ஜாதகமும் .! கற்பு நெறியும்...!

ஒருவரின் ஜாதகத்தை அவர் குணம்,மற்றும் ஒழுக்கநெறிகளை துல்லியமாக கணித்துவிட முடியும் என சொல்ல படுகிறது .அதைவிட ஜாதகத்தை வைத்து ஒரு பெண் கற்புடையவளா அடுத்த ஆண்களை கவரும் எண்ணம் கொண்டவளா என்று கூட துல்லியமாய் சொல்லிவிட முடியுமாம் ..!

எனக்கும் கொஞ்சம் ஜோதிடம் தெரியும் என்பதால் கொஞ்சம் அலசலாம்.!

ஒருவரின் ஜாதகத்தை பார்த்து...

இவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர்
இவர் நல்ல பேச்சாளர்
இவர் கோபக்காரர்
இவர் மிகவும் உணர்சிவசபடுபவர்
இவருக்கு காதல் உணர்வு அதிகம்
இவருக்கு காம உணர்வு அதிகம்...!

இப்படியெல்லாம் சொல்லிவிட முடியும்தான் ..! அவை உண்மைதான் ..!
அவை சரியாகவே இருக்கும் ..!

ஆனால் ...!

நாம் ஜாதகம் கணித்து சொல்வது மிருகங்களுக்கு அல்ல ..! சிந்திக்கும் ஆற்றல் கொண்டு செயல்படும் மனிதர்களுக்கு ..! ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவன் எப்போதும் ஜோக்கடித்துகொண்டோ சிரித்து கொண்டோ இருக்க மாட்டான் அவனுக்கு இடம் பொருள் ஏவல் தெரியும் .! அதோடு ஜாதகத்தில் ஒருவன் நகைச்சுவை உணர்வு மிக்கவனாக காணப்பட்டால் சராசரியைவிட சற்று கூடுதல் உணர்வுடன் இருப்பான் அவ்வளவுதான் ..!

அதே போல ஒரு பேச்சாளன் என்றால் அவனுக்குண்டான இடத்திலேயே அவன் தனது பேச்சாற்றலை காட்டுவான் .


அதிக காதல் உணர்வு கொண்டவனும் அப்படித்தான் ..!

அதிக காம உணர்வு ஒருவருக்கு ஜாதகப்படி இருந்தால் அவர் அதில் ஈடுபடும் போது அதிக ஆர்வம் காட்டுவார் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும்
அது அவர் தனிப்பட்ட ரகசியம் ..!

ஒரு பெண்ணின் ஜாதகத்தை வைத்து அவள் ஒழுக்க நெறியை துல்லியமாக சொல்லிவிடமுடியுமா இதுதான் இப்போதைய கேள்வி..!

ஒரு பெண்ணின் குடும்பம்,அவள்பெற்றோர் வளர்ப்பு,அவள்,கற்ற கல்வி அவளது நட்பு வட்டம்,இவற்றை வைத்துதான் அவள் நடத்தையை தீர்மானிக்க வேண்டும். ஜாதகரீதியில் பல உணர்வுகள் ஒருவருக்கு இருக்கலாம் ஆனால் நம் உணர்வுகளை நிர்வகிப்பது நம் புத்திதானே..? நமக்கு எவ்வளவோ முறையற்ற ஆசைகள் தோன்றும்...!நாம் ஆசைப்பட்ட அனைத்தையும் பெற நாம் முயற்சி செய்கிறோமா? இல்லையே..! அறிவுக்கு தெரிகிறதல்லவா? எது சரி எது தவறு என..! ஜாதக பலன் சொல்லும்போது தற்காலத்திற்க்கு ஏற்றவாறு அனுபவரீதியாக கொஞ்சம் விஷய ஞானத்தோடு சொல்ல வேண்டும். ஜோதிட புத்தகத்தில் படித்ததை அப்படியே வாந்தி எடுக்க கூடாது..! ஜோதிடம் தோன்றியது எந்த காலகட்டத்தில்..? அந்த கால கட்டத்தில் மக்கள் எப்படி இருந்து இருப்பார்கள் இப்போது எப்படி என்பதையெல்லாம் ஆய்ந்து பார்க்க வேண்டும்..!

