MLA ஆகணும்..! எந்த கட்சில சேரலாம் ..?


விளையாட்டுக்கு இல்ல நிஜமாவே எனக்கு அப்படி ஒரு ஆசை உண்டு .! அப்படி ஒரு ஆசை குறிக்கோள் இருக்க கூடாதா என்ன ? சின்ன வயசுல இருந்தே சட்டமன்ற உறுப்பினர் ஆகனுன்னு ஒரு எண்ணம் உண்டு எனக்கு ..! அது என்ன அவ்ளோ சுலபமா என்ன ..? அதுக்கு ஒருகட்சில இருந்து ஒரு நெடிய கால உழைப்பு இருக்கணும் இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்கு ..! சரிங்க .. எனக்கு இன்னும் ஒரு பதினைஞ்சு வருஷம் கழிச்சு எம் எல் ஆகணும் எல்லாத்துக்கும் நான் ரெடி அதாவது கொடி புடிச்சு தொண்டனா ஆரம்பிச்சு செலவு பண்ணி கட் அவுட், பேனர் வைக்க ஆள் சேர்த்துகிட்டு கட்சி பணி செய்ய , இன்னும் என்ன என்ன தகுதி வேணுமோ எல்லாத்தையும் வளர்த்துக்க போறேன்னு வைச்சுகோங்க அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த கட்சில சேர்ந்து பணி ஆற்றினா இன்னும் பதினைஞ்சு வருசத்துல எம் எல் ஆக வாய்ப்பு அதிகம் ..? கொஞ்சம் அலசி பார்க்கலாமா ..?

தேமுதிக
வளரும் கட்சின்னு சொல்லுறாங்க ஆனா ..? கடந்த ரெண்டு தேர்தல் முடிவுகளை வைச்சு பார்க்கும்போது எட்டுல இருந்து பன்னண்டு சதவீத ஓட்டு இவங்களுக்கு கிடைக்கும் இன்னும் வளர்ந்தா இன்னும் கொஞ்சம் ஓட்டு சதவீதம் கூடும் கூட்டணி இல்லாம இவங்க ஏதும் செய்ய முடியாது போல அவங்களே கூட்டணி க்கு போனாதான் முடியும்னா நமக்கு சரி வருமா .? இது ஆவறதில்ல ...!

மதிமுக
எனக்கு புடிச்ச ஒரு கட்சி இது ஆனா ..? நாளுக்கு நாள் தேஞ்சு கிட்டே போறதுபோல தோணுது ..! அவங்களே சரியாய் இன்னும் ஸ்டெடி பண்ணல இதுல நாம எங்க ..?
காங்கிரஸ்
அரசியல் ரீதியா எனக்கு பெரிய கொள்கைகள் ஏதும் இல்ல ஆனா இருக்குற ஒரே கொள்கை என்னன்னா..? காங்கிரச எதிர்க்கணும் இதுல மட்டும் நான் ரொம்ப உறுதி இவங்களே என்னை கூப்பிட்டு சீட்டு கொடுத்தாலும் ரிஜக்டு தான்..!

திமுக
இந்த கட்சிய பொறுத்தவரை என்னதான் குடும்ப அரசியல்னு சொன்னாலும் கூட கட்சில இருந்து விசுவாசமா உழைக்கிரவங்கள கட்சி கைவிடுறது இல்ல பல வருசங்கள் உழைச்சு விசுவாசமா இருந்தா திமுகவில வளர வாய்ப்பு இருக்கு .!

அதிமுக
இந்த கட்சிய பொறுத்தவரை அதிஷ்டம் கொஞ்சம் இருக்கனும் இது ஒரு பரமபத கட்சி கீழ இருக்குறவங்க திடீர்னு பெரிய ஆளா யிடுறாங்க கட்சில பல வருஷம் உழைச்சவங்கள கொஞ்ச நாள்லயே காணாம அடிச்சுடுறாங்க ..!

இன்னும் சில கட்சிகள சொல்லலாம் ஆனா ஒன்னும் பயன் இல்ல..!

இதுவரை என்னுடைய இந்த பதிவை பொறுமையுடன் படிச்ச வலையுலக வாக்காள பெருமக்களுக்கு என் கோடானு கோடி நன்றி கலந்த வணக்கத்தை உங்கள் பாதங்களில் சமர்பிக்கின்றேன் ...!




