''தமிழ் பிரியன்'' கதை (ஆளில்லாத தீவினிலே)படித்து எனக்கு தோன்றிய கதை !

சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் தமிழ் பிரியன் ஆளில்லா தீவினிலே என்ற ஒரு முழு நீளசிறுகதை கதை வடித்து இருந்தார்! மூன்று பாகங்களாக வந்த அந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது!! அந்த கதையை படிக்கும் போது அந்த கதையின் அடிப்படையில் எனக்கும் ஒரு கதை தோன்றியது!

நண்பர் தமிழ் பிரியனின் கதை!!

ஆளில்லாத தீவினிலே.....- முதல் பாகம்

சோழ நாடு --பூம்புகார் துறைமுகம்


நாடு முழுவதும் பதற்றம் சேர மன்னனின் திடீர் படையெடுப்பால்! போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில், பர்மா போன்ற நாடுகளில் இருந்து வரவேண்டிய கப்பல்கள் வரவில்லை வெள்ளி காசுகளுக்கு கிடைத்த பொருட்களை பொற்காசுகள் கொடுத்து வாங்கும் நிலை வருமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவியது !

இரண்டு நாட்களாக துறை முகத்தில் பெரிய பாய்மர கப்பல் ஒன்று பயணம் துவங்க ஆயத்தமாகி கொண்டு இருந்தது! போரில் சேர மன்னனின் கை ஓங்கி கொண்டே இருக்க சோழ மன்னன் முழு பலத்தையும் பிரயோகம் செய்ய வேண்டிய நிலை! நாடு சேர மன்னன் வசம் சென்று விடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவியது!

சற்று நேரத்தில் புகார் துறைமுகம் பரபரப்படைந்தது... குதிரை வீரர்களும்,குதிரை வண்டிகளும் பல்லக்குகளுமாக வந்து துறை முகத்தில் ஒரு அரச களையை உருவாக்கியது!

வீரர்கள் அணிவகுக்க ஒரு குதிரை வண்டியில் இருந்து மன்னன் இறங்குகிறார் ! பல்லக்குகளில் இருந்து சில தாதி பெண்கள் இறங்குகிறார்கள் ! ஒரு பல்லக்கில் இருந்து சோழ ராணி இறங்குகிறார் ஓரிரு மாதங்களில் ஜனிக்க இருக்கும் சோழ வாரிசை வயிற்றில் சுமந்தபடி!மிகுந்த மன கவலையில் சோழ ராணி ! போர் சூழ்ந்த நிலையில் கர்பவதியான அரசியை அரண்மனையிலோ நாட்டின் பிற பகுதியிலோ வைத்துக்கொள்ள மன்னருக்கு விருப்பமில்லை.

சோழ வாரிசை சுமந்திருந்தஅரசியின் உயிருக்கு சேர மன்னனால் ஆபத்து ஏற்படும் என மன்னர் நினைத்தார் எனவே அரசியை பாதுகாக்கும் பொருட்டு அரசியை இலங்கைக்கு பாதுகாப்பாக கப்பலில் அனுப்ப நினைத்து இந்த ஏற்பாடு!



கப்பல் புறப்பட தயாராகிறது வீரர்கள் சிலர், மருத்துவம் பார்க்கும் பெண்மணி ,தாதி பெண்கள் ,ராணியின் பெற்றோர் என ஒரு குழுவினர் புறப்பட ஆயத்தமாகின்றனர் பிரிய மனமின்றி ராணி கண்ணீருடன் ! மன்னர் ஆறுதல் சொல்கிறார் இன்னும் சில தினங்களில் எப்படியும் போரில் வென்று விடுவோம்! கப்பல் ஈழ தேசத்திற்குதான் செல்கிறது அங்கே நம் தமிழ் மக்கள் உங்கள் அனைவரையும் தங்களில் ஒருவராக கவனித்து கொள்வார்கள் கவலை வேண்டாம் வெகு விரைவில் நான் அங்கு வந்து அழைத்து கொள்கிறேன் என கூறி பிரியா விடை கொடுத்து அனுப்பிவைக்கிறான் கப்பல் புறப்படுகிறது.