இரவு நேரத்தில் பேருந்தில் செல்கிறோம் சிறுநீர் முட்டி கொண்டு வருகிறது பேருந்து இன்னும் சில மணிநேரத்திற்க்கு பிறகுதான் நிற்க்கும் நாம் என்ன செய்கிறோம் அங்கேயே சிறுநீர் கழித்துவிட நாம் என்ன மிருகமா..? பொறுத்து கொள்வதில்லை..? அதுபோலதான் நம் உணர்வுகளை புத்தியால் கட்டி நெறிபடுத்தப்பட்ட ஒரு நாகரீக உலகில் வாழ்ந்துகொண்டு இருகின்றோம்.

ஜோதிடம் பொய் என்றோ கிரகங்களின் வலிமை பொய் என்றோ சொல்லவில்லை அறிவுடன் சிந்திக்க தெரிந்த,முயற்சியுடன் உழைத்து போராட தெரிந்த மனித சக்தியை முழுவதும் கிரகங்கள்தான் வழிநடத்துகின்றன என்பதை ஏற்றுகொள்வதுதான் சிரமமாக உள்ளது.

ஒரு ஜோதிட விதி..!

ஒருவன் ஜாதகப்படி எல்லா கிரகங்களுமே சாதகமில்லாமல் கெடு பலனை கொடுக்கும் நிலையில் இருந்தாலும் அந்த நிலையை எதிர்த்து அந்த மனிதன் கடினமாக உழைத்தால் அந்த கிரகங்களே மனம் இரங்கி நன்மை செய்யுமாம்.! அதாவது ஜோதிடமே சொல்கிறது மனித சக்திதான் சிறந்தது என்று..!

மந்திரம் கால் மதி முக்கால்..!

>

16 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.

இன்பம் துன்பம் said...

நல்ல பதிவு பாரட்டுக்கள்

யோஹன்னா யாழினி said...

உண்மை...ஜாதகம் அடிப்படை மட்டுமே..நமது புத்திதான் நம்மை
தீர்மானிப்பது.நமது புத்தியை தீர்மானிப்பது வினைப்பதிவும் வளர்ப்பு முறையும்.

இராகவன் நைஜிரியா said...

ஃபர்பெக்ட் பதிவு. வாழ்த்துகள்.

RAMYA said...

அருமை அமுதன்..

நல்ல புரிதலுடன் கூடிய அபாரமான பகிர்வு...

நளினமாக நச் என்று விளக்கி இருக்கிறீர்கள்.

ஜாதகம் கூட எழுதி வைத்திருக்கும் விஷயங்கள் சரியானதாக இருந்தால் மட்டுமே துல்லியமாக கணிக்கமுடியும்.

அது போல் நமது கஷ்டத்திற்கு ஜாதகம் பார்க்க போனால், அதிலும் சில சமயம் நமக்கு மன உளைச்சல் தரக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு நேர்ந்து விடும்...

என்னை கேட்டால் ஜாதகம் என்ன கூறினாலும், உதாரணத்திற்கு கெடுதல்கள் நிறைந்த பலன்கள் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.. அதையே நினைத்து ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்காமல், நமது மதியை உபயோகித்து அதன் போக்கில் இயங்கினோமானால் நமக்கு வரவிருக்கும் ஆபத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.
இது எனது தாழ்மையான கருத்து..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல பதிவைப் படித்தேன் அமுதன்.

நன்றி நண்பா!!!

