்யாணம் பண்ண ரெண்டு பக்கமும் செம எதிர்ப்பு..! ஒரு வழியா கொஞ்ச கொஞ்சமா எல்லாரும் சம்மதிக்க பையனோட அம்மா மட்டும் சம்மதிகல..! அவங்க சம்மதத்த வாங்க பெரிய கஷ்டமாயிடுச்சி கடசியா அவங்க சொன்னது ஜாதகம் பொருத்தம் இருந்தா ஒத்துகிறேன் அப்படின்னு சொல்ல,பையனுக்கு லேசா பயம் வந்துட்டு...! ஜாதகம் சரியா இல்லாட்டி என்ன பண்ணுறதுன்னு ..? ஒடனே அவன் அந்த பொண்ணுகிட்ட யாருக்கும் தெரியாம ஜாதகத்த கொண்டுவரசொல்லி பொருத்தம் பார்த்தா ..?பொண்ணுக்கு மூல நட்சத்ரம்...! மூல நட்சத்ரம் இருந்தா மாமனாருக்கு ஆகாது...! வீட்டுல கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க..! ஒடனே இவன் அந்த பொண்ணு ஜாதகத்தயே பொருத்தம் இருக்குதுபோல மாத்திட்டான் . கல்யாணமும் ஆச்சு பையனோட அப்பா நல்லா தீர்கயுசா இருந்துதான் காலமானார்....! அப்படின்னா ? மூல நட்சத்ரம் ...? என்ன ஜோசியம் ..? ஜாதகம் ...?

ஜோதிட நம்பிக்கை உள்ளவங்க கிட்ட இதையெல்லாம் எடுத்துசொல்லி ஜாதகம் பொய்ன்னு சொன்னா பெரிய வாக்குவாதம்தான் வந்தது. ஜாதகம் பொய் அப்படின்னு ஆதாரத்தோட சொல்லனும்னுதான் ஜோசியம் பத்தின புத்தகங்கள படிக்க ஆரம்பிச்சேன்..!



ஆரம்பத்தில் ஜோதிடம் ஒட்டவில்லை ஆனால் ..!படிக்க படிக்க ஆர்வம் அதிகமானது. ஜோதிடத்தில் பல உண்மைகள் இருப்பதாக நினைத்தேன்.என் ஜாதகம்,மற்றும் எனக்கு தெரிந்தவர்கள் ஜாதகத்தை வைத்து கணிக்கும் போது கொஞ்சம் வியப்பு ஏற்பட்டது உண்மை..! இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும் .! இங்கே ஜோதிட கடலில் நீந்தி முத்தெடுத்த பல வல்லுனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கற்ற அந்த ஜோதிட கல்விக்காக அவர்களை வணங்க தோன்றியது...! என்னை பொறுத்தவரை ஜோதிட கடலில் நான் வெறும் கால் நனைத்தவன் அவ்வளவுதான் ..! ஜோதிடத்தில் உண்மை இருக்கிறது ஆனால் ..?சில ஜோதிடர்கள்தான் குழப்புகிறார்கள்..!!

ஒரு உதாரணம் அவர் பிரபலமான ஜோதிடர் அக்ஷய திரிதியை அன்று ஒரு பிளாட்டின நகை விற்பனை செய்யும் கடைக்கு விளம்பரம் செய்கிறார் எப்படி...? அக்ஷய திரிதியை அன்று வெள்ளை நிற உலோகம் தான் வாங்கவேண்டும் அது பிளாட்டினம் தான் என்ற ரீதியில் சொல்கிறார்..! ஏன் ? வெள்ளியும் வெள்ளை நிற உலோகம்தான் அதை ஏன் அவர் சொல்லவில்லை...???

இன்னொருவர் சனி பெயர்ச்சிக்கு பரிகார யாகம் நடத்துகிறார்...! இந்த சனி பெயர்ச்சியில் பாதிப்பு அடையும் கீழ்க்கண்ட ராசிக்காரர்களே...! உங்கள் கஷ்டங்கள் நீங்க பரிகார யகத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்து காசு பார்க்கிறார் ..!
சில ஜோதிடர்கள் தங்கள் வருமானத்திற்காக கிரகங்களை காட்டி பயமுறுத்துகின்றனர்..!

