பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

பங்குச்சந்தை வணிகத்தில் எங்கள் பாதையை மாற்றிய எங்கள் குரு ,எங்கள் ஆசான், திரு எம்.சரவணக்குமார் அவர்கள் 04-07-2010 இல் பிறந்த நாள் காண்கிறார் அவரும் அவர் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லா வகையான மகிழ்ச்சியினையும் பெற்று நோய் நொடி எதுவுமின்றி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் ...!
இல்லறம் இனித்து உவந்த நேரம்..!
இதயம் உவக்க ஈன்றனள் நின் தாய் ..!
ஏற்ற இறக்கம் இல்லா நிலையான நின் குணம்,
ஊருக்கு நீர் செய்யும் நற்பணிகள்,
நின்னை உயர்ந்தோன்
எனக்காட்டும் உவமைகளாம் ..!

பங்கு சந்தையில் நின் தமிழ்ப்பணி ..!
மேலும் பலர் பணியாற்றி செழிக்க செய்தீர் ..!
நட்பு கொண்டோர்க்கும் நல்வழியே காட்டி,
ஈன்றோர்க்கும், சான்றோர்க்கும்
இனியவராய் வாழ்கின்றீர் ..!

இனிய குணம் கொண்டவரே.!
இனிய பிறந்தநாள் இதுபோல நூறு காண
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..!

-கவிதைக்கு நன்றி ''எழுத்தோசை'' தமிழரசி

>