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

ஜாதக பலன் சொல்லும்போது தற்காலத்திற்க்கு ஏற்றவாறு அனுபவரீதியாக கொஞ்சம் விஷய ஞானத்தோடு சொல்ல வேண்டும். ஜோதிட புத்தகத்தில் படித்ததை அப்படியே வாந்தி எடுக்க கூடாது..! ஜோதிடம் தோன்றியது எந்த காலகட்டத்தில்.//
நீங்கள் சொல்வது மிக சரி.நீங்கள் ஜோதிட ஆராய்ச்சியாளரா அல்லது ஜோதிடம் முழு நேர தொழிலாக வைத்திருப்பவரா என தெரியவில்லை.நான் முழு நேரமும் ஜோதிட தொழில் செய்கிறேன்.கற்பு என்பது ஒழுக்கத்தான் குறிக்கும் ..என நான் நினைக்கிறேன்.இது ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ ஒழுக்கமின்றி பலருடன் இணைதல் கற்பில்லாத நிலை.அதாவது கற்பு என்றால் போற்றி பாதுகாத்தல்.என பொருள்படும் என நினைக்கிறேன்.இது பற்றி ஜோதிடம் லக்கினத்தில் இருந்து 4 ஆம் பாவம் கொண்டு அறியலாம் என சொல்கிறது...ஜோதிட புக்கை படித்து வாந்தி எடுப்பதல்ல..நேரில பல ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பார்த்த ஜோதிடருக்கு இது முற்றாக தெரியும். கற்பு பத்தி ஒவ்வொரு பெண்ணிடமும் விளக்கம் எந்த ஜோதிடரும் சொல்வதில்லை.அது தேவையும் படாது....காரணம் நாகரீகம்தான்.ஆனால் கற்புக்கரசி போல நாடகம் ஆடும் பெண்களையும்,திமிர் பிடித்த பெண்களையும் முகத்திற்கு நேராக சொல்லிவிட முடியும்.சொல்லியும் இருக்கிறார்கள்..இது பற்றி பல அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களிடம் கலந்தாய்வு செய்து முடிவுக்கு வாருங்கள்...அவசரப்பட்டு எழுத வேண்டாம்..இது உங்கள் சந்தேகம் தீர மட்டுமே....

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

இந்த வார ராணி இதழில் நடிகர் ராஜேஷ் எழுதும் ஜோதிட தொடரை படித்து பாருங்கள்.கணவனுக்கு தெரியாமல் அடுத்த வீட்டுக்காரனிடம் பிள்ளை பெற்றுக்கொண்ட பெண்ணை ,முகத்திற்கு நேராக உண்மையை சொன்ன ஜோதிடர் பற்றி ஆதாரபூர்வமாக வந்துள்ளது.ராணி இதழுக்கு ஃபோன் செய்தால் நடிகர் ராஜேஷ் நம்பர் தருவர்.அவரிடம் கற்பு பற்றி சொல்ல முடியுமா என கேட்டால் தெளிவாக சொல்வார்.

தமிழ் அமுதன் said...

சதீஷ் குமார்..! இவ்வளவு நீண்ட விளக்கம் தேவையில்லை..!

சோதிடம் முழுக்க பொய் என நான் சொல்லவில்லை..! அதே சமயம்
ஒரு பெண்ணின் நடத்தையை ஜாதகம் வைத்து கணிப்பது தவறு..!

இதுதான் என் வாதம்..!

மேலும் உங்களுடன் தர்க்கம் செய்ய எனக்கு நேரமில்லை..!
உங்களுக்கும் வேலை இருக்கும்
அதை கவனியுங்கள்..! நன்றி..!

தமிழரசி said...

//
நாம் ஜாதகம் கணித்து சொல்வது மிருகங்களுக்கு அல்ல ..! சிந்திக்கும் ஆற்றல் கொண்டு செயல்படும் மனிதர்களுக்கு ..! ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவன் எப்போதும் ஜோக்கடித்துகொண்டோ சிரித்து கொண்டோ இருக்க மாட்டான் அவனுக்கு இடம் பொருள் ஏவல் தெரியும் .! அதோடு ஜாதகத்தில் ஒருவன் நகைச்சுவை உணர்வு மிக்கவனாக காணப்பட்டால் சராசரியைவிட சற்று கூடுதல் உணர்வுடன் இருப்பான் அவ்வளவுதான் ..!

