தனி மனிதர்களுக்கான தேசம் அல்ல இது...!

தனி மனிதனாக இருக்க வேண்டாம் இது தனி மனிதர்களுக்கான நாடு அல்ல.
ஒரு கூட்டமாகவோ,ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு சங்கமாகவோ இருப்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதை தனி மனிதருக்கு கிடைக்கவில்லை.
தனி மனிதருக்கு நீதி மறுக்கபடுகிறது. தனி மனிதராக இருந்து நீதி பெற வேண்டுமெனில் பெரும் பணக்காரனாக இருக்க வேண்டும். ஒரு தனிமனிதன் இன்றைய நிலையில் ஒரு பொருளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூட பெரும்பாடு படவேண்டிஉள்ளது. இருதரப்பிற்க்கு பிரச்சனை எனில் அங்கே நியாயம் தர்மம் பார்ப்பதைவிட யார் அதிக வொர்த்து என்றே கவனிக்க படுகின்றனர்.

தனித்து இல்லாமல் ஏதாவது ஒரு அமைப்பில் உங்களை இணைத்து கொள்ளுங்கள். உங்கள் தொழில் சார்ந்த அமைப்போ அல்லது பகுதி சார்ந்த அமைப்போ அல்லது உங்கள் ஜாதி மத அமைப்பாக இருந்தாலும் பரவாயில்லை,ஜாதி மத அமைப்புகளுக்கு இன்றைய நிலையில் நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது இது வெட்க பட வேண்டிய உண்மைதான்.ஆனால் இந்த நிலை மாற இன்னும் பல வருடங்கள் ஆகும்.அதுவரை நாமும் ஊரோடு ஒத்து போகவேண்டியதுதான்.எதும் இல்லாவிட்டாலும் எதாவது ஒரு அரசியல் கட்சியிலாவது இணைந்துவிடுங்கள் அதுவே பாதுகாப்பு.

நான் உண்டு என் வேலை உண்டு என இருக்கின்றேன் எனக்கு எதுக்கு இதெல்லாம் என்ற எண்ணம் மட்டும் வேண்டாம். யாருக்கு எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை வரலாம்.உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு ஐம்பது பேர் வந்து நிற்கும்படி உங்கள் சூழலை உருவாக்கிகொள்ளுங்கள்.

கேட்க நாதியில்லாத காரணத்தால் காவல் துறை நடவடிக்கை,கட்ட பஞ்சாயத்து
ஆகியவைகளால் ஊரைவிட்டு ஓடிபோன,தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் பல உண்டு.

தனித்து போராடி வெல்ல முடியாதா என கேட்கலாம்..! முடியும்.. ஆனால் அதற்கான விலை மிக அதிகம் முடிந்தவர்கள் போராடி கொள்ளட்டும்.

அதிஷ்டவசமாக ஓட்டுகாக பிச்சை எடுக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதுவே நமக்கு ஆயுதம். எப்போதும் ஒற்றுமையுடனும்,கூட்டமாகவும் இருப்போம்...! தலை நிமிர்ந்து தைரியமாக வாழ்வோம்...!

தனி மனிதர்களுக்கான தேசம் அல்ல இது...!

>