எனக்கு பிடித்த பத்து படங்கள்

சிவாஜி கணேசன் --பாபு

வண்டிக்காரன் வேடத்தில் அருமையான நடிப்பை சிவாஜி வெளிபடுத்திய படம் இது. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடல் காலத்தால் அழியாதது.




....

எம்ஜியார் --உலகம் சுற்றும் வாலிபன்

இப்போது கூட இதுபோல படம் எடுப்பது கடினம் எம்ஜியார் இயக்கியது ..!





..


கமல் ஹாசன் -- குணா

மாய்ந்து மாய்ந்து பார்த்தபடம் பின்னணி இசையும், படமும் ...! விவரிக்க வார்த்தைகளே இல்லை...!





..

ரஜினி காந்த் -- முள்ளும் மலரும்

இந்த படத்தில்தான் ரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் ..!







..
கன்னத்தில் முத்தமிட்டால்

மணி ரத்னம்...! மணி ரத்னம் தான் ...!





..
சத்ய ராஜ் -- கடலோர கவிதைகள்

பாரதிராஜா செதுக்கிய சிற்பங்களில் அழகான ஒன்று








...
கார்த்திக் -- கோகுலத்தில் சீதை

படத்தின் கருத்தும்...! கார்த்திக் நடிப்பும் அசத்தல்..!





...

பிரபு -- மனசுக்குள் மத்தாப்பு


பிரபு நடித்த படங்களிலேயே இதுதான் சிறந்ததாக கருதுகிறேன்..!






..

பாரதி


என்ன சொல்ல...? இந்த படம் நம் அதிஷ்டம் ..!






..

இதயத்தை திருடாதே

ஐயோ ..! அந்த காதலும் ,அந்த பெண்ணும், பாடல்களும் ,பின்னணி இசையும் வசனமும் அந்த குளிர்ச்சியும் ..அடடா ...!




..


இது தொடர் பதிவு ஆமா ...!!!

நான் தொடர அழைப்பது

டவுசர் பாண்டி

மங்கை மேடம்
>

யட்சியும்,விரலியும் நானும் குவாட்டரும் ..!

யட்சி விரலி பத்தி ஆதி பதிவ படிச்சதும் ஒரே குழப்பம் யட்சி விரலி பத்தி கேள்விபட்டதே இல்ல ஆனா கேட்ட மாதிரியும் இருக்கு.. ! அப்புறம் ஜெயந்தி ஒருபதிவு போடுறாங்க அதே போல ..! இன்னும் குழப்பம் இதுக்கெல்லாம் காரணம் செல்வேந்திரன் பதிவுதான்..! அவர் யட்சிய மெதுவா வலைக்குள்ள விட்டு வேடிக்கை பார்க்க ...!;) கடசியா எங்க குருதான் யட்சி பத்தி நல்லா விளக்கம் குடுத்தாரு..! ஒரு வழியா நிம்மதி ஆச்சு. சரி நாமளும் யட்சி ,விரலி பத்தி ஒரு பதிவு போட்டுடலாம்னு இந்த பதிவு ...!


வீட்டுக்கு கிளம்பிட்டேன் போற வழில ஒரு குவாட்டரும் வாங்கிட்டு போறேன் ..!


வீட்டுக்கு
போய் பாட்டில தொறந்தா மூடியும் சேர்ந்து சுத்துது. பாட்டில தொரக்கும்போது மூடியும் சேர்ந்து சுத்துனா வர்ற எரிச்சல் இருக்கே..!! மண்டைல ஒரு தட்டு தட்டி தொறந்தா க்கர்ர்ட்டு ன்னு ஒரு சத்ததோட ஓபன் ஆச்சு...! ஓபன் ஆகும்போது எதோ ஒன்னு உள்ள இருந்து வெளில போனாமாதிரி ஒரு பீல்..! மன பிராந்தியா இருக்கும் ..!

கிளாஸ தேடி சரக்க ஊத்தபோனா கிளாசுக்கு பக்கத்துல ஒரு உருவம் ..! யாருன்னு கேட்டா ? நாந்தான் விரலி அப்படிங்குது..!
ஆஹா ..!
என்ன பண்ணுறது ஒன்னும் புரியலையே ..! சரி எங்க இருந்து வந்தே ??

விரலி சொல்லுது ...

ஒருவாட்டி ஒரு காலி குவாட்டர் பாட்டிலில ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தேன் என்னை கவனிக்காம சரக்க ஊத்தி மூடிட்டானுங்க இப்போ உன்னாலத்தான் வெளில வந்தேன்..! சரி நீ சரக்க அடி நான் சும்மா வேடிக்கை பார்க்குறேன் .

சரக்குதான் வாங்கியாந்தேன் சைடு டிஷ் வாங்க மறந்துட்டேன்..!

போய் அடுப்படில எதாச்சும் இருக்கும் எடுத்துகிட்டு வான்னு விரலி சொல்லுது .!

முறைச்சுகிட்டு இருக்குற தங்கமணிய தாண்டி அடுப்படிக்கு போனா அங்க ஒண்ணுமில்ல...! ஊறுகா பானை மட்டும் தான் கண்ணுல பட்டுச்சு பானைகுள்ள கைய விட்டு கொஞ்சம் அடை மாங்கா ஊறுகா எடுத்துகிட்டேன் .

ஊறுகாய் கீழ வைச்சுட்டு சரக்க ஊத்த போரேன் பார்த்தா இப்போ இங்க இன்னொரு உருவம் ...!

ஐயோ நீயாரு...! பதறிபோய் கேக்குறேன் ...!

நாந்தான் யட்சி

யட்சியா ? நீ எப்படி வந்தே ?

ம்ம்ம் எல்லாம் ஊறுகா பானைக்குள்ள இருந்துதான் நான் கூட வாறது கூட தெரியாம வர்றே தண்ணி அடிக்க அவ்ளோ அவசரமா ?

இல்ல கவனிக்கல.!

யட்சியும் ,விரலியும் பக்கத்துல வைச்சுகிட்டு சரக்க அடிக்கணும் ஏதும் சிக்கல் வருமோ ?

மெதுவா விரலிகிட்ட பேச்சு கொடுக்குறேன் விரலி ஒனக்கு கோவம் ரொம்ப வருமாமே ?

ஆமா கோவம் வரும் நான் யட்சி போல கிடையாது...!

இத கேட்டு யட்சிக்கு ஈகோ பிராப்ளம் வந்துட்டு .!

என்ன ..? என்ன ..? உனக்கு தான் கோவம் வருமா ? எனக்கும் வரும் பாக்குறியா ?

இத விரலி கண்டுக்கவே இல்ல ..!

யட்சி இன்னும் கடுப்பாயிடுச்சு என் பக்கம் திரும்பி டேய் ..! எனக்கும் சரக்க ஊத்துடா நானும் கோவக்காரித்தான்.

யட்சிக்கு கொஞ்சம் ஊத்தி கொடுத்துட்டு நானும் கொஞ்சம் போட்டுகிறேன்..!

இப்போ யட்சி சவுண்டு விடுது .!

பொறுத்து பார்த்த விரலி தங்க முடியாம என் பக்கம் திரும்பி


டேய் போய் எனக்கும் ஒரு குவாட்டர் வாங்கிட்டு வாடா ..!


ஐயோ வேணாம் விரலி ..!


அவளுக்கு மட்டும் ஊத்தி கொடுக்குறே போடா எனக்கும் வாங்கிட்டு வா வரும்போது மறக்காம சைடு டிஷ் வாங்கிட்டு வந்துடு...!