அதே போல ஒரு பேச்சாளன் என்றால் அவனுக்குண்டான இடத்திலேயே அவன் தனது பேச்சாற்றலை காட்டுவான் .


அதிக காதல் உணர்வு கொண்டவனும் அப்படித்தான் ..!

அதிக காம உணர்வு ஒருவருக்கு ஜாதகப்படி இருந்தால் அவர் அதில் ஈடுபடும் போது அதிக ஆர்வம் காட்டுவார் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும்
அது அவர் தனிப்பட்ட ரகசியம் ..!//

well said thamizh..

தமிழரசி said...

//இரவு நேரத்தில் பேருந்தில் செல்கிறோம் சிறுநீர் முட்டி கொண்டு வருகிறது பேருந்து இன்னும் சில மணிநேரத்திற்க்கு பிறகுதான் நிற்க்கும் நாம் என்ன செய்கிறோம் அங்கேயே சிறுநீர் கழித்துவிட நாம் என்ன மிருகமா..? பொறுத்து கொள்வதில்லை..? அதுபோலதான் நம் உணர்வுகளை புத்தியால் கட்டி நெறிபடுத்தப்பட்ட ஒரு நாகரீக உலகில் வாழ்ந்துகொண்டு இருகின்றோம்.//

நாகரீக உலகில் வாழ்வதால் தான் சில அநாகரீமான கருத்துக்களை கேட்டும் பொருட்படுத்தாது சென்றுக் கொண்டுஇருக்கிறோம்..

தமிழரசி said...

//.கணவனுக்கு தெரியாமல் அடுத்த வீட்டுக்காரனிடம் பிள்ளை பெற்றுக்கொண்ட பெண்ணை ,முகத்திற்கு நேராக உண்மையை சொன்ன ஜோதிடர் பற்றி ஆதாரபூர்வமாக வந்துள்ளது.ராணி இதழுக்கு ஃபோன் செய்தால் நடிகர் ராஜேஷ் நம்பர் தருவர்.அவரிடம் கற்பு பற்றி சொல்ல முடியுமா என கேட்டால் தெளிவாக சொல்வார்.//

இத்தனை பேருக்கு தெரிந்து இருக்கு கணவனுக்கு மட்டும் தெரியலை...சரிங்க நான் அந்த கணவரின் போன் நம்பர் தான் வாங்கப்போறேன்..ஒஹ் கற்பு பற்றி நடிகர் ராஜேஷ் சொல்கிறாரா? ஏங்க நீங்க சொல்வதை நிறுத்திட்டீங்களா?

தமிழரசி said...

// மந்திரம் கால் மதி முக்கால்..!//

தமிழ் இதை முதல் வரியா போடுங்க..

இரசிகை said...

nalla pathivu...

மு.சரவணக்குமார் said...

நல்ல அலசல்....

மந்திரம் கால் என்பது உண்மைதான். மதி முக்கால் என்பதும் உண்மைதான். அந்த முக்கால் மதியை எத்தனை சமயோசிதமாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் தீர்வுகள் அடங்கி இருக்கின்றன.

பெரும்பாலும் இந்த முக்கால் மதியின் பிழையின் பழி கால்வாசி மந்திரத்தின் மீது விழுந்து விடுகிறது.

Joe said...

கற்பென்பதை ஆணுக்கும், பெண்ணுக்கும்
பொதுவில் வைப்போம், என்றான் பாரதி.
நூறு வருஷத்துக்கப்புறமும் நம்மாளுங்க இன்னும் ஏன் பொம்பளைங்களையே மட்டம் தட்டிட்டு இருக்காங்க?-ன்னு புரியல.

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி