பதிவர் சந்திப்பு

 

ம்ம பாசக்கார ஜமால் சென்னை வந்து பல நாள் ஆயிடுச்சு சந்திக்குற வாய்ப்பு தள்ளிகிட்டே போக ..!ரெண்டுநாள் முன்னாடி ஜமால் நம்பர்ல இருந்து போன்...!   ஆனா பேசுனது ஜமால் இல்ல பேசுனது நம்ப மூளைக்காரன் பிரியமுடன் வசந்த் ..!
சென்னை வந்து இருப்பதாக சொல்ல      மூணு பேரும் ஒரு பதிவர் சந்திப்பு நடத்திடலாம்னு முடிவு பண்ணிட்டோம் அதன்படி பதிவர் சந்திப்பு இன்னிக்கு சென்னை பெரம்பூர்ல இனிதே நடை பெற்றது ..!

 ஜமால் 

எப்போதும் சிரிப்பு மாறாத முகம் நெறைய தடவை போன் ல மட்டும் பேசி இருக்கேன் இப்போதான் முதல் சந்திப்பு ..!  புதிய மனுசன பார்க்குற    உணர்வு கொஞ்சம் கூட இல்ல பலநாள் பேசி பழகுன ஒரு நண்பனை பார்க்குரதுபோல இருந்தது ...!  கணினி பத்தி நெறைய விஷயங்கள் தெரிஞ்சு வைச்சு இருக்கார் நெறைய சொல்லி கொடுத்தார்...!

 பிரியமுடன் வசந்த் 

பிளாக்ல யாராலும் யூகிக்க முடியாத அளவு சேட்டை பண்ணுற இந்த வசந்த் நேர்ல சாந்தம்னா சாந்தம் . ஒரு அமைதியா அதிர்ந்து பேசாம அழகு புள்ளயா இருந்தாரு பையனுக்கு வீட்டுல பொண்ணு பாக்குறாங்க அதுனால நல்ல புள்ளயா நடக்குறார் போல ;;)) இவர் கூட நான் சாட் பண்ணினது கூட இல்ல வெறும் கமெண்ட்ஸ் மட்டுமே எங்க தொடர்பு ..! இவரையும் புதிய மனுசனா எனக்கு பார்க்க தோணல ..!  முதல் தடவை பார்த்தாலும் ஒரு பழகிய நண்பனை பார்க்கும் உணர்வை வலையுலகம் மட்டுமே கொடுக்கும்.

 நாங்க பல விசயங்கள பத்தி பேசினோம் பதிவர் சங்கம் பத்தி நெறைய விவாதம் பண்ணினோம் , எதிர் கமெண்ட் பத்தி , சில பதிவர்கள் பதிவுலகம் தங்களுக்கே சொந்தம் அப்ப்டிங்குறது போல இருப்பதாக பேசினோம்.சில திரை விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக இருப்பது ,இன்னும் ,இன்னும் பல விஷயங்கள்     பேசி  கல கலப்பாக முடிந்தது இந்த சந்திப்பு .      

 

   

DSC00224  DSC00228

DSC00225

பாட்டிலும் கையுமாக ஜமால் 

DSC00202

அனியாயத்துக்கு அமைதி

DSC00216

சேருக்குள் தொப்பையை மறைக்கும் ஜமால்

 

DSC00205


>