ஓரிரு நாட்கள் செல்கிறது .வானிலையில் பெரும் மாற்றம்! கடலில் கடும் சூறாவளியும் ஆழி பேரலைகளும் உருவாகி கப்பலை கட்டுப்பாடு இழக்க செய்து திசை மாற்றுகிறது!!



சில மாதங்கள் செல்கிறது ....

போரில் ............ சோழ வீரர்களின் நவீன வியூகம் ,முழுபல தாக்குதலில் சேர படைகள் பின்வாங்குகிறது.தொடர் தாக்குதலில் முழு வெற்றி கிடைக்கிறது
சோழ நாட்டிற்க்கு!

மக்கள் வெற்றியை கொண்டாட! மன்னன் ராணியை அழைத்துவர இலங்கைக்கு தானே புறப்படுகிறான்! இலங்கையின் மேற்கு கரையோரம் உள்ள எந்த ஒரு துறை முகத்திலும் கப்பல் கரை சேரவில்லை! கடந்த சில மாதங்களில் எந்த ஒரு கப்பலும் அங்கு செல்ல வில்லை என கேள்விப்பட்டு மன்னன் மனம் உடைகிறான். அந்த பகுதியில் எந்த ஒரு தீவிலும் கப்பல் கரை ஒதுங்கவில்லை! கப்பல் கண்டிப்பாக புயலில் சிக்கி முழ்கி இருக்கும் என அனைவரும் முடிவுக்கு வர மன்னன் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை .

நாடு திரும்பிய மன்னன் ராணியை பிரிந்த கவலையில் நோய்வாய் படுகிறான் ஆனால் தன் கப்பல் படையினரை அனுப்பி ராணியை தேடுவதை மட்டும் நிறுத்தவில்லை!

சில ஆண்டுகள் செல்கிறது .................

கப்பல் படைவீரன் ஒருவன் அவசரமாக மன்னனை காண வருகிறான்!

மன்னா ....! இலங்கைக்கு தென் கிழக்கில் பல காத துரத்தில் ஒரு தீவினை கண்டேன்! ஆள் அரவமற்ற அந்த தீவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் மன்னா!!!

என்ன விரைவாக சொல் என மன்னர் துடிக்க!!

அந்த தீவில் உட்புறம் சென்று நான் தேடி கொண்டு இருக்கையில் அங்கே ஒரு சிறுமியை கண்டேன் மன்னா!!

என்ன???

அந்த சிறுமியை பக்கத்தில் அழைத்தேன் ஆனால் என்னை கண்ட அவள் வேகமாக ஓடிவிட்டாள் நானும் விடாமல் துரத்தி கொண்டே ஓடினேன் ஆனால்! வேகமாக ஓடி ஒரு பாறை இடையில் சென்று மறைந்து விட்டாள் மன்னா! நானும் நம் கப்பலுக்கு திரும்பி அனைவரையும் அழைத்துக்கொண்டு அந்த தீவு முழுவதும் அலசி தேடிப்பார்த்து விட்டோம் ஆனால் ? அங்கே மக்கள் யாரும் வசிப்பதர்க்கான எந்த சுவடும் தெரியவில்லை என்னுடன் வந்தவர்கள் யாரும் நான் சொல்வதை நம்பவில்லை! ஆனால் இறைவன் ஆணையாக நான் கண்டது உண்மை!!

மன்னா ஒரு முக்கிய விஷயம்!

நான் கண்ட அந்த சிறுமி அச்சு அசலாய் நம் மகராணியாரை போலவேஇருந்தாள்!



(தமிழ் பிரியன் கதையில் வந்த தீவில் கண்ட அந்த பெண் இந்த வம்ச வழியில் வந்தவளாக இருக்குமோ)




>