(இந் பதிவை காமெடியா நினைச்சு கமென்ட் போட்டா நான் கோச்சுக்க மாட்டேன் ஆனா பதிவை சீரியஸா தான் எழுதி இருக்கேன் தங்கள் மேலான ஆலோசனை தேவை )






>

10 comments:

தமிழரசி said...

தமிழ் இந்த கும்பிடு போடும் போட்டோவா போஸ்டரா போட்டா போதும் எல்லா கட்சியும் உங்களை தேடுவாங்க ஆனால் எதுக்குன்னு தெரியலை.... இந்த கமெண்ட் காமெடியா....

தமிழரசி said...

முதல்பத்திக்கு பதில் சொல்ல ஆசை ஆனால் அது ஒரு பதிவாயிடுமேன்னு தான் போடலை தமிழ்

Dharshi said...

படம் அழகாதான் இருக்கு.. அரசியால் களை வந்திரிச்சி..

நம்ம தமிழ் அமுதன், மன்னிக்கவும் (பழக்க தோசத்துல மாறி வந்துட்டு) நம்ம தலைவர் அவர்கள் MLA ஆயிட்டா நமக்கு அரசாங்க வேலை வாங்கித்தரனும் சொல்லிப்புட்டேன் ஆமா..

கட்சிக்காக நாமளும் உழைக்கறோம்ல எப்படின்னு கேட்கறீங்களா? அதான் இந்த பதிவுக்கு வோட் போட்டோம்ல..:))

chennaikaran said...

இன்னும் 180 நாட்கள்தான் இருக்கு பாஸ் டிரை பண்ணுங்க பைசான்ஸ் கிடைக்கலாம்(உண்மையாவே).

படிக்காத மக்கு பசங்களை சட்டசபைக்கு அனுப்பினா பயபுள்ளை தொகுதிக்கே வரமாட்டங்கரான்னு படிச்ச எழுத்தாளன அனுப்பினா அவனும் அப்பிடிதான் இருக்கான்.

நீங்க இந்த இரண்டு வகையராவும் இல்லன்னா உங்களை MLA ஆக்க நாங்க ரெடி பாஸ்.

இப்படிக்கு,
சென்னைக்காரன்.
நுங்கம்பாக்கத்திலிந்து

Chitra said...

இந்த பதிவை காமெடியா நினைச்சு கமென்ட் போட்டா நான் கோச்சுக்க மாட்டேன் ஆனா பதிவை சீரியஸா தான் எழுதி இருக்கேன் தங்கள் மேலான ஆலோசனை தேவை )


...... இதுதான் செம காமெடி...... கலக்குங்க, தலைவா!

sakthi said...

பேசாம நீங்க ஒரு கட்சி ஆரம்பிச்சுடுங்களேன் !!!!

sakthi said...

வணக்கம் தமிழ் ,
தேசபற்று உள்ள நீங்க கட்சி இல்லாமலே அனேக நன்மை செய்யலாம் . ஆதரவற்ற முதியோருக்கு உதவலாம் . .(பின்குறிப்பு :உங்க வணக்கத்திற்கு பின் என் முடிசூடா மன்னன் ஐயா சுபாஷ் சந்திர போஸ் அருமையாக உள்ளார் .என் சார்பாக அப்படியே ஒரு right turn போட்டு ஒரு சல்யூட் அடிங்க .நன்றி )
நட்புடன் ,
கோவை சக்தி

நட்புடன் ஜமால் said...

என் கமெண்ட்டை காமெடியா எடுத்துகாட்டி நானும் சொல்றேன்

நிஜமாய் ஒரு புது கட்சி துவங்குவோமே

கழகமற்று

ஒரே ஒரு கொள்கை தான்

இலஞ்சம் ஒழிப்போம்

ப்ரியமுடன் வசந்த் said...

போட்டோ போஸ் :)))))))

எதுக்கும் விஜயகாந்த கேட்டுப்பாருங்ண்ணா!

ஹுஸைனம்மா said...

//காங்கிரச எதிர்க்கணும் இதுல மட்டும் நான் ரொம்ப உறுதி//

அப்ப நீங்க சுயேட்சையாத்தான் நிக்கணும்!! ஏன்னா, எல்லாக் கட்சிகளுமே, முறைவச்சு மாத்தி மாத்தி கூட்டணி வச்சுகிறாங்க. அத்தோட, சுயேச்சையா நிக்குறதுதான் லாபமும்கூட!!

:-))))))