ஓடிப்போய் ஒரு குவாட்டர் வாங்கிட்டு வரேன்..! மீதி இருந்த சரக்கெல்லாம் யட்சி அடிச்சுட்டு தள்ளாடிட்டு இருக்கு ..! இப்போ விரலி எனக்கு கொஞ்சம் ஊத்தி கொடுத்துட்டு அதும் நல்லா ஏத்திக்குது . ரெண்டுக்கும் செம வாக்குவாதம் நானும் குறுக்க குறுக்க பேசி சமாதான படுத்தி பார்க்குறேன் முடியல ...!

கதவ மெல்ல தொறந்து சிங்க மணி என்னங்க குடிச்சுட்டு தனியா
புலம்புறீங்களா...?

இல்ல இல்ல நீ போ..!

சிங்க மணிய பார்த்த யட்சியும் ,விரலியும் கப் சிப்னு ஆயிடுறாங்க எனக்கு லேசா பெருமை காலர தூக்கி விட்டுக்கிறேன்..!

இத விரலி கவனிச்சுட்டு ..!

என்னடா ..? உன்பொண்டாட்டிய பார்த்து பயந்துட்டேன்னு நெனைச்சியா கூப்புடுடா அவளை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்.

இப்போ யட்சி சொல்லுது இதான் உனக்கும் எனக்கும் வித்தியாசம் வம்பு பண்ணுற புத்தி உனக்குத்தான் எனக்கு அந்த எண்ணம் வரல பாரு ..?

விரலியும் யோசிக்குது ...! நேரம் ஆக ஆக எல்லோரும் டயர்டு ஆயிடுறோம்

யட்சி மெதுவா ஊறுகா பானைக்கு போய்டுது . விரலி ஒரு காலி பாட்டில்ல படுத்துக்குது பாட்டிலில இருந்த படியே சொல்லுது .

அடுத்தவாட்டி தண்ணி அடிக்கும்போது மறக்காம எங்க ரெண்டுபேரையும் கூப்பிடு...!

அய்யோ இது வேறயா ??? கொஞ்ச நேரத்துல நானும் தூங்கிடுறேன்..!
>

ராஜ ராஜ சோழன் கல்லறை -ஒரு ரிப்போர்ட் (படங்களுடன்)

ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் ஊருக்கு செல்வேன் இந்த தடவை ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கும் போது நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு.அதாவது கும்பகோணத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் ராஜராஜ சோழன் கல்லறை இருப்பதாகவும் அதை ஒரு பெரியவர் பராமரித்து வருவதாகவும் அதை அவசியம் பார்க்கவேண்டும் என்று சொல்ல அப்போதே ஆர்வம் தொற்றி கொண்டது...!

எனக்கு அதுபுதிய தகவல்..!





சரி..! இந்த தடவை ஊருக்கு போகும்போது அவசியம் போய் பார்த்து அதை பதிவெழுத முடிவு செய்தாகிவிட்டது . எங்கள் ருக்கு கும்பகோணம் வழியேதான் செல்ல வேண்டும் ஊருக்கு போய்விட்டு திரும்ப கும்பகோணம் வரவேண்டுமெனில் அறுபது கிலோ மீட்டர் வரவேண்டும். எனக்கு அதுவரை பொறுமை இல்லை காலையில் கும்பகோணத்தில் றங்கியவுடன் குளிக்க கூட இல்லாமல் ஒரு ஆட்டோ பிடித்து அந்த இடம் நோக்கி புறப்பட்டுவிட்டேன் ஒரு நல்ல விவரமான ஆட்டோக்காரர் கிடைத்தார்.


உடையாளூர்



இந்த உடையாளூர் என்ற ஊரில்தான் அந்த நினைவிடம் இருக்கிறது .
கும்பகோணம் மகாமக குளம் தண்டி ஆட்டோ செல்கிறது. இதுபோன்ற ஒரு இடத்திற்கு நான் தனியே சென்றதில்லை மனதில் ஒரு இனம்புரியாத உணர்வு.



பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து முன் பிறவியில் ஒரு சோழமன்னர் என்ற நினைப்பு வேறு எனக்கு..! குறைந்த பட்சம் ஒரு சோழ படைவீரனாக இருந்திருப்பேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை..!