என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது ஒரு வானிலை அறிக்கை மாதிரி மழை பெய்யும்,அல்லது பலத்த காற்று வீசும் என்பதுபோல...!

அல்லது இப்படியும் சொல்லாம்..!

அதாவது ஆற்று வெள்ளத்தில் பயணம் செய்வதுபோல ஜோதிடத்தை நம்பி விதியே என பயணம் செய்தல் அதன் போக்கில் தான் போகும் ..!

ஜோதிடத்தை இப்படி கூட சொல்லலாம்..!

கிரிக்கெட்டில் வரும் பிட்ச் ரிப்போர்ட் போல இது பேட்டிங் செய்ய ஏதுவான பிட்ச் .அல்லது பந்து வீச ஏதுவான பிட்ச் என்பதுபோல ...!

ஜோதிட சக்தியா ..?மனித சக்தியா ..?

ஒருவர் தான் மாமன் மகளை திருமணம் செய்து கொண்டார் சொந்தம் என்பதால் ஜாதகம் பார்க்காமல் திருமணம் நடந்தது. ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.அப்போதுதான் அவர்களுக்கு ஜாதகம் பார்க்க தோன்றியது .ஜாதகத்தில் இருவருக்குமே ஐந்தாம் இடத்தில் ராகு..! மேலும் புத்திர ஸ்தானத்தில் இருவருக்குமே குரு நீசம் .இவர்களுக்கு குழந்தையே பிறக்காது இருவரும் திருமணமே செய்திருக்க கூடாது என பல ஜோதிடர்கள் சொல்ல மிகவும் கவலை அடைந்தார்கள்.இவர்களில் இந்த நிலையை பயன்படுத்தி பரிகாரம் என்ற பெயரில் சில போலிகள் வருமானம் கண்டார்கள். பரிகாரம் செய்ததோடு இவர்கள் அதிநவீன மருத்துவத்தையும்
கையாண்டார்கள் மருத்துவம் கை கொடுக்க இவர்களுக்கு இப்போது நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது ..?

அப்படியெனில் ஜோதிடம் ...?

விதி என்ற ஜோதிடம் அவர்களிடம் வேலையை காட்டியது ஆனால் ?மருத்துவம் என்ற மதி அதை வென்றுகாட்டியது ...!

ஜோதிட சக்தியா..? மனித சக்தியா..? என கேட்டால் கண்டிப்பாக மனித ஆற்றலுக்கு நிகரானது எதுவும் இல்லை என்றுதான் சொல்லுவேன்..!

ஜோதிடம் வானிலை அறிக்கை போல, மழை வரும் என்றால் அதில் நனையாமல் இருப்பது நம் சாமர்த்தியம் .

ஜோதிடம் ஆற்று வெள்ள பயணம் போல விதியே என பயணம் செய்யாமல் எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நமக்குதான்..!

ஜோதிடம் ஒரு பிட்ச் ரிப்போர்ட் பந்து வீச்சுக்கு சாதகமான பிச்சில் சதம் அடிப்பதும் ,பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் அதிக விக்கட்டுகள் எடுப்பதும் அவரவர் திறமை, முயற்சி, உழைப்பை பொறுத்தது.

ஜோதிடத்திலேய மனித சக்திதான் சிறந்தது என்பதற்கு நழுவலான ஒரு விதியை சொல்லி இருக்கிறார்கள். ஒருவனுக்கு எல்லா கிரககங்களும் பாதகமான நிலையில் இருந்து, துன்பம் அளிக்கும்போது அவன் அந்த துன்பங்களை எதிர்த்து கடினமாக உழைத்தால் துன்பம் அளித்த கிரகங்களே மனம் இளகி அவனுக்கு நன்மை செய்யுமாம்.


தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்




>