MLA ஆகணும்..! எந்த கட்சில சேரலாம் ..?


விளையாட்டுக்கு இல்ல நிஜமாவே எனக்கு அப்படி ஒரு ஆசை உண்டு .! அப்படி ஒரு ஆசை குறிக்கோள் இருக்க கூடாதா என்ன ? சின்ன வயசுல இருந்தே சட்டமன்ற உறுப்பினர் ஆகனுன்னு ஒரு எண்ணம் உண்டு எனக்கு ..! அது என்ன அவ்ளோ சுலபமா என்ன ..? அதுக்கு ஒருகட்சில இருந்து ஒரு நெடிய கால உழைப்பு இருக்கணும் இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்கு ..! சரிங்க .. எனக்கு இன்னும் ஒரு பதினைஞ்சு வருஷம் கழிச்சு எம் எல் ஆகணும் எல்லாத்துக்கும் நான் ரெடி அதாவது கொடி புடிச்சு தொண்டனா ஆரம்பிச்சு செலவு பண்ணி கட் அவுட், பேனர் வைக்க ஆள் சேர்த்துகிட்டு கட்சி பணி செய்ய , இன்னும் என்ன என்ன தகுதி வேணுமோ எல்லாத்தையும் வளர்த்துக்க போறேன்னு வைச்சுகோங்க அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த கட்சில சேர்ந்து பணி ஆற்றினா இன்னும் பதினைஞ்சு வருசத்துல எம் எல் ஆக வாய்ப்பு அதிகம் ..? கொஞ்சம் அலசி பார்க்கலாமா ..?

தேமுதிக
வளரும் கட்சின்னு சொல்லுறாங்க ஆனா ..? கடந்த ரெண்டு தேர்தல் முடிவுகளை வைச்சு பார்க்கும்போது எட்டுல இருந்து பன்னண்டு சதவீத ஓட்டு இவங்களுக்கு கிடைக்கும் இன்னும் வளர்ந்தா இன்னும் கொஞ்சம் ஓட்டு சதவீதம் கூடும் கூட்டணி இல்லாம இவங்க ஏதும் செய்ய முடியாது போல அவங்களே கூட்டணி க்கு போனாதான் முடியும்னா நமக்கு சரி வருமா .? இது ஆவறதில்ல ...!

மதிமுக
எனக்கு புடிச்ச ஒரு கட்சி இது ஆனா ..? நாளுக்கு நாள் தேஞ்சு கிட்டே போறதுபோல தோணுது ..! அவங்களே சரியாய் இன்னும் ஸ்டெடி பண்ணல இதுல நாம எங்க ..?
காங்கிரஸ்
அரசியல் ரீதியா எனக்கு பெரிய கொள்கைகள் ஏதும் இல்ல ஆனா இருக்குற ஒரே கொள்கை என்னன்னா..? காங்கிரச எதிர்க்கணும் இதுல மட்டும் நான் ரொம்ப உறுதி இவங்களே என்னை கூப்பிட்டு சீட்டு கொடுத்தாலும் ரிஜக்டு தான்..!

திமுக
இந்த கட்சிய பொறுத்தவரை என்னதான் குடும்ப அரசியல்னு சொன்னாலும் கூட கட்சில இருந்து விசுவாசமா உழைக்கிரவங்கள கட்சி கைவிடுறது இல்ல பல வருசங்கள் உழைச்சு விசுவாசமா இருந்தா திமுகவில வளர வாய்ப்பு இருக்கு .!

அதிமுக
இந்த கட்சிய பொறுத்தவரை அதிஷ்டம் கொஞ்சம் இருக்கனும் இது ஒரு பரமபத கட்சி கீழ இருக்குறவங்க திடீர்னு பெரிய ஆளா யிடுறாங்க கட்சில பல வருஷம் உழைச்சவங்கள கொஞ்ச நாள்லயே காணாம அடிச்சுடுறாங்க ..!

இன்னும் சில கட்சிகள சொல்லலாம் ஆனா ஒன்னும் பயன் இல்ல..!

இதுவரை என்னுடைய இந்த பதிவை பொறுமையுடன் படிச்ச வலையுலக வாக்காள பெருமக்களுக்கு என் கோடானு கோடி நன்றி கலந்த வணக்கத்தை உங்கள் பாதங்களில் சமர்பிக்கின்றேன் ...!




(இந் பதிவை காமெடியா நினைச்சு கமென்ட் போட்டா நான் கோச்சுக்க மாட்டேன் ஆனா பதிவை சீரியஸா தான் எழுதி இருக்கேன் தங்கள் மேலான ஆலோசனை தேவை )






>