மேன்சனில் நடந்த நான்சென்ஸ் -நீதி கிடைக்குமா ?

தற்போது சென்னை நகரில் அக்னி சுடர் என்னும் செய்தி பத்திரிக்கை வலம் வருகிறது ஒரு இந்த பத்திரிகை போலீஸ் -பொதுமக்கள் நட்புறவு வார இதழாக வருகிறது! சமுக அவலங்களையும்,தவறு செய்யும் அதிகாரிகள்,காவல் துறையினர்,அரசியல் வாதிகள் என எவரையும் விட்டு வைக்காமல் எல்லோரையும் சுட்டி காட்டுகிறது சில இடங்களில் இந்த பத்திரிகை செய்தியால் நடவடிக்கையும் எடுக்க பட்டு உள்ளது!

இந்த பத்திரிக்கை மிக தைரியமாகவும்
நேர்மையாகவும் செயல் பட
ஒரு முக்கிய காரணம் உள்ளது !

இந்த பத்திரிக்கையின் Executive Director ஆக இருப்பவர்
சமுக நல ஆர்வலர்.... மக்கள் பிரச்சனைக்காக பல
பொதுநல வழக்குகளை தொடுத்து நியாயம்கிடைக்கசெய்த

திரு ,ட்ராபிக் கே .ஆர். ராமசாமி அவர்கள்...

இதன் ஆசிரியர் திரு , டி .எஸ் .ஜேம்ஸ் நாயகம்

தலைமை நிருபர் திரு .என் .ஜெகதீஸ்வரன்

இதில் ஜெகதீஸ்வரன் என்பவர் எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்!

சமீபத்தில் பதிவர் ரமேஷ் என்பவர் கிணறு வெட்ட பூதம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தார் நண்பர் ஜமால் பதிவின் வாயிலாக அந்த பதிவினை பார்த்தேன்! அந்த பதிவில், தான் தங்கி இருந்த மேன்சனில் நல்ல குடிநீர் வேண்டி போராடியது,அந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது அந்த பிரச்சனையால் அவர் அடைந்த இன்னல்கள் எல்லாவற்றையும் தம் பதிவில் கூறி இருந்தார்! அந்த சுட்டி இங்கே!

நான் அக்னி சுடர் பத்திரிக்கையின் தலைமை நிருபர் ஜெகதீஸ்வரனை அழைத்து அந்த பதிவினை காட்டினேன்! இந்த பிரச்சனைக்கு தங்கள் பத்திரிகை ஏதேனும் செய்ய முடியுமா என கேட்டேன்! அவர் திரு ரமேஷ் அவர்கள் இந்த பிரச்சனை சந்பந்தமாக என்ன என்ன ஆதாரங்கள் வைத்து உள்ளாரோ அனைத்தும் வேண்டும் என கேட்டார்!

நான் திரு ரமேஷ் அவர்களை தொலை பேசியில் அழைத்து விபரம் சொன்னேன்! அவரும் மறுநாள் தான் தண்ணீர் பரிசோதனை செய்த சான்று, மற்றும் கமிஷனர் அலுவலகம் சென்ற சான்று, இந்த பிரச்சனை ஜுனியர் விகடன் பத்திரிகையில் வந்த செய்தியின் நகல்,டெக்கான் குரோனிகல் பத்திரிக்கையில் செய்தி வந்த நகல் மேலும் சில ஆதாரங்களை நேரில் வந்து என்னிடம் கொடுத்தார். நான் அதை நிருபரி டம் கொடுக்க இந்த பிரச்சனை திரு ட்ராபிக் ராமசாமி அவர்களிடம் செல்கிறது. திரு ட்ராபிக் ராமசாமி அவர்களும் திரு. ரமேஷை அழைத்து சில விபரங்களை கேட்டு அறிந்துள்ளார். இப்போது இந்த பிரச்சனை அக்னி சுடர் பத்திரிகையில் மேன்சனில் நடந்த நான்சென்ஸ் என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் செய்தியாக வெளிவந்தது உள்ளது.

இந்த அக்னி சுடர் பத்திரிகையானது தலைமை செயலகம் ,எழும்பூர் கமிஷனர் அலுவலகம் ,புறநகர் கமிஷனர் அலுவலகம், உயர்நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் ,சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், மற்றும் முதலமைச்சர் அலுவலகம்,அனைத்து அமைச்சக அலுவலகங்கள் ,மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு செல்கிறது!!!


நீதி கிடைக்குமா ? பொறுத்திருந்து பார்க்கலாம்!!


..................................................................

>