உடையாளூர் நெருங்க நெருங்க ஒரு அவசரம் ,ஆர்வம் எல்லாம் தொற்றிகொள்கிறது அந்த இடத்தை பற்றிய ஒருமாதிரியான கற்பனையுடன் செல்கிறேன்.



தனது கட்டிட கலையால் உலகையே திரும்பிபார்க்கவைத்த ஒரு மாமன்னனின் கல்லறையாக சொல்லப்படும் இடம் இதுதான்.!



மிகவும் சாதாரணமாக ஒரு சிறிய ஓலை கொட்டகையில் இருக்கிறது இந்த நினைவிடம் ...!


இந்த நினைவிடத்தை பராமரித்து வரும் பெரியவர்







பக்கிரி சாமி என்ற இந்த பெரியவர்தான் இந்த நினைவிடத்திற்கு பூஜை செய்து பராமரித்து வருகிறார் இந்த பெரியவர் சொன்ன சில முக்கிய தகவல்கள் ...!



இந்த இடம்தான் ராஜராஜனின் நினைவிடம் என்று ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது ..!

இந்த இடத்தில் முன்னர் ஒரு கோவில் இருந்ததாகவும் 1960 ஆம் வருடம் ஏற்பட்ட மிக பெரிய வெள்ளபெருக்கில் கோயில் புதையுண்டதாக சொன்னார்..!

இந்த இடத்தை பற்றி முதலில் கேள்விப்பட்டு வந்த அதிகாரிகள் ஒரு அமைச்சர் ,மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் ஒரு போக் லைன் எந்திரத்தின் மூலம் சுமார் ஒரு பதினைந்து அடி ஆழம் தோண்டி பார்த்தார்களாம் உள்ளே ஒரு கட்டிடம் போன்று இருந்து இருக்கிறது . இந்த இடத்தை தோண்டிய அதேவேளையில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் திருவாரூரில் வெட்டி கொலை செய்ய படுகிறார் உடனே இந்த இடத்தை தோண்டிய அதிகாரிகள் அப சகுனமாக கருதி அந்த இடத்தை மூடி சென்று விட்டதாக அந்த பெரியவர் சொன்னார் . தஞ்சை பெரிய கோயிலுக்குள் ஆட்சியில் இருபவர்கள் சென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்ற ஒரு தகவல் உள்ளது சில சம்பவங்கள் அப்படி நடந்தும் உள்ளது இந்த காரணத்தால் இந்த இடத்தை தோண்டியவர்கள் கொலை சம்பவத்தை அப சகுனமாக நினைத்திருக்கலாம்..!

பல முக்கியஸ்தர்கள் இந்த இடத்திற்கு வந்து சென்று உள்ளனர் சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் சீமான் வந்து போனாராம்..!

இங்கே ஒரு குறிப்பேடு வைத்து உள்ளனர் இங்கே வந்த பலர் தங்கள் கருத்துகளை இதில் எழுதி வைத்து உள்ளனர் ...!

மேலும் இந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்ட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக சொன்னார் இந்த பெரியவர்..!


பிற் சேர்க்கை;- இந்த பதிவுக்கு கருத்து தெரிவித்த நண்பர்கள் ஆதாரம் ஏதும் இல்லாமல் இருப்பதாகவும் ஆதாரத்துடன் பதித்து இருக்கலாம் என சொல்லி இருந்தனர் . இந்தபதிவை பொறுத்தவரை என் பயண அனுபவத்தையும், தேடலையுமே பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான். மேலும் தகவலுக்காக வலையில் தேடியபோது ஒரு நண்பரின் பதிவு சிக்கியது அதில் ராஜராஜ சோழன் கல்லறை பற்றிய சில ஆதார தகவல்கள் உள்ளன. அந்த நண்பருக்கு நன்றி ..!


http://heilderfuhrer.blogspot.com/2008/11/blog-post.